Friday, August 13, 2010

அடோப் ஃபிளாஷ் (20) - Blur effect

இந்த பதிவில் நாம் blur எஃபக்டை பற்றி பார்ப்போம். ஆனால் அதற்கு முன் பிளாஷில் உள்ள பில்டர்கள் பற்றி சுருக்கமாக பார்ப்போம். இந்த ஃபில்டர்கள் ப்ராப்பர்ட்டி பேனலுக்கு அருகில் இருக்கும். ஃபில்டர்களை மூவி கிளிப்பிற்கும், பட்டன்களும் கொடுக்கலாம். Graphic symbolக்கு அளிக்க முடியாது. பட்டன்களுக்கு பில்டர்களை முழுமையாக அளிக்க ஆக்சன்
ஸ்கிரிப்டுகள் தேவை. ஆனால் Movie clipக்கு அது தேவையில்லை.

பில்டர் பேனலில் + போன்ற ஒரு குறி இருக்கும் அதை கிளிக் செய்தால் Drop shadow, Blur, Glow, Bevel, Gradient Glow, Gradient Bevel, Adjust color ஆகிய ஃபில்டர்கள் இருக்கும்.

நாம் முதலில் Blur ஃபில்டர்கள் பற்றி பார்ப்போம். Blur எஃபக்டில் மூன்று விதங்கள் உள்ளன. Blur tween, Blur Mask, Blur Transition ஆகியவை ஆகும். இன்று Blur tween எஃபக்டை பார்ப்போம்.

முதலில் உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக் கொள்வோம்.
அதை ரைட்கிளிக் செய்து convert to symbolஐ கிளிக் செய்து movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.
பிறகு 40வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.

பிறகு மீண்டும் 1வது பிரேமில் கிளிக் செய்யவும். பிறகு ஃபில்டர் பேனலில் + குறியை கிளிக் செய்து Blurஐ தேர்ந்தெடுக்கவும் பிறகு Blur X, Blur Yயில் எண்ணை அமைக்கவும். பூட்டு சின்னத்தை கிளிக் செய்தால் தனித்தனியகவும் எண்ணை அமைக்கலாம்.
பிறகு 1 முதல் 40வது பிரேமிற்கு இடையே ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.

இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:




4 comments:

  1. தொழில் நுட்பத்தில் கலக்குரிங்க உங்கலல நான் பலனடைகிறேன் அ.மாணீக்கவெலு

    ReplyDelete
  2. //maanikam said... //
    மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள பதிவு... மிக்க நன்றி...

    ReplyDelete
  4. //வெறும்பய said... //
    மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!

    ReplyDelete