எனக்கு இந்த கணிணி என்பதே இரண்டு மூன்று வருடங்களாகத் தான் பழக்கம். இணையத் தொடர்பால் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். பல மென்பொருட்கள், ஒவ்வொன்றையும் பார்க்கும்போது கற்க ஆசை ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக பல தகவல்களை தேடித்தான் நிறைய கற்றுக் கொண்டேன். பல சிறிய சிறிய விஷயங்கள் கூட செய்ய மென்பொருட்கள் உள்ளன. அப்படிப்பட்ட மென்பொருட்கள் அவற்றின் பயன்பாடுகள் பற்றியே இந்த தொடரில் எழுதப் போகிறேன். இது டுடோடொரியல் பதிவு தொடர் அல்ல. தெரிந்த தெரியாத மென்பொருள்கள் பற்றிய தகவல்களை கொண்ட பதிவுகள் தான்.
முதலில் Ms-Officeஐ பார்ப்போம். கணிணி பற்றிய அறிவு ஒருவருக்கு தெரியும் என்றால் அது இணையத்திற்கு பிறகு டைப் செய்வது குறிப்பாக Ms-Wordல். நிறைய பேர் தன் resumeல் Ms-Office தெரியும் என போட்டிருப்பார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு ms-office முழுமையாக தெரியாது. பல பேருக்கு Ms-officeல் தெரிந்தது Ms-Word, Ms-Excel, Ms-Powerpoint அவ்வளவுதான். சிலபேருக்கு கூடவே Ms-Outlook தெரிந்திருக்கலாம்.
ஆனால் மைக்ரோசாஃப்ட் தன் Ms-officeல் கீழ்கண்ட மென்பொருள்களை உள்ளடக்கியுள்ளது.
* Access
* Excel
* InfoPath
* Outlook
* PowerPoint
* Publisher
* Word
இவை தவிர கீழ்கண்டவையும் Ms-office சார்ந்த மென்பொருட்கள்தான்.
* FrontPage
* Communicator
* Sharepoint Workspace
* Visio
* Project
* Language packs
* OneNote
Ms-Word:
இந்த மென்பொருளை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே கூறலாம். நீங்கள் கணிணிக்கு புதியவரானால் முதலில் பிரவுசிங் செய்ய கற்றுக் கொண்ட பிறகு கற்றுக் கொள்ள வேண்டிய முதல் மென்பொருள் இதுதான். நிறைய பேருக்கு டைப்பிங் ஸ்பீட் வராது. ஆனால் அதெல்லாம் முக்கியமில்லை. உங்களுக்கு முதலில் page setup செய்ய தெரிய வேண்டும். Paper size, margin, header, footer, gutter போன்றவற்றை அமைக்க தெரிய வேண்டும். இந்த விசயங்கள் நம் விருப்பப்படி அமைப்பவை என்பதுதான் என்றாலும் நாம் writting stylesஐ கடைபிடிக்க விரும்பினால் ஒவ்வொரு ஸ்டைலுக்கு மேற்கண்டவற்றில் ஒவ்வொரு விதிகள் உண்டு அதை கடைபிடிக்க வேண்டும். பிறகு நீங்கள் உங்கள் இஷ்டம்போல் டைப் செய்ய வேண்டியது. அதற்கு நிறமளித்தல், எழுத்து அளவு, தடிமன், சாய்வு போன்ற விசயங்களை மாற்றிப் பார்க்கலாம். கட்டங்கள், கோடுகள், வடிவங்கள், textbox போன்றவற்றை முயற்சித்துப் பார்க்கலாம்.Ms-wordன் சிறப்பான விசயங்களில் ஒன்று Word Art. எழுத்துக்களை அழகாக டிசைனில் அமைத்தல். இது நம் கோப்பை மேலும் அழக்காக்குகிறது. border, bullet and numbering, page brake, line brake, zoom, போன்றவற்றையும் format முறைகளையும் முயற்சித்து பார்க்கலாம்.
இந்த மென்பொருளை பெரும்பாலும் பயன்படுத்துவது தகவல்களை சேமிக்கத்தான். Resume, letter, articles, legal documents போன்றவர்றை உருவாக்குகின்ற்னர். இவையெல்லாம், வெறும் .doc, .docx எக்ஸ்டன்சன்களை கொண்ட டாகுமெண்ட்கள் மட்டுமே. ஆனால் Ms-Word மூலம் wordpad-ல் உருவாக்கப்படும் rich text format கோப்புகள் மற்றும், notepad-ல் உருவாக்கப்படும் text கோப்புகளையும் உருவாக்கலாம். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
Microsoftக்கும் Hancom Inc. அப்படிங்கற வடகொரியா கம்பெனிக்கு என்ன லிங்குன்னு தெரியலை. ஆனால் Ms-Wordல் நாம் உருவாக்குகிற டாகுமெண்ட்களை Hangul Word Processor அப்படிங்கிற பார்மெட்ல சேமிக்கலாம். இதுவும் பார்க்க வேர்ட் மாதிரிதான் இருக்கும். Hangul Word Processor என்பது ஒரு வேர்ட் மாதிரியான மென்பொருள்தான் அதன் படத்தை கீழே காணலாம்.
