Thursday, August 12, 2010

அடோப் ஃபிளாஷ் (17) - audio, videoவை சேர்த்தல்

ஒரு பிளாஷ் மூவியில் ஒலியை(ஆடியோ) சேர்ப்பது எப்படி?

இது ஒரு பிளாஷ் மூவி. இந்த மூவியில் கார் செல்லும் சத்தத்தை சேர்க்க முதலில் ஒலியை லைப்ரரிக்கு இம்போர்ட் செய்யுங்கள்.
பிறகு எந்த லேயரில் எந்த பிரேமில் ஒலியை சேர்க்க வேண்டுமோ அங்கே கிளிக் செய்யவும்.

பிறகு பிராப்பர்டி சேனலில் sound என இருக்கும் இடத்தில் None  என இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்கள் சவுண்டின் பெயர் இருக்கும். அதை கிளிக் செய்தால் அவ்வளவுதான்.

audio சேர்த்த மூவி இதோ:


ஒரு பிளாஷ் மூவியில் வீடியோவை சேர்ப்பது எப்படி?
file->Import-> Import video என்பதை கிளிக் செய்தால் ஒரு பெட்டி தோன்றும்.


அந்த பெட்டியில் முதலில் on your computer என்பது உங்கள் கம்ப்யூட்டரில் வீடியோ இருந்தால் அதை பிளாஷில் அப்லோட் செய்யவும். .mov, .div, .mpg, .mpeg, .wmv, .asf, .flv, .avi போன்ற பார்மெட்டுகளில் உள்ள வீடியோவை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம்.

இரண்டாவதாக Already deployed to a web server, Flash Video Streaming service, or Flash Media Server: என இருக்கும் அதன்
கீழே உள்ள URL: என்ற பெட்டியில் நீங்கள் விரும்பும் வீடியோ ஏதாவது வெப்சைட்டில் இருந்தால் அதன் முகவரியை தரவும்.

இரண்டு தேர்வுகளையும் தனித்தனியாக பார்ப்போம்.

முதலாவதில் பைலை தேர்ந்தெடுத்த பிறகு கீழ்காணும் பெட்டி தோன்றும். அதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். நான் இங்கே Embed video in swf and lay in timeline என்பதை தேர்ந்தெடுத்துள்ளேன்.
பிறகு நெக்ஸ்ட்டை கிளிக் செய்தால் embedding வரும் அதில் symbol டைப்பாக movie clip embedded video, graphicல் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். பிறகு வருவதில் நாம் நெக்ஸ்ட் மட்டும் கிளிக் செய்து ஃபினிஷ் செய்தால் போதும்.

மேற்கண்ட முறையில் செய்யப்பட்ட மூவியின் டெமோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். (அதை நான் இங்கே இணைக்காததற்கு காரணம் அந்த வீடியோ அளவு 2mbக்கு அதிகமாகும்.)
================================
அதேபோல் URL மூலம் வீடியோவை இணைத்தால் கீழ்காணும் பெட்டி தோன்றும் பிறகு ஸ்கின்னை தேர்ந்தெடுத்து முடிக்க வேண்டியதுதான். கவனிக்க: அந்த வீடியோ உங்களுக்கான வெப்சைட்டில் இருக்க வேண்டும். யூட்யூப் போன்ற வீடியோ சைட்களில் இருக்கக் கூடாது.
கீழ் வருவதை பார்த்து ரசியுங்கள்!!!
குறிப்பு: கீழ்காணும் வீடியோ ஒரு ஃபிளாஷ் பைலாகும். ஆனால் அதில் உள்ள வீடியோ யூடியூபில் இருப்பது. அப்புறம் எப்படி அது பிளாஷ் பைலில் இணைக்கப்பட்டது. அதை வேறொரு பதிவில் காண்போம்.

3 comments: