Wednesday, August 4, 2010

அடோப் ஃபிளாஷ் (10)- Simple & Motion Mask effect

இந்த எஃபக்டை செய்வதற்கு நமக்கு ஒரு கலர் படமும் அதோட பிளாக் அண்ட் வொய்ட் வெர்சனும் தேவை. பிளாக் அண்ட் ஒயிட் படம் உங்க கிட்ட இல்லைன்னு கவலைப்பட வேண்டாம்.

உங்க கிட்ட ஃபோட்டோஷாப் இருந்தா அதில் அந்த கலர் படத்தை open செய்த பிறகு Image->Adjustments->Black and white என்பதை கிளிக் செய்தால் படம் கருப்பு வெள்ளையாகி விடும். பிறகு வேறு பெயரில் சேவ் செய்துகொள்ளுங்கள்.


1. புதிய பிளாஷ் பைலை திறந்து கொள்ளுங்கள். அதில்
முதலில் 1வது பிரேமில் கருப்பு வெள்ளை படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வாருங்கள்.


2. புதிய லேயரை உருவாக்குங்கள் அதன் 1வது பிரேமில்  மவுஸ் கர்சரை வைத்த பின் கலர் படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும்.


3. இரண்டு படமும் சரியாக ஒன்றன்மேல் ஒன்று உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும்.

4. சரியாக ஒன்றன் ஒன்று இருக்க வேண்டுமானால் ஸ்டேஜ் அளவும் படங்களின் அளவும்(Width & Height) ஒவ்வொன்றின் பிராப்பர்டி பேனலிலும் சமமாக இருக்க வேண்டும். மேலும் X & Y (0, 0) என இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

5. மூன்றாவதாக ஒரு லேயரை உருவாக்கவும். ஒரு செவ்வகத்தை வரையவும். அதன் உயரம் படத்தின் உயரத்தை விட சிறிது அதிகமாக இருந்தால் நல்லது.


6. எந்த பகுதி மட்டும் பளிச்சென்று தெரிய வேண்டுமோ அந்த பகுதியில் செவ்வகத்தை வைக்கவும்.

7. செவ்வகம் உள்ள லேயரை ரைட் கிளிக் செய்து Mask என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது இப்படி இருக்கும்.


இதுதான் Simple Mask effect.

Motion Mask effect செய்ய (6வது படிக்கு பிறகு கீழ்காண்பவற்றை செய்யவும். அல்லது ஏற்கனவே மாஸ்க் செய்துள்ளதை ரைட்கிளிக் செய்து மாஸ்க் என்பதில் உள்ள டிக்கை எடுத்து விடவும்.)
8. செவ்வகத்தை படத்தில் இடது பக்க ஓரமாக நகர்த்தி கொள்ளவும். பிறகு செவ்வகம் உள்ள லேயரில் 5வது பிரேமில் ரைட் கிளிக் செய்து Insert Keyframe என்பதை கிளிக் செய்து ஒரு கீபிரேமை சேர்க்கவும்.

9. செவ்வகத்தை சிறிது வலதுப்பக்கம் நகர்த்தவும். இப்படி செவ்வகம் படத்தில் வலது பக்க ஓரம் வரும் வரை கீபிரேமை இன்சர்ட் செய்து செவ்வகத்தை நகர்த்தவும்.

10. பிறகு செவ்வகம் உள்ள லேயரில் கீபிரேம் கடைசியாக எந்த லேயரில் உள்ளதோ மற்ற லேயர்களில் அதே பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.


11. பிறகு ஒவ்வொரு கீபிரேமுக்கு இடையிலும் ரைட்கிளிக் செய்து Create Motion Tween என்பதை கிளிக் செய்யவும்.


12. கடைசியாக செவ்வகம் உள்ள லேயரை ரைட்கிளிக் செய்து Mask என்பதை கிளிக் செய்யவும்.

13. Control+Enterஐ அழுத்தி உங்கள் மூவியை சோதிக்கவும்.
பிறகு File->Export->Export to movie என்பதை கிளிக் செய்து swf கோப்பாக சேமிக்கவும்.

DEMO:







ஏதெனும் குறையிருந்தால் கருத்துக்கள் சொல்லவும். சந்தேகம், கூடுதல் தகவல் தேவையென்றாலும் பின்னூட்டத்தில் கேட்கவும்.
என் பிளாகை படித்து வரும் அனைவருக்கும் நன்றி! தங்களுக்கு பயனுள்ளதாக என் பிளாகில் சிறு பகுதி இருந்தாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி!
நன்றி!

8 comments:

  1. உபயோகமான பதிவு.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே தொடர்ந்து இது போல் நல்ல தகவல்களை தொடர்ந்து தாருங்கள் அனைத்து திரட்டிகளிலும் இணையுங்கள் இன்னும் அதிகமாக நண்பர்கள் படிப்பார்கள் எனக்கு நேரம் இருக்கும் பொழுது உங்கள் வலைத்தளத்திற்கு லின்க் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  3. நண்பரே என்னை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
  4. Very good work

    plz keep on going

    -Mohan

    ReplyDelete
  5. //சி.பி.செந்தில்குமார் said...
    உபயோகமான பதிவு.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் //
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    //வடிவேலன் ஆர். said...
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நண்பரே தொடர்ந்து இது போல் நல்ல தகவல்களை தொடர்ந்து தாருங்கள் அனைத்து திரட்டிகளிலும் இணையுங்கள் இன்னும் அதிகமாக நண்பர்கள் படிப்பார்கள் எனக்கு நேரம் இருக்கும் பொழுது உங்கள் வலைத்தளத்திற்கு லின்க் கொடுக்கிறேன். //
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
    தங்கள் ஆலோசனைபடி செய்கிறேன்.

    //nilalgal said...
    Very good work
    plz keep on going
    -Mohan//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  6. எனக்கு தேவைப்பட்ட ஒருவிடயம் பற்றி அருமையாக பதிவிட்டுள்ளீர்கள். நன்றிகள் நண்பா.

    ReplyDelete
  7. //Jana said...
    எனக்கு தேவைப்பட்ட ஒருவிடயம் பற்றி அருமையாக பதிவிட்டுள்ளீர்கள். நன்றிகள் நண்பா.//
    மிகவும் மகிழ்ச்சி. யாருக்காவது பயன்பட வேண்டும் என்றுதான் இதை தொடங்கினேன். தங்கள் கருத்தால் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
    தங்கள் வருகைக்கு நன்றி
    எஸ்.கே

    ReplyDelete
  8. யா..கலக்கல்....கருப்பு வெள்ளையில் சின்ன மாற்றம்..அது தரும் பரவசம் சூப்பர்

    ReplyDelete