Monday, November 22, 2010

அடோப் ஃபிளாஷ் (64) - Transportation Effect

முதலில் ஒரு பேக்ரவுண்ட் படத்தை எடுத்துக் கொள்ளவும். பிறகு புதிய லேயரை(pic layer) உருவாக்கி அதில் ஒரு நபரின் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக மாற்றிக் கொள்ளவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். மூன்றாவதாக ஒரு லேயரை(effect layer) உருவாக்கி அதிலும் அந்த சிம்பலை எடுத்து விடவும்.




எஃபக்ட் செய்யும் முறை: 

இரண்டாவது லேயரை லாக் செய்து கொள்ளவும். மூன்றாவது லேயரில் சிம்பலை செலக்ட் செய்யவும். பிறகு கீழே பிராப்பர்டி சேனலில் colorல் Tintஐ தேர்ந்தெடுத்து வெள்ளை நிறத்தை 100% கொடுக்கவும்.
பிறகு கீழே Filtersல் +ஐ கிளிக் செய்து Blurஐ தேர்ந்தெடுக்கவும். Blur X, Y ஐ 11 என கொடுக்கவும். Qualityஐ Low என கொடுக்கவும்.

பிறகு 10 பிரேம்களுக்கு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 11வது பிரேமில் Blank keyframeஐ இன்சர்ட் செய்யவும். கடைசி 2 பிரேமை தவிர்த்து மீதி பிரேம்களில் படத்தை கிளிக் செய்து பிராப்பர்டி பேனலில் Colorல் Alpha: 0% என கொடுக்கவும்.





படத்தினை காண்பிக்கும் முறை:

மூன்றவாது லேயரை லாக் செய்து விட்டு இரண்டாவது லேயருக்கு வரவும். லாக்கை எடுத்து விடவும். 1வது பிரேமில் உள்ள கீபிரேமை 11வது பிரேமுக்கு இழுத்துவிடவும். அப்படியே 12வது பிரேமிலும் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் 11வது பிரேமை கிளிக் செய்து படத்தை கிளிக் செய்யவும். Filtersல் +ஐ கிளிக் செய்து Glowஐ தேர்ந்தெடுக்கவும். Blur X, Y ஐ 57 என கொடுக்கவும். வெள்ளை நிறத்தை தேர்ந்தெடுக்கவும். Qualityஐ Low என கொடுக்கவும்.


60வது பிரேமில் ஒரு கிபிரேமை இன்சர்ட் செய்யவும். 61வது பிரேமில் ஒரு blank keyframeஐ இன்சர்ட் செய்யவும். இதேபோல் மூன்றாவது லேயரில் 60வது பிரேமில் ஒரு blank keyframeஐ இன்சர்ட் செய்யவும். கடைசியாக மூன்றாவது லேயரில் 1முதல் 10வது பிரேம்களை செலக்ட்செய்து காபி செய்து 61 பிரேமில் பேஸ்ட் செய்யவும்.


மேலும் அடுத்த எஃபக்ட்டு இடைவெளியாக 10 பிரேம்களை காலியாக விடவும். இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் சிம்பலை நுழைத்து அதன் அளவை மாற்றவும். பிறகு எஃபக்ட் மற்றும் படத்திற்கு தேவையானதை செய்யவும்.

DEMO:



11 comments:

  1. எஸ்.கே... என்ன இது யாருமே இல்லாத டீ கடை போல ஆகிடிச்சு... நல்ல விசயங்களில் இருக்கக்கூடிய பலவீனமே இதுதான்... ஆனால் மனம் தளராதிருங்கள்... :)

    ReplyDelete
  2. செய்து பார்த்தேன் அழகாக வந்தது, பதிவிட்டமைக்கு நன்றி...

    -அன்புடன் பல்லவன்

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ‌‌ச‌ேர்

    ReplyDelete
  4. //Sugumarje said...//
    நன்றி சார்!
    நீங்க சொன்ன மாதிரி சில சமயம் பார்க்கிறாங்களா இல்லையான்னே தெரியாது!:-) ஆனாலும் நான் என் பணியை தொடர்வேன்! இது என்றாவது யாருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில்!

    //p said...//
    மிக்க நன்றி நண்பரே!

    //பிரஷா said...//
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  5. //vanathy said... //
    நன்றிங்க!

    ReplyDelete
  6. மிக,மிக அற்புதமாக உள்ளது.நேரம் கிடைக்கும்போது முயற்சித்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. மிகவும் நன்றாக உள்ளது.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்- நண்றி

    ReplyDelete
  8. மிகவும் அருமை!! எனது கல்லூரியில் கூட இவ்வளவு கற்றுக் கொள்ளவில்லை!! இதனை மின்னூல் ஆக மாற்றித் தந்து அடிக்கடி இணையம் உபயோகம் செய்ய முடியாதவர்களுக்கு உதவுங்கள்!!!

    ReplyDelete
  9. நன்றாக இருக்கிறது.ஆனால் நடுவில் ஆளையே காணோம். உங்கள் பணி மேலும் தொடர விரும்புகிறேன்.

    ReplyDelete