Wordல நாம அழகா ஒரு பக்கம் டிசைன் எல்லாத்தையும் வடிவமைச்சு அதை அப்படியே web pageஆக மாற்றலாம். இதனால் நமக்கு html தெரியனும்னு அவசியமில்ல. நான் இங்கே வேர்ட் மற்றும் html மூலமா உருவாக்கின web pages கொடுத்துள்ளேன், பாருங்க.
HTML-ல் செய்யப்பட்ட web page
Word-ல் செய்யப்பட்ட web page
இந்த முறையில் வெப் பேஜ் உருவாக்கினா நமக்கு நேரம் மிச்சம்தான் அது மட்டுமில்லாம ஃபோண்ட் நீங்க வடிவமைச்சா மாதிரியே அழகா தெரியும். ஆனால் இந்த முறையில் உருவாக்கின வெப் பேஜின் page sourceஐ பார்த்தா குழம்பிவிடுவீர்கள் நிறைய என்னென்னமோ இருக்கும். அதனால் இப்படி வடிவமைச்ச web pageகளை நோட்பேடில் எடிட் செய்வது நல்லதல்ல. வேணும்னா மீண்டும் word-லேயே திறந்து எடிட் செய்யலாம். அப்புறம் இந்த முரையில் உருவாக்கப்படும் வெப் பேஜின் அளவு அதிகமாக இருக்கும். நான் சாம்பிளுக்கு வைத்திருக்கிற வெப் பேஜ்களில் Html-416 bytesதான் ஆனால் Word-24.7 Kb.
வேர்ட் டாகுமெண்ட்களை xml பைலாக மாற்றலாம். Wordஐ powerpoint ஆக மாற்றலாம். (இதைப் பற்றி விவரமா அடுத்த பதிவுல சொல்றேன்). word கோப்பை பிரிண்ட் எடுக்கலாம், ஃபேக்ஸ் பண்ணலாம். மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். நேரடியாக பிளாக்ல போஸ்ட் பண்ணலாம்.
மொத்தத்தில் word இல்லாம கணிப்பொறி இல்லை.
இவ்வளவு எழுதினாலும் ஒன்னுமே சொல்லாத மாதிரியே இருக்கு அதனால்:
இந்தாங்க: MS Office Proofing Tools
இதனால என்ன பயன் என்னங்கிறீங்களா? வேர்ட்ல டைப் பண்ணி Spelling check பண்ணிறீங்கல்ல. தமிழ் அதை பண்ண முடியவில்லையல்லவா. அதற்காகவே இது! இதை இன்ஸ்டால் செய்துவிட்டால் போது. தமிழில் டைப் செய்த பின் அதை ஸ்பெல்லிங் செக் கொடுத்தால் சரியாக காண்பிக்கும். புதிதாக வார்த்தை இருந்தால் Add to Dictionaryஐ கிளிக் செய்து அதில் சேர்த்து விடுங்கள், பிறகு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதலாம். word, powerpoint, excel என எல்லா MS-OFFICE அப்ளிகேஷன்லையும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்த பயன்படுத்த கொஞ்ச நாளில் இது இல்லாமலேயே உங்கள் ஸ்பெல்லிங் மிஸ்டேக் தானாக குறைந்து விடும்.
டவுன்லோட் லிங்க் டோரண்டில்:
MS Office Proofing Tools 2003 (625 MB)
2007 வெர்சன் கிடைக்கல(தமிழுக்கு). இதுவே போதும் புதிய வார்த்தைகளை நீங்களே சேர்க்கலாமே. கொஞ்சம் அளவு அதிகம். ஏன்னா Arabic, Basque, Bulgarian, Catalan, Chinese (Simplified), Chinese (Traditional), Croatian, Czech, Danish, Dutch, English, Estonian, Finnish, French, Gaelic, Galician, German, Greek, Gujarati, Hebrew, Hindi, Hungarian, Icelandic, Indonesian, Italian, Japanese, Kannada, Korean, Latvian, Lithuanian, Marathi, Norwegian, Polish, Portuguese (Brazil), Portuguese (Portugal), Punjabi, Romanian, Russian, Serbian, Slovak, Slovenian, Spanish, Swedish, Tamil, Telugu, Thai, Turkish, Ukranian, Vietnamese, and Welsh. இவ்வளவு மொழிக்கான spell checker இருக்கு.
பதிவு எப்படின்னு நீங்கதான் சொல்லனும்.
-தொடரும்....
கலக்கறீங்க தல. :)
ReplyDeleteஎனக்கு ஃப்ரூஃபிங் டூல்ஸ் பத்தி தெரியாது. ஃபயர்ஃபாக்ஸிற்கு இது மாறி ஒரு ஆட்-ஆன் இருக்கறதா கேள்விப்பட்டேனே?
நான் அடிக்கிற தமிழுக்கு இது ஒத்து வராதுன்னு நினைக்கிறேன். சுத்தத் தமிழ்ல அடிக்கறவங்களுக்கு உபயோகப்படலாம்.
ப்ரூபிங் டூல்ஸ்-க்கு மிக்க நன்றி... பதிவும் சூப்பர்
ReplyDelete//ஹாலிவுட் பாலா said... //
ReplyDeleteநன்றிங்க பாலா!
//ஃபயர்ஃபாக்ஸிற்கு இது மாறி ஒரு ஆட்-ஆன் இருக்கறதா கேள்விப்பட்டேனே?//
ஆமா சார் இருக்கு இதோ லிங்க் (இது சாதாரண தமிழுக்கு இலங்கை தமிழுக்கு தனியா ஆட்-ஆன் இருக்கு. நீங்க ஆன்லைன்ல ஒரு வார்த்தையை செலக்ட் பண்ணி ரைட்கிளிக் செஞ்சா ஆப்சன்ஸ் காண்பிக்கும் நீங்க தேர்ந்தெடுத்துக்கலாம்.
//நான் அடிக்கிற தமிழுக்கு இது ஒத்து வராதுன்னு நினைக்கிறேன். சுத்தத் தமிழ்ல அடிக்கறவங்களுக்கு உபயோகப்படலாம். //
அப்படியெல்லாம் இல்லை சார்! நீங்க உங்கள் வார்த்தை டைப் செஞ்ச பிறகு அதை Add to Dictionaryயில் கொடுத்திட்டீங்கன்னா போதும். உங்க வார்த்தையும் சரியா இல்லைன்னா ஸ்பெல் செக்கர் காண்பிக்கும்!
//Abarajithan said... //
ReplyDeleteரொம்ப நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்!
பாஸ்..ஏன் இந்த கொல வெறி? இன்னொரு தடவ சார்னு கூப்பிட்டீங்கன்னா வீடு தேடி வந்து சுறா,வில்லு மாதிரி படங்களா போட்டு பார்க்கச்சொல்லி அடம்பிடிப்பேன் ஆமா..நாலு கெட்ட வார்த்தையில கூட திட்டீருங்க, இனி சார்ன்னு சொல்லாதீங்க.
ReplyDeleteஅப்பறம் பதிவுக்கு நல்ல துவக்கம். வரும் பதிவுகள்ல நல்ல வேகம் பிடிக்க வாழ்த்துக்கள்.
(Openoffice மாதிரி ஓப்பன் சோர்ஸ்களையும் அப்பப்ப குறிப்பிடுங்க. இன்னும் நல்லாயிருக்கும்) இன்ட்லி, தமிழ்10 எல்லாத்திலேயும் சேர்த்தீங்கன்னா நிறைய பேருக்கு பயன்படும். கொஞ்சம் யோசிங்க
//கொழந்த said... //
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
//இன்ட்லி, தமிழ்10 எல்லாத்திலேயும் சேர்த்தீங்கன்னா நிறைய பேருக்கு பயன்படும்.//
அதுல எல்லாம் இணைச்சிட்டேங்க. இண்ட்லில ரெகுலரா பதிவை இணைச்சிகிட்டுதான் இருக்கேன். ஓட்டுப் பெட்டி வைக்கதான் புடிக்கலை. அது பிளாக் அழகை கெடுக்குது. இந்த பிளாக்கை பற்றி தெரிஞ்வங்க வாரத்துக்கு ஒரு தடவையோ மாசத்துக்கு ஒருதடவையோ இங்க வந்து பார்ப்பாங்கல்ல. அப்ப இந்த பதிவுகளில் ஏதாவது ஒன்றாவது அவங்களுக்கு பயன்பட்டுச்சுன்னா அது போதும் எனக்கு!
கலக்கல் பதிவு நண்பா,மிகவும் பயனுள்ள ஒன்று.
ReplyDeleteஆனால் நான் வேர்ட் பேடில் தான் தமிழில் எழுதி அதை தான் பிளாக்கில் போடுவேன்,ஏன் என்றால் வேர்ட் ஓபன் ஆக நேரம் எடுக்கிறது பல சமயம்.
தவிர ஆல்ட்+2 போட்டு தமிழில் அடித்தால் பெட்டி பெட்டியாக வருது,நான் உபயோகிப்பது வேர்ட்2003
======
தவிர நீங்கள் பாலாவுக்கு கொடுத்த ஃபாண்ட்களை தரவிறக்கிவிட்டேன்.விண்டோஸ் ஃபாண்ட்ஸ்ல் சேர்த்துவிட்டேன்.
