Wednesday, August 18, 2010

ஆக்சன் ஸ்கிரிப்ட்-1

கவனிக்க: நான் ஒரு புரொஃபஷனல் அனிமேட்டர் கிடையாது. ஆனால் சில வருடங்களாக நானாக கற்றுக்கொண்ட பிளாஷ் பற்றிய தகவல்களை இங்கே தருகிறேன். இதில் பெரும்பாலும் சோதித்த பிறகு பிழையின்றியே தருகின்றேன். ஏதாவது தவறு இருக்குமானால் தெரியப்படுத்தவும்.

ஆக்சன் ஸ்கிரிப்ட்கள் என்பவை மேக்ரோமீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு அடோப் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ஸ்கிரிப்ட் மொழியாகும். இது கிட்டத்தட்ட ஜாவாஸ்கிரிப்ட் போன்றதே.

ஆக்சன்ஸ்கிரிப்ட்கள் எளிய இரு பரிமாண (2D) அனிமேஷன்களை பல செயல்பாடுகளுடன் உருவாக்க பயன்படுகின்றன. ஆக்சன்ஸ்கிரிப்ட்கள் அடோப் ஃபிளாஷ் மற்றும் அடோப் ஃபிளக்ஸ் ஆகிய மென்பொருள்களில் பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்போது வரை மூன்று வகையான ஆக்சன்ஸ்கிரிப்ட்கள் உள்ளன. ActionScript 1.0, ActionScript 2.0, ActionScript 3.0.

டைம்லைனை கட்டுப்படுத்தும் இரண்டு விஷயங்கள்: Flash Player மற்றும் ActionScript. எனவே மூவியில் எந்த பிளாஷ் பிளேயர் மற்றும் ஆக்சன்ஸ்கிரிப்ட்களை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து மூவியில் மாறுபாடுகள் தோன்றும். பிளாஷ் பிளேயர் 8.0 அல்லது அதற்கும் மேம்பட்டதை பயன்படுத்துவது நல்லது. சமீபத்திய வெர்சனான பிளாஷ் பிளேயர் 10ல் முப்பரிமாண வசதிகளும் உள்ளன. ஆக்சன்ஸ்கிரிப்டை பொறுத்த வரை 2.0 மற்றும் 3.0 இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன.



2டி அனிமேசனில் நாம் ஒரு படத்தை உருவாக்குகிறோம். அதாவது ஒரு காரின் படத்தை என்று வைத்துக் கொள்வோம். இங்கே காரின் உடல் பாகம், சக்கரங்கள், பேக்ரவுண்ட் என மூன்று விஷயங்களை தனித்தனியாக உருவாக்கி சேர்க்கிறோம். இவற்றை objects என்கிறோம் இந்த ஆப்ஜெக்ட்களை சில செயல்களுக்காக ஒன்றிணைக்க வேண்டும். அதற்கு உதவுபவைகளை Interface என்கிறோம். properties, methods, functions, abstract data types, constructors போன்று பல இண்டர்ஃபேஸ்கள் உள்ளன.

பிளாஷில் ஆக்சன்ஸ்கிரிப்டுகளை எழுத சில உதவிகள் அதிலேயே உள்ளன. அவற்றை அவ்வப்போது பார்ப்போம்.

நாம் ஆக்சன்ஸ்கிரிப்ட்களை கற்றுக் கொள்ள நினைத்தால் சில விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் ஆக்சன்ஸ்கிரிப்டுகளை பெரும்பாலும் மூவிக்கே பயன்படுத்துகிறோம். அதனால் மூவியை வைத்தே உதாரணம் சொல்கிறேன்.

ஒவ்வொரு மூவிக்கும் ஆரம்ப நிலை உண்டு; நாம் மூவி எப்படி வரவேண்டும் என மனதில் நினைப்போம் அதன் படி நாம் சிலவற்றை வடிவமைக்க வேண்டும். ஆக்சன்ஸ்கிரிப்ட் உருவாக்கும்போது ஆரம்பநிலையில் நாம் variables மற்றும் movie properties ஆகியவற்றை ஆரம்பத்தில் பதிவு செய்ய வேண்டும்.

நாம் மூவியின் பிராப்பர்டிகளை பயன்படுத்தும்போது அண்டர்ஸ்கோட் எனப்படும்(_) இக்குறியீட்டின் பின்னரே அது இடப்பட வேண்டும். இந்த பிராப்பர்டிகள் மூவியின் பண்புகளை கொண்டுள்ளது அதாவது அது எப்படி நகர வேண்டும் (_xscale  மற்றும்  _yscale), சுழல வேண்டும் (_rotation) அது தெரிய வேண்டுமா இல்லையா (_visible) என்பது போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.

வேரியபிள்கள் தகவல்களை கொண்டிருக்கும் இவற்றை value என்பர்.  இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

2 comments:

  1. Mikka nandri!!! Aduththa padhippirkkaaga kaaththirukkiraen!!!

    ReplyDelete
  2. //மிதுன் said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete