முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
உங்களுக்கு தேவையான வடிவத்தை வரையவும்.
Saturday, July 31, 2010
அடோப் ஃபிளாஷ் (4)- Shape tween effect
கடைசி வாய்ப்பு - 7
இப்போது ரவிச்சந்திர குமார் வாசலை நோக்கி போனார். பின் ஒருவருடன் வந்தார்.
இருவரும் ஒரு மேஜையின் அருகில் உட்கார்ந்தனர். ஜானுக்கு அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் சரியாக தெரியவில்லை. அவன் கொஞ்சம் நகர்ந்தான்.
அந்த ரிஷப்ஷன் ஹால் வழக்கமானதை போல இல்லை. மேடையில் மணமக்கள் இருந்தனர். ஆனால் இங்கே ஹோட்டல் போல மேஜைகளை போட்டிருந்தனர். ஆங்காங்கே ஒரு சில பேர் இருந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஜானுக்கு குழப்பமாக இருந்தது. ஒரு பணக்காரரின் வீட்டுத் திருமணத்திற்கு இவ்வளவுதான் கூட்டமா?

கடைசி வாய்ப்பு - 6
”யாரு ரவிச்சந்திர குமார்”
“என் எதிரி. அவனுக்கு எனக்கும் என்ன உறவு என்பதை பற்றியெல்லாம் கேட்காதே”
ஜான் அமைதியாக இருந்தான்.
சரவணன் ஒரு ஃபோட்டோவை காண்பித்தார். “இதுதான் ரவிச்சந்திரக் குமார்.”
“என் எதிரி. அவனுக்கு எனக்கும் என்ன உறவு என்பதை பற்றியெல்லாம் கேட்காதே”
ஜான் அமைதியாக இருந்தான்.
சரவணன் ஒரு ஃபோட்டோவை காண்பித்தார். “இதுதான் ரவிச்சந்திரக் குமார்.”
கடைசி வாய்ப்பு - 5
ஜான் அவரைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
ஆனால் சிலவற்றை புரிந்து கொண்டான். அவர் இப்பொழுது ஓரளவு பணக்காரர். அவருக்கென்று எந்த உறவுகளும் இல்லை. இருக்கும் ஒரே உறவு சரவணன் - அவரின் நெருங்கிய நண்பர். அவருக்கு ஒரு எதிரி உண்டு. அது யாரென்று தெரியாது. ஆனால் அதற்காகதான் அந்த எதிரி சம்பந்தபட்ட வேலைக்காகத்தான் தன்னை நியமித்துள்ளார்.
மனம்+: மரண பயம்
உலகத்தில் 100க்கும் மேற்பட்ட பயப் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் எல்லோருக்கும் வரக் கூடிய ஒரே பயம் மரண பயம்தான். மேலும் இந்த மரண பயம் மட்டுமே ஒருவரை கொல்லாமலே கொல்லக் கூடிய பயம்.
அடோப் ஃபிளாஷ் (3)- Fade in Fade out effect
முதலில் அடோப் ஃபிளாஷை திறந்து அதில் ஒரு புதிய Flash Fileஐ திறக்கவும்.
ஸ்டேஜ் சைஸை தேவையானபடி அமைக்கவும்.
ஸ்டேஜ் சைஸை தேவையானபடி அமைக்கவும்.
Friday, July 30, 2010
பீட்டரும் ரோஸியும்
பீட்டரும் ரோஸியும்
எழுதியவர்: எஸ். கே
நாங்கள் மேரியின் வீட்டில் குடியிருந்தோம். எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரிதுதான். ஆனால் எங்களுக்கு சாப்பாட்டு எந்த கஷ்டமும் இருந்ததில்லை. நாங்கள் மேரியின் வீட்டில் மிகவும் சந்தோசமாகத்தான் இருந்தோம், பீட்டர் வரும் வரை.
கடைசி வாய்ப்பு - 4 - எஸ்.கே
”நீ எனக்காக ஒரு பொருளை திருடிகிட்டு வரணும்”
ஜான் இதை எதிர்பார்த்திருந்தான்.
எதை திருட வேண்டும் என்பது போல் அவன் பார்த்தான்.
ஜான் இதை எதிர்பார்த்திருந்தான்.
எதை திருட வேண்டும் என்பது போல் அவன் பார்த்தான்.
கடைசி வாய்ப்பு - 3 - எஸ்.கே
ஜான் சாப்பிட்டு முடித்தான். அவன் சாப்பிடும் வரை அவர் அவன் எதிரிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அவரைப் பற்றி அவர் அவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை வீட்டுக்கு கூட்டி வந்தார் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.
அதுவரை அமைதியாக இருந்தவர். பேச ஆரம்பித்தார். “என் பேர் பாஸ்கர். சுருக்கமாக பாஸ் என்று கூப்பிடுவார்கள். இப்போதைக்கு எனக்கு யாருமே இல்லை”

