கடந்த சில பதிவுகளாக blur filter பற்றி எழுதினேன். இனி மீதி ஃபில்டர்களையும் பார்த்து விருவோம். இந்த ஃபில்டர்கள் கிட்டத்தட்ட ஃபோட்டோசாப்பில் உள்ள Blending options போலத்தான்.
பில்டர் பேனலில் + போன்ற ஒரு குறி இருக்கும் அதை கிளிக் செய்தால் Drop shadow, Blur, Glow, Bevel, Gradient Glow, Gradient Bevel, Adjust color ஆகிய ஃபில்டர்கள் இருக்கும்.
Drop shadow - நிழலை உருவாக்க
Blur - மங்காலான படத்தை எழுத்தை உருவாக்க
Glow - வெளிச்சத்தை உருவாக்க (நம் விருப்பமான நிறத்தில்)
Bevel - சரிவுக்காக
Gradient Glow - வெளிச்சம் கிரேடியண்ட் வடிவில்
Gradient Bevel - சரிவு கிரேடியண்டுடன்
Adjust color - நிறத்தை சரி செய்தல் (இதன் மூலம் அறுப்பு வெள்ளை படத்தை கூட உண்டாக்கலாம்.
நான் இங்கே அந்த ஃபில்டர்களால் மட்டுமே உருவான demoக்களை காண்பித்துள்ளேன். பாருங்கள். நீங்களும் பல்வேறு ஃபில்டர்களை கலந்து பயன்படுத்தி புதிய படைப்புகளை உருவாங்குங்கள்.
No comments:
Post a Comment