Thursday, August 19, 2010

மனம்+: கணிப்பொறி மற்றும் இணைய பயன்பாடு அடிமைப் பழக்கம்

இது என் ஐம்பதாவது பதிவு. தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இன்றைய உலகில் இணையப் பயன்பாடு என்பது அதிகமாகி விட்டது. ஒவ்வொருவரும் தங்களது தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ப கால அளவில் பயன்படுத்துகின்றனர். சிலர் இந்த இணையதளங்களில் நீண்ட நேரம் செலவிடுவார்கள். அதை பயன்படுத்தாமல் அவர்களால் இருக்க முடியாது. அதற்கு அடிமையாகி போகிறார்கள். இது கிட்டதட்ட ஒரு போதை பழக்கம் போலத்தான்.

இணைய அடிமை பழக்கம் ஒரு வியாதி அல்ல. எனினும், சிலருக்கு இதனால் கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம். நான் இங்கே இணையப் பழக்கம் என்பது இணையதளங்களை மட்டும் பயன்படுத்துவதை குறிப்பிடவில்லை. விளையாட்டுக்கள், மற்ற விஷயங்கள் என கணிணியிலேயே மூழ்கி இருப்பதையும் இது குறிப்பிடுகிறது.


இந்தப் பழக்கம் சில வருடங்களாகத் தான் அதிகமாகி வருகிறது. அதற்கு MySpace, Facebook, அல்லது Twitter போன்ற சமூக வலைத்தலங்களும் Email, online chat போன்றவைகளும் கூட காரணமாகும். (இங்கே பிளாக்கிங்கை கூட சேர்த்துக் கொள்ளலாம்).

இந்த அடிமைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளாவன: கவலை மிகுதியாகும். இதனால் anxiety disorder எனப்படும் மன அழுத்த நோய் ஏற்படலாம். அதிக தனிமை உண்டாகும். சூதாட்டம், செக்ஸ் போன்ற பழக்கங்கள் (மது, போதை மருந்துகள் பழக்கம் கூட) உண்டாகலாம். சமூக உறவும் பழக்கமும் குறைகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் சில உடல் சார்ந்த நோய்களும் ஏற்படலாம். pornography மற்றும் cybersex ஆகியவை இந்த இணையப் பழக்கத்தால் உண்டாகும் முக்கிய தீமையாகும். இதற்கு அடிமையானாலும் மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும்.

இந்த இணைய அடிமைப் பழக்கத்தை கண்டறிய ஒரு சோதனை:



TIME PASS









15 comments:

  1. பாஸ்..50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    Internet Addiction Disorder (IAD)பற்றிய உங்கள் பதிவு மிக அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.
    //சமூக உறவும் பழக்கமும் குறைகிறது//
    இதைப பற்றி இன்னும் விரிவாக ஒரு பதிவு போட்டீங்கன்னா நன்றாக இருக்கும்.
    (உங்க பதிவு இன்ட்லில இருக்கா? இல்லையென்றால் சேர்த்தீங்கன்னா நிறைய பேருக்கு உபயோகப்படுமே)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பதிவுக்கு வாழ்த்துக்கள் எஸ் கே அவர்களே

    தொடர்க உங்கள் பணி உங்கள் பாதையில்.

    ReplyDelete
  4. //கொழந்த said...
    Internet Addiction Disorder (IAD)பற்றிய உங்கள் பதிவு மிக அவசியமான ஒன்றாக நான் கருதுகிறேன்.//
    இந்த புரிதலை தான் எதிர்பார்க்கிறேன் சார். மிக்க நன்றி.
    சமூக உறவும் பழக்கமும் குறைவது பற்றி நிச்சயம் விரிவாக பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  5. //மகாதேவன்-V.K said... //
    வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  6. 50 பதிவுக்கு வாழ்த்துக்கள் எஸ் கே அவர்களே

    தொடர்க உங்கள் பணி... KEEP IT UP

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரியாஸ் சார்!

    ReplyDelete
  8. 50 பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Indraiya kaalathirkku migavum avasiyamaana article idhu...Palarukku echarikkaiyaagavum irukkum. Vaazhthukkal S.K.

    ReplyDelete
  10. //சிநேகிதி said... //
    மிக்க நன்றி மேடம்.

    //Lingeswaran said... //
    ரொம்ப நன்றி சார்!

    ReplyDelete
  11. 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    நானும் அந்த சோதனையில் பங்கெடுத்தேன்.
    47 மதிப்பெண்கள் பெற்றேன். இந்தப்பதிவு அவசியமான பதிவும் கூட.
    நன்றி ..!!

    ReplyDelete
  12. மிக்க நன்றி செல்வக்குமார் சார்!

    ReplyDelete
  13. கண்டிப்பாக... இணையத்தை அளவாக உபயோகிக்க வேண்டும்....

    ReplyDelete
  14. இணையம் என்பது அடிமைத் தனத்தை உண்டாக்குகிறது என்பதை நன்றாக விளக்கிச் சொல்லி விட்டீர்கள். நன்றி நண்பா!

    இதுப் போல் எனக்குப் புரிகிற விஷயங்களாக நிறைய எழுதுங்கள். நான் இப்போது உங்களை பின் தொடர்பவர்களில் ஒருவராக ஆகிவிட்டேன். நன்றி! மற்ற தொழில் நுட்ப பதிவுகள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் அவைகளைப் படிக்க வில்லை நண்பா!

    ReplyDelete
  15. எனக்கு தேவையான பதிவாக உள்ளது..
    எனது மதிப்பெண் 63ஆக உள்ளது...
    முயற்சி செய்கிறேன்...

    ReplyDelete