அடோப் ஃபிளாஷ் (2) - நேரம் அமைத்தல்
முதலில் அடோப் பிளாஷ் சிஎஸ் 3ஐ திறக்கவும். அதில் Create New என்பதில் Flash File (ActionScript 2.0) என்பதை கிளிக் செய்யவும்.
அதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.
அதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.
Thursday, July 29, 2010
அடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்
ஏதாவது தொழிற்நுட்ப பதிவுகள் போடலாம் என்று இந்த பிரிவை ஆரம்பித்து 4 பதிவு போட்டுட்டேன். அப்புறம் என்ன பண்ணலாம்னு தெரியலை, நிறைய பேர் புதிய வெப்சைட்டுகள், அப்புறம் ஃபோட்டோஷாப் மற்ற விஷயங்கள்னு நிறைய மிகச்சிறப்பா எழுதிகொண்டு வராங்க.
சரி புதுசா எதாவது எழுதனும்னு யோசிச்சேன். எனக்கு கொஞ்சம் ஃபிளாஷும் 3D அனிமேஷனும் தெரியும் (எல்லாம் சொந்தமா கற்றுக் கொண்டது). மேலும் தமிழில் இதுவரை யாரும் இவற்றை பற்றி எழுதியது போல் தெரியவில்லை. அதனால் நான் இனிமேல் இங்கே ஃபிளாஷை பற்றி நான் கற்றுக் கொண்டவை, படித்தவை பார்த்தவைகளை பற்றி தமிழில் எழுதப் போகிறேன்.

உடலை அறிவோம் - கண் (பாகம் 3)
சாதாரண பார்வை
படத்தில் காட்டியுள்ளபடி, இணையான திசையில் தொலைவிலுள்ள பொருள்களிலிருந்து செல்லும் ஒளி சிலியரி தசை முழுவதுமாக தளர்ந்த நிலையில் இருக்கும்போது, ரெட்டினாவில் குவிக்கப்படுகிறது. அதாவது சாதாரண கண்ணால் தொலைவிலுள்ள அனைத்து பொருட்களையும் அதன் சிலியரி தசைகள் தளர்வாக இருக்கும்போது, தெளிவாக காண முடியும்.

உடலை அறிவோம் - கண் (பாகம் 2)
உடலை அறிவோம் - கண் (பாகம் 1)
கண் என்பது நம் பார்வைக்கான உறுப்பு. இது மண்டையோட்டில் கருக்கோளக் குழிக்குள் அமைந்துள்ளது. கண் புருவங்கள் கண்ணிற்கு நிழலை அளிக்கின்றன. மேலும் இவை வியர்வை கண்ணுக்குள் சென்று எரிச்சலை ஏற்படுத்தாதவாறு தடுக்கின்றன. கண் இமைகளும், இமை முடிகளும் கண்ணுக்குள் தூசி எதுவும் விழாமல் தடுக்கின்றன. கண் இமைக்கு செயலால் கண்ணீர் கண்ணின் மேல் பகுதியில் பரவி உராய்வு தடுக்கப்படுகிறது. இந்த கண்ணீர் உராய்வினை மட்டும் தடுக்கவில்லை, இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளை கொள்ளும் நொதிகளும் உப்புகளும் உள்ளன.
Monday, July 26, 2010
My collections - Flash clocks
இங்கே அழகிய ஃபிளாஷ் கடிகாரங்கள் உள்ளன. இதைப்போல நூறுக்கும் மேற்பட்ட கடிகாரங்களின் தொகுப்பு
தரவிறக்கம் செய்ய: http://www.4shared.com/file/o-t39hs6/FlashClock.html (1,506 KB)
தரவிறக்கம் செய்ய: http://www.4shared.com/file/o-t39hs6/FlashClock.html (1,506 KB)
Wednesday, July 21, 2010
மாற்றங்களை தரும் இணையதளங்கள்!
நாம் இந்த கணிணி உலகில் பல விதமான கோப்புகளை பயன்படுத்துகிறோம். சில சமயம் ஒரு வகை கோப்பை மற்றொரு வகை கோப்பாக மாற்ற வேண்டியிருக்கும். இந்த வசதியை சில இணையதளங்கள் ஆன்லைனில் இலவசமாக அளிக்கின்றன.
Monday, July 19, 2010
இலவச SMS அனுப்ப....
இணையம் வழியாகவும் SMS எனப்படும் குறுஞ்செய்திகளை மொபைல் போன்களுக்கு இலவசமாக அனுப்பலாம். ஆனால் இவற்றில் பதிவு செய்வது முக்கியமாகும். மேலும் இவற்றில் நாம் அனுப்பும் எழுத்துக்களின் எண்ணிக்கை (குறியீடுகள், எழுத்துக்கள், எண்கள்) ஒரு வரம்பிற்குட்பட்டதே!
Tuesday, July 13, 2010
இலவச வெப்சைட்!
இப்போது நாம் பிளாக்குகளில் நம் கருத்துக்களை நம் எண்ணங்களை எழுதி வருகிறோம்.
வியாபாரத்திற்காக நமக்கென்று ஒரு இணையதளம் இருந்தால் நல்லது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதற்கு domain, webhost என செலவு செய்யும் நிலைமையில் இல்லை என்றால்.. அதற்கு இணைய உலகத்தில் பல இலவச இணையதளங்கள் உள்ளன. hpage, weebly, webs, wetpaint, wix....

