Wednesday, August 18, 2010

அடோப் ஃபிளாஷ் (25) - பட்டன்கள் மூலம் zoom in/zoom out effect

Flash File (ActionScript 2.0)ஐ திறந்து கொள்ளவும்.

முதலில் படம் அல்லது எழுத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.



பின் Insert->New symbolஐ கிளிக் செய்யவும் Buttonஐ தேர்ந்தெடுக்கவும். ஒரு பிளஸ் சிம்பலை உருவாக்குங்கள். மீண்டும், Insert->New symbolஐ கிளிக் செய்யவும் Buttonஐ தேர்ந்தெடுக்கவும். ஒரு மைனஸ் சிம்பலை உருவாக்குங்கள்.


உங்கள் படத்தை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Nameல் image_mc என கொடுக்கவும்.


புதிய லேயரை உருவாக்கவும். பிறகு லைப்ரரியிலிருந்து நீங்கள் உருவாக்கின பட்டன்களை ஸ்டேஜுக்கு கொண்டு விடவும். ப்ளஸ் பட்டனை கிளிக் செய்து அதன் Instance Nameல் plus என கொடுக்கவும். மைனஸ் பட்டனை கிளிக் செய்து அதன் Instance Nameல் minus என கொடுக்கவும்.


புதிய லேயரை உருவாக்கி Actions என பெயரிடவும். அதன் முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து என்பதை கிளிக் செய்யவும். வரும் பெட்டியில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
plus.onRelease = function() {
if (image_mc._xscale == 200 && image_mc._yscale ==200) {
image_mc.enabled = false;
}
else {
image_mc._xscale += 20;
image_mc._yscale += 20;
}
};
minus.onRelease = function() {
if (image_mc._xscale == 20 && image_mc._yscale == 20) {
image_mc.enabled = false;
} else {
image_mc._xscale -= 20;
image_mc._yscale -= 20;
}
};
ஆரஞ்சு நிறத்தில் ஹைலைட் செய்துள்ள இடத்தில் படத்தின் Instance Name வரவேண்டும். வெள்ளை நிறத்தில் ஹைலைட் செய்துள்ள இடத்தில் ப்ளஸ் பட்டனின் Instance Name வரவேண்டும். மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்துள்ள இடத்தில் மைனஸ் பட்டனின் Instance Name வரவேண்டும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



6 comments:

  1. சூப்பருங்கண்ணா...கலர் கலர் எழுத்துல..கேபிள் ஷங்கர் ப்ளாக்கில் வருமே புத்தக விளம்பர பெட்டி...அதை எப்படி உருவாக்குவது?

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க ..!!
    என்கிட்டே பிளாஷ் சாப்ட்வேர் இல்லைங்க.
    அது இலவசமா கிடைக்குமா ..?

    ReplyDelete
  3. //வெறும்பய said... //
    thank you brother

    //ஆர்.கே.சதீஷ்குமார் said... //
    நிச்சயம் சொல்கிறேன்! வருகைக்கு நன்றி!

    //ப.செல்வக்குமார் said... //
    என்னோட இந்த பதிவை பாருங்கள்!
    அடோப் ஃபிளாஷ்- அறிமுகம்

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு

    நன்றி

    ReplyDelete
  5. //மகாதேவன்-V.K said... //
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete