Sunday, November 7, 2010

கனவுகள் 12 - பயங்கர கனவுகள் (3)

If you can dream it, you can do it.       -Walt Disney
ஒரு ஆளின் கனவு: நான் என் வீட்டிற்கு வந்து என் கதவை திறந்தேன். அங்கே என் முதலாளி என் வீட்டு சோஃபாவில் அவரின் மகளோடு உட்கார்ந்திருந்தார். அவர்கள் என் வீட்டு டிவியில் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பால்கனிக்கு சென்றேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கண்டு பயந்து விட்டேன். அந்த பாம்பு ஒரு வட்ட வடிவில் சுருண்டு இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, என் முதலாளி பாம்பிடம் என்னை கடிக்கச் சொன்னார், அது என் மணிக்கட்டில் கடித்தது. நான் உடனே என் நண்பர்களை அழைத்தேன். அவர்கள் என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்துவர் என்னை குணமாக்கினார் பிறகு நான் விழித்து விட்டேன்.


விளக்கம்: நீங்கள் உங்களை விட ஆற்றல் மிக்கவர்களால்(உதாரணமாக பெற்றோர்கள், முதலாளி, உயர் அதிகாரி) விருப்பமில்லாமல் எதையோ செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள். உங்கள் கனவு உங்களுக்கு வேலையில் சில கஷ்டங்கள் உள்ளதை  காட்டுகிறது, விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்தார்போல் நிகழவில்லை. நீங்கள் உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும், அதிகமாக வேலை செய்வது உடலை சோர்வடையச் செய்யலாம்.

------------------------------

பயங்கர கனவுகள் நம் சுய நினைவின்/வெளி மனதின் மனப்பாங்கின் பதிலீடு மற்றும் நம் நிஜ வாழ்வின் கவலைகள், பயங்களின் எதிரொலிப்பாக கனவுகள் வருவதாக விஞ்ஞானி கார்ல் ஜங்க்(Carl Jung) சொல்கிறார். ஆனால் ஃபிராய்டு பயங்கர கனவுகளை பல்வேறு விதமாக சொல்கிறார். கனவுகள் சமூகம் நமக்கு தடை விதித்துள்ளவைகளை செய்ய முடியாத தோல்வியின் விளைவாக வருகின்றன. மேலும் கனவுகள் ஆசைகளை மனது நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு வழியாகவும் கூறுகிறார். அவர் கூறுவதாவது, மனிதன் பயமுறுத்தப்பட விரும்புகிறான்- உதாரணமாக, நாