Wednesday, July 7, 2010

வணக்கம்



இனிய வலைத்தள நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

இது என் முதல் வலைப்பூ ஆகும். இதுவரை நான் எழுத நினைத்தாலும் தயக்கத்தால் நீண்டகாலம் எழுதாமல் இருந்தேன். தற்போது எழுத துணிந்துவிட்டேன்.


இங்கே நான் மனம்+ பகுதியில் உளவியல் சார்ந்த விசயங்களையும், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் நம் மனம் அதன் செயல்பாடு பற்றி எழுதபோகிறேன். தொழிற்நுட்பம் பகுதியில் சில இணையம், கணிப்பொறி மற்றும் சில அறிவியல் சார்ந்த விஷயங்களை பற்றி எழுதுவேன்.

மேலும் கதை, கட்டுரை, நாவல் போன்றவைகளையும் எழுதாலமென்று இருக்கிறேன்.

இது என் முதல் பதிவாகும். இதில் வெறும் அறிமுகத்தை பற்றி மட்டும் எழுதாமல் உங்களுக்கு பொழுதுபோகுமாறு ஒரு உளவியல் விளையாட்டை பார்ப்போமா...


இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல உளவியல்ரீதியான சோதனை ஆகும். ஆனால் இது 100% சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 50 முதல் 80% உண்மையாக இருக்கும்.

உங்கள் மனதில் முதலில் தோன்றும் பதில்களை மட்டுமே ஒரு தாளில் எழுதி வைக்கவும்.





ஒரு பேப்பரில் கீழ்காணும் கேள்விகளுக்கான உங்களின் பதில்களை முதலில் எழுதிக் கொள்ளவும். கடைசியில் முடிவுகளை பார்க்கலாம். உங்கள் மனதில் முதலில் தோன்றும் பதில்களை மட்டுமே ஒரு தாளில் எழுதி வைக்கவும்.

சூழ்நிலை: 

நீங்கள் ஒரு அடர்ந்த காட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செல்லும் வழியில் ஒரு பழைய குடிசை உள்ளது.
(1) அது எப்படி உள்ளது?
(திறந்துள்ளது/மூடியுள்ளது)

நீங்கள் குடிசைக்குள் நுழைகிறீர்கள். அங்கே ஒரு மேஜை உள்ளது...
(2) அதன் வடிவம் என்ன?
(வட்டம்/நீள்வட்டம்/சதுரம்/செவ்வகம்/முக்கோணம்)

மேஜையின் மேல் ஒரு ஜாடி உள்ளது. அதில் தண்ணீர்...
(3) தண்ணீர் எவ்வளவு நிறைந்துள்ளது?
(முழுவதும் உள்ளது/பாதி உள்ளது/காலியாக உள்ளது)

(4) அந்த ஜாடி எதால் செய்யப்பட்டது?
[(கண்ணாடி/பீங்கான்/களிமண்)(உலோகம்/பிளாஸ்டிக்/மரம்)]

நீங்கள் குடிசையிலிருந்து வெளியில் வருகிறீர்கள். தொடர்ந்து காட்டில் சென்று கொண்டிருக்கும்போது.. நீங்கள் ஒரு நீர்வீழ்ச்சியை பார்க்கிறீர்கள். அதில் நீர் எப்படி செல்கிறது.
(5) நீரின் வேகம் என்ன?
(0 முதல் 10 வரை வேகத்தை பொறுத்து ஒரு எண்ணை தரவும்.)

நீர் வீழ்ச்சி அருகே நீங்கள் சென்று பார்த்துக் கொண்டிருக்கும்போது தரை எதுவோ கடினமாக உங்கள் கால்களுக்கு தட்டுப்படுகிறது. நீங்கள் கீழே பார்க்கிறீர்கள். எதுவோ தங்க நிறத்தில் மின்னுகிறது. நீங்கள் அதை குனிந்து எடுக்கிறீர்கள். அது சாவிகளுடன் உள்ள ஒரு சாவிக்கொத்து.

(6) எத்தனை சாவிகள் அந்த சாவிக்கொத்தில் உள்ளன?
(1 முதல் 10 வரை வேகத்தை பொறுத்து ஒரு எண்ணை தரவும்.)

நீங்கள் மேலும் நடந்துகொண்டிருக்கிறீர்கள்... அப்படி சென்றுகொண்டிருக்கும்போது.. ஒரு மாளிகையை பார்க்கிறீர்கள்.

(7) அந்த மாளிகையின் நிலை எப்படி உள்ளது?
(பழையதாக உள்ளது/புதியதாக உள்ளது)

நீங்கள் மாளிகைக்குள் செல்கிறீர்கள். அங்கே ஒரு குளம் உள்லது அதில் நீர் மிக அழுக்காக உள்ளது, அதில் ஜொலிக்கும் நகைகள் மிதந்துகொண்டிருக்கின்றன...
(8) நீங்கள் அந்த நகைகளை எடுப்பீர்களா?
(ஆமாம்/இல்லை)

அந்த அழுக்கான குளத்திற்கு பக்கத்தில் மற்றொன்று குளம் உள்ளது. அதில் சுத்தமான தண்ணீர் உள்ளது, அதில் பணம் மிதந்து கொண்டிருக்கிறது...

(9) நீங்கள் பணத்தை எடுப்பீர்களா?
(ஆம்/இல்லை)

மாளிகையில் மற்றொரு பக்கத்திற்கு செல்லும்போது, ஒரு வெளியே செல்லும் வழியை பார்க்கிறீர்கள். அதன் வழியே வெளியே சென்றால் ஒரு பெரிய தோட்டம் உள்ளது. அங்கே தரையில் ஒரு பெட்டியை பார்க்கிறீர்கள்.

(10) அந்த பெட்டியின் அளவு என்ன?
(சிறியது/நடுத்தரமானது/பெரியது)

(11) அந்த பெட்டி எதனால் செய்யப்பட்டது?
(அட்டைப்பெட்டி/காகிதம்/மரம்/உலோகம்)

பெட்டியை விட்டு விட்டு தோட்டத்தில் கொஞ்ச தூரம் செல்கிறீர்கள். அங்கே ஒரு பாலம் உள்ளது.
(12) அந்த பாலம் எதால் செய்யப்பட்டது?
(உலோகம்/மரம்/மூங்கில்)

பாலத்தை கடந்தால் ஒரு குதிரை உள்ளது.
(13) அதன் நிறம் என்ன?
(வெள்ளை/சாம்பல்/பழுப்பு/கருப்பு/)

(14) அந்த குதிரை என்ன செய்துகொண்டிருக்கிறது?
(அமைதியாக நின்றுகொண்டிருக்கிறது/புல்லை மேய்ந்துகொண்டிருக்கிறது/ஓடிக் கொண்டிருக்கிறது)

அச்சச்சோ! அதோ குதிரைக்கு சிறிது தூரத்தில் ஒரு சூறாவளி வருகிறது...
உங்களுக்கு மூன்று வாய்ப்புகளே உள்ளன:
(i) ஓடிச்சென்று பெட்டியில் ஒளிந்துகொள்வீர்களா?
(ii) ஓடிச்சென்று பாலத்திற்கு அடியில் ஒளிந்துகொள்வீர்களா?
(iii) குதிரையிடம் ஓடிச்சென்று அதன்மேல் ஏறி அங்கிருந்து வேகமாக போவீர்களா?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதோ முடிவுகளை பார்ப்போம்.:
(1) கதவு:
திறந்த கதவு - நீங்கள் வெளிப்படையாக உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள கூடியவர்.
மூடிய கதவு - நீங்கள் வெளிப்படையாக உங்கள் உணர்வுகளை உங்களுக்குளேயே மூடி வைத்துக் கொள்பவர்.

(2) மேஜை=இது நீங்கள் நண்பர்களுடன் பழகும் விதத்தை குறிக்கிறது:
வட்டம்/நீள்வட்டம்- உங்களுடன் உள்ள நண்பர்களை ஏற்றுக்கொண்டு அவர்களை முழுமையாக நம்புவீர்கள்
சதுரம்/செவ்வகம் - நீங்கள் சிறிது பாரபட்சம் காண்பிப்பவர். ஒரே எண்ணங்களை உடைய நண்பர்களுடன் மட்டுமே நன்றாக பழகுவீர்கள்
முக்கோணம் - நீங்கள் எளிதில் மனநிறைவு அடைய மாட்டீர்கள் அதனால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.

(3) ஜாடியில் உள்ள நீர்=இது உங்கள் வாழ்வின் நிறைவுத் தன்மையை குறிக்கிறது:
காலியாக உள்ளது- உங்கள் வாழ்க்கை முழுமையடையவில்லை.
பாதி நிரம்பியிருந்தால்- உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியது பாதி முழுமையடைந்துள்ளது
முழுமையாக உள்ளது- உங்கள் வாழ்க்கை முழுமையடைந்துள்ளது:)

(4) ஜாடியின் எதனால் செய்யப்பட்டது:
கண்ணாடி/களிமண்/பீங்கான்- நீங்கள் மிகவும் பலவீனமானவர்கள் எளிதில் உடைந்து விடுவீர்கள்.
உலோகம்/பிளாஸ்டிக்/மரம் - நீங்கள் உறுதியானவர்கள்

(5) நீரின் வேகம்- இது உங்கள் சிற்றின்ப ஆசை குறிக்கிறது:
0 - ஆசையே இல்லை
1 முதல் 4 வரை- குறைவான சிற்றின்ப ஆசை
5 - சராசரி சிற்றின்ப ஆசை
6 முதல் 9 வரை - அதிகமான சிற்றின்ப ஆசை
10 - அவ்வளவுதான்!!! அதிகபட்ச சிற்றின்ப உணர்வு!!! உங்களால் காம உணர்வு இல்லமல் வாழ முடியாது..

(6) சாவிகள் = இது உங்களுடைய நண்பர்களின் எண்ணிக்கையை குறிக்கிறது.:
1 - உங்களுக்கு ஒரே நல்ல நண்பர் மட்டுமே உள்ளார்.
2 முதல் 5 வரை - உங்களுக்கு சில நல்ல நண்பர்கள் உள்ளனர்.
6 முதல் 10 வரை - உங்களுக்கு ஏராளமான நல்ல நண்பர்கள் மட்டுமே உள்ளார்.

(7) மாளிகை:
பழையது - உங்களுடைய கடைசி உறவு (இது பெரும்பாலும் காதலையே குறிக்கிறது) நன்றாக இல்லை. அது நினைவில் இருக்க கூடியதாக அமையவில்லை.
புதியது - உங்களுடைய கடைசி உறவு நன்றாக இருந்தது. அது இன்னமும் உங்கள் மனதில் பசுமையாக உள்ளது.

(8) அழுக்கு நீரில் உள்ள நகைகளை எடுப்பீர்களா:
ஆம் என்றால்- உங்கள் துணைவர் (காதலன்/காதலி/கணவன்/மனைவி) உங்களுடன் இருக்கும்போது நீங்கள் மற்றவர்களிடம் கவனம் செலுத்துவீர்கள்(சைட் அடித்தல், மற்றவர்களிடம் காதல் வசனம் பேசுதல் போன்றவை)...
இல்லை என்றால் - உங்கள் துணைவர் (காதலன்/காதலி/கணவன்/மனைவி) உங்களுடன் இருக்கும்போது நீங்கள் அவருடனே அதிக நேரம் இருப்பீர்கள்(கவனம் செலுத்துவீர்கள்).

(9) சுத்தமான நீரில் உள்ள பணத்தை எடுப்பீர்களா:
ஆம் என்றால்- உங்கள் துணைவர் (காதலன்/காதலி/கணவன்/மனைவி) உங்களுடன் இல்லாதபோதும் நீங்கள் மற்றவர்களிடம் கவனம் செலுத்துவீர்கள்(சைட் அடித்தல் மற்றவர்களிடம் காதல் வசனம் பேசுதல் போன்றவை)...
இல்லை என்றால் - உங்கள் துணைவர் (காதலன்/காதலி/கணவன்/மனைவி) உங்களுடன் இல்லாதபோதும் மற்றவர்களிடம் கவனம் செலுத்தாமல் (சைட் அடித்தல் மற்றவர்களிடம் காதல் வசனம் பேசுதல் போன்றவை) அவருக்கு உண்மையாக நடந்துகொள்வீர்கள்.

(10) பெட்டியின் அளவு= இது உங்கள் கர்வம், ஆணவம், தான் என்ற எண்ணம் (ஈகோ) போன்றவற்றை குறிக்கிறது:
சிறியது- சிறிய அளவிலான ஈகோ
நடுத்தரமானது- சராசரி அளவிலான ஈகோ
பெரியது - பெரிய அளவிலான ஈகோ

(11) பெட்டி எதால் செய்யப்பட்டது-இது உங்கள் அடக்கம், பணிவு போன்ற குணங்களை குறிக்கிறது:
அட்டைப்பெட்டி/காகிதம்/மரம் (பளபளப்பில்லாதவை)- பணிவான குணமுடையவர்
உலோகம் - தற்பெருமை மற்றும் செருக்கு(ஆணவம்) கொண்டவர்

(12) பாலம் எதால் செய்யப்பட்டது:
உலோகத்தினால் ஆன பாலம் - நீங்கள் உங்கள் நண்பர்களுடன் மிக நெருக்கமாக இருக்கிறீர்கள்.
மரத்தினால் ஆன பாலம்- நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சராசரி நெருக்கத்தில் இருக்கிறீர்கள்.
பிரம்பினால் ஆன பாலம் - நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சரியான முறையில் நெருக்கமாக இல்லை.

(13) குதிரையின் நிறம்:
வெள்ளை- உங்கள் துணைவர் உங்கள் மனதில் தூய்மையானவராகவும் நல்லவராகவும் இருக்கிறார்.
சாம்பல்/பழுப்பு-உங்கள் துணைவர் உங்கள் மனதில் முழுமையாக இல்லை சராசரி அளவில் மட்டுமே இருக்கிறார்.
கருப்பு- உங்கள் துணைவர் உங்கள் மனதில் சுத்தமா இல்லை. அவரை பற்றி உங்கள் மனதில் தப்பான அபிப்பிராயமே உள்ளது.

(14) குதிரையின் செயல்:
அமைதியா நின்றுகொண்டிருக்கிறது/புல் மேய்ந்துகொண்டிருக்கிறது - உங்கள் துணைவர் எளிமையானவர் அடக்கமானவர்.
ஓடிக்கொண்டிருக்கிறது- உங்கள் துணைவர் ஒரு கட்டுப்பாடற்றவர் முரட்டுத்தனமானவர்.

இது கடைசி மற்றும் முக்கியமான கேள்வி...
சூறாவளி வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்:
(i) ஓடிச்சென்று பெட்டியில் ஒளிந்துகொள்வீர்களா?
(ii) ஓடிச்சென்று பாலத்திற்கு அடியில் ஒளிந்துகொள்வீர்களா?
(iii) குதிரையிடம் ஓடிச்சென்று அதன்மேல் ஏறி அங்கிருந்து வேகமாக போவீர்களா?

எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?
சூறாவளி-உங்கள் வாழ்வின் பிரச்சினைகளை குறிக்கிறது.
பெட்டி- உங்களை குறிக்கிறது.
பாலம்-உங்கள் நண்பர்களை குறிக்கிறது.
குதிரை- உங்கள் துணைவரை குறிக்கிறது.

(i) நீங்கள் பெட்டியை தேர்ந்தெடுத்திருந்தால், உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது, நீங்கள் மட்டுமே அதை சந்திப்பீர்கள்.
(ii) நீங்கள் பாலத்தை தேர்ந்தெடுத்திருந்தால், உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது, நீங்கள் உங்கள் நண்பர்களை தேடிப் போவீர்கள்.
(iii) நீங்கள் குதிரையை தேர்ந்தெடுத்திருந்தால், உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது, நீங்கள் உங்கள் துணைவரின் உதவியை நாடுவீர்கள்.

இந்த சோதனை மதிப்புள்ளதாக நீங்கள் நினைத்தால் உங்கள் நண்பர்களுக்கு இதை அனுப்புங்கள். 



டைம்பாஸ்







16 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பரே... தொடர்ந்து பயனுள்ள விசயங்களை எழுதுங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.
    நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  3. வருக வருக நண்ப

    முதல் இடுகையே அருமையாக இருக்கிறது - மனோதத்துவம் - ம்ம்ம் - டைம் பாஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்கள்

    இந்த வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடலாமே - அத்னால் பயன் ஒன்றுமில்லை

    நன்று நன்று நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. கருத்து தெரிவித்த அனைவருக்கு நன்றி!

    ReplyDelete
  5. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.
    வரவேற்கிறேன் எஸ்.கே

    ReplyDelete
  6. நன்றி அன்பரசன் அவர்களே!

    ReplyDelete
  7. அருமை! சுவரஸ்யமாக உள்ளது!!! ஏன் மனதை பற்றிய இடுக்கைகளை குறைத்துக்கொண்டீர்கள்? மேலும் எழுதவும்... நன்றி!!!

    ReplyDelete
  8. //மிதுன் said... //
    ஃபிளாஷ் பதிவுகளால் மனம் பற்றிய பதிவுகளை குறைத்துக் கொண்டேன். ஆனால் அவற்றையும் அடிக்கடி எழுதுவேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  9. //mkr said... //
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  10. உளவியல், அறிவியல், கதை எழுதுதல்...அத்தனையும் உள்ளடக்கி அருமையாக ஒரு வலை தருகின்றீர்கள் .
    உங்கள் சேவை தேவை . நானும் எடுத்து மற்றவருக்கு கொடுக்கவா! அனுமதி வேண்டுதல்.

    ReplyDelete
  11. ஆரம்பிக்கும் போதே ஒரு டைப்பாத்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  12. அட உண்மையிலேயே பல விசயங்கள் ஒத்துப் போனது. மனம் போடும் விளையாட்டு அதிசயம் தான்.

    ReplyDelete
  13. //nidurali said... //
    தாராளமாகச் செய்யலாம். நன்றி!

    //Rajkumar Ravi said... //
    நன்றி!

    //V.Radhakrishnan said... //
    நன்றி!

    ReplyDelete