இனி என்ன் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்.
nhm ரைட்டரில் செட்டின்க்ஸ் தான் புரியவில்லை.
என்ன செய்தால் போட்டோஷாப்பில் தமிழ் வரும் என்று சொல்லுங்கள்.
நண்பா,
ReplyDeleteஇன்னொரு விஷயம்
அந்த பிக்ஸார் ஸ்டோரி swf ஃபைலை தரவிறக்கிவிடேன்.
அதை பிக்சர் விட்ஜெட்டில் அப்லோட் செய்தேன் ஆகலை.அதை எந்த விட்ஜெட்டில் இணைக்கவேண்டும்?
ஹெடிஎமெல் விட்ஜெட்டா?அதற்கு கோட் உண்டா?
//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said... //
ReplyDeleteநண்பரே தாங்கள் கேட்ட விவரங்கள் அனைத்தையும் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் பார்க்கவும். நன்றி!
உங்களின் கருத்து மிகவும் உபயோகமாக இருந்தது. மேலும் கணினி பயன்படுத்துவோருக்கு உங்களின் தொகுப்பு மிக பயனை கொடுக்கும் என்பது என்னுடைய கருத்து. மேலும் இந்த மாதிரியான தொகுப்புகளை நீங்கள் நிறைய வெளியிட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
ReplyDeleteஜாதகம் மற்றும் எதிர் காலம் பற்றிய ஒரு புதிய மென்பொருள் வந்துள்ளது, அதனை வாங்கி நான் பெரிதும் பயனடைந்தேன். நீங்களும் அதன் மூலம் பயனடைய வேண்டுகிறேன். அதற்கான இணையத்தையும் உங்களுக்கு வழங்கி உள்ளேன். www.yourastrology.co.in
//sridharan said... //
ReplyDeleteதங்கல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!
எங்களுக்காக நேரம் ஒதுக்கி பல பயனுள்ள பதிவுகளை தருவதற்கும் மனம்மார்ந்த நன்றிகள் நண்பரே.
ReplyDeleteதாமதமான பின்னுட்டத்திற்கு மன்னிக்கவும். தாமதமானாலும் உங்கள் பதிவுகளை படிக்க தவறமாட்டேன் நன்றி.
//Thomas Ruban said... //
ReplyDeleteஇதில் மன்னிப்பெல்லாம் எதற்கு ஒரு நூலகம் மாதிரி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில், கிடைக்கும் கால அளவில் இந்த பிளாக் பயன்படுமானால் அது போதும்.
பாஸ்..ஏன் இந்த கொல வெறி? இன்னொரு தடவ சார்னு கூப்பிட்டீங்கன்னா வீடு தேடி வந்து சுறா,வில்லு மாதிரி படங்களா போட்டு பார்க்கச்சொல்லி அடம்பிடிப்பேன் ஆமா..நாலு கெட்ட வார்த்தையில கூட திட்டீருங்க, இனி சார்ன்னு சொல்லாதீங்க.
ReplyDeleteகொழந்த சூப்பரூ
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தவம் போலவே எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
நண்பரிடம் பேசிக் கொண்டுருந்த போது எம் எஸ் வேர்ட் 2007 குறித்து பேசினார். புத்தகத்திற்காக shared doucments இருவரும் பகிர்ந்து கொள்ள பேச்சு வந்த போது உங்களின் இந்த இணைப்பை எனக்கு அனுப்பினார்.
இதன் குறித்து உங்கள் உதவி தேவை மின் அஞ்சல் அனுப்பி உள்ளேன் நண்பா.
அதுல எல்லாம் இணைச்சிட்டேங்க. இண்ட்லில ரெகுலரா பதிவை இணைச்சிகிட்டுதான் இருக்கேன். ஓட்டுப் பெட்டி வைக்கதான் புடிக்கலை. அது பிளாக் அழகை கெடுக்குது. இந்த பிளாக்கை பற்றி தெரிஞ்வங்க வாரத்துக்கு ஒரு தடவையோ மாசத்துக்கு ஒருதடவையோ இங்க வந்து பார்ப்பாங்கல்ல. அப்ப இந்த பதிவுகளில் ஏதாவது ஒன்றாவது அவங்களுக்கு பயன்பட்டுச்சுன்னா அது போதும் எனக்கு!
ReplyDeleteமுதிர்ந்த ஞானம்.
வணக்கம்
ReplyDeleteநமக்கு வரும் mail சில docx formatல்வருவதை antroid phone ல் open செய்தால் கட்டம் கட்டமாக வருகிறது....இதை எப்படி படிப்பது என்று சொல்லுங்கள் சார்