உளவியல் ரீதியாக: ஒவ்வொருவரிடமும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி. இது நல்ல எண்ணம் ஒரு வரம்பு வரை. நம் சிறுவயதில் சில விஷயங்களுக்காக நாம் பந்தயம் கட்டுவோம். பணம், பொருள் அல்லது ஏதாவது ஒரு செயலின் மீது பந்தயம் கட்டுவோம். அது சிறு வயதில் ஒரு விளையாட்டு. வளர்ந்த பிறகும் இந்த பழக்கம் சில சமயங்களில் தலைகாட்டும். நீங்கள் சிலரை பார்த்திருக்கலாம். எதற்கெடுத்தாலும் ”என்ன பெட்?” என கேட்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் அந்த பந்தயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஒரு கடும் உறுதியோடு இருப்பார்கள். இது சிலசமயத்தில் விபரீதத்தில் முடியலாம்.
சில விஷேசங்களில் உறவினர்கள் பந்தயம் வைத்து விளையாடுவது உண்டு. அவர்களை பொறுத்தவரை இது ஒரு சம்பிரதாயம் போன்றது. வெளிநாடுகளில் இன்னும் பல விளையாட்டுகள் உண்டு. இந்த விஷயங்களை தாண்டி சூதாடும் பழக்கம் மிக கொடிய ஒன்று. சூதாடுபவர்கள் தோற்ற பிறகும் அவர்களுக்கு தான் மீண்டும் வெல்ல வேண்டும் என தோன்றி மீண்டும் விளையாடுவார். இப்படியே அவர்களிடம் உள்ள கடைசி பணம் வரை விளையாடுவார்கள். இந்த சூதாட்டத்தால் வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களையும் விற்று விளையாடியவர்கள் உண்டு.
சீட்டுக்கட்டு, குதிரைப் பந்தயம், போன்றவை நம் நாட்டில் சூதாட்ட விளையாட்டுகளில் பிரபலமானவை.
சரி எல்லோரிடம் இந்த பந்தய குணம் உண்டு. ஆனால் அது பிரச்சினையை உருவாக்கும் அளவிற்கு உள்ளதா என அறிய இதோ ஒரு சோதனை.
TIME PASS
rommmmmmmmmmmmba nalla iruku sir..........
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteஉளவியல், அறிவியல், அறிந்த நீங்கள் அருமையாகவே நல்ல கட்டுறை எழுதுவது சிறப்பாக உள்ளது
ReplyDelete//nidurali said... //
ReplyDeleteதங்கள் மேலான கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சார்!
சூதாட்டங்களில் இருக்கிற பிரச்சனைகள் அதிகம். நாளைடைவில் அது பொருளாதாரத்தினை பிறரிடம் காட்டுவதற்கு என்றாகி விட்டது.
ReplyDeleteஅது சரி, இந்த பதிவில் கேள்வி பதிலாக இணைத்தை வித்தையை பதிவாக வெளியிட வேண்டும்,. பலருக்கும் உபயோகமாக இருக்கும்.