கடைசி வாய்ப்பு - 02 - எஸ். கே
நடுநிசி.
ஜான் மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜான்.
தன் இளமைக்காலங்களை வீணாக்கிய ஒரு இளைஞன். சிறு சிறு திருட்டுகளை செய்துவந்தவன். தனக்கென்று யாரும் இல்லாததாலோ என்னவோ மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தான்.
அவன் வாழ்க்கை ஒரு நாளில் மாறுமென அவனுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை.

மனம்+: கோபம்
நீங்கள் மிகவும் (அ) அடிக்கடி கோபப்படுபவரா?
உங்களுக்கு உண்மையாகவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா?
அப்படியென்றால் இந்த பதிவை படியுங்கள்...
கோபம் என்பது அழுகை, பயம், சந்தோசம் போன்ற ஒரு உணர்வுதான். எனவே கோபமே படக்கூடாது என சொல்வது தவறாகும். ஒரு குழந்தை தவறு செய்யும்போது அம்மா அதை அதட்டுவது ஒரு வகை கோபமே. அது தவறல்ல. ஆனால் அது குழந்தை பலமாக அடிக்கும் வகையில் வெளிப்படும்போது?
கோபம் ஏற்படுவதற்கு வயது வரம்பில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை கோபம் ஏற்படுகிறது.
கோபம் ஏன் ஏற்படுகிறது?

Thursday, July 8, 2010
மனம்+ : முக்கியத்துவம்
“என்னங்க நீங்க என்னை முன்ன மாதிரி கவனிக்கிறதே இல்லை” - மனைவி(சில சமயங்களில் கணவன் கூட மனைவியிடம் இப்படி கொ(கெ)ஞ்சுவது உண்டு)
“வேலை செய்யறத விட்டுட்ட மத்ததெல்லாம் செய்யுங்க” - முதலாளி.
“கல்யாணம் ஆனா பிரண்ட்ஸ் எல்லாரையும் மறந்துவீங்களே” - நண்பர்கள்.
“எங்களையெல்லாம் ஞாபகம் வைச்சுப்பீங்களா” என கிண்டல் செய்யும் உறவினர்கள்.
Wednesday, July 7, 2010
கடைசி வாய்ப்பு - 01 - எஸ்.கே
அவன் எழுந்து நின்றான்...
இனிமேல் தாமதித்து பயனில்லை...
அவளா நானா... யாராவது ஒருவர் இறக்க வேண்டும்... அது அவளாக இருக்கட்டும்...
அவளை எப்படிக் கொல்வது?
யோசிக்க ஆரம்பித்தான்......
இனிமேல் தாமதித்து பயனில்லை...
அவளா நானா... யாராவது ஒருவர் இறக்க வேண்டும்... அது அவளாக இருக்கட்டும்...
அவளை எப்படிக் கொல்வது?
யோசிக்க ஆரம்பித்தான்......
வணக்கம்
இனிய வலைத்தள நண்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
இது என் முதல் வலைப்பூ ஆகும். இதுவரை நான் எழுத நினைத்தாலும் தயக்கத்தால் நீண்டகாலம் எழுதாமல் இருந்தேன். தற்போது எழுத துணிந்துவிட்டேன்.
Subscribe to:
Posts (Atom)