Wednesday, August 18, 2010

அடோப் ஃபிளாஷ் (61) - மவுஸ் மூலம் zoom in/zoom out effect

Flash File (ActionScript 2.0)ஐ திறந்து கொள்ளவும்.

முதலில் படம் அல்லது எழுத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.


அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Nameல் image_mc என கொடுக்கவும்.



புதிய லேயரை உருவாக்கி Actions என பெயரிடவும். அதன் முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து என்பதை கிளிக் செய்யவும். வரும் பெட்டியில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

var mouseListener:Object = new Object();
mouseListener.onMouseWheel = function(delta) {

image_mc._xscale += delta;
image_mc._yscale += delta;

}
Mouse.addListener(mouseListener);
மவுஸ் நகரும்போது படம் கூடவே வருவதற்கு கீழ்காணும் ஸ்கிரிப்டை மேலே உள்ளதுடன் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
mouseListener.onMouseMove = function() {
image_mc._x = _xmouse;
image_mc._y = _ymouse;
};
ஹைலைட் செய்துள்ள இடங்களில் படத்தின் Instance Name வரவேண்டும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:




4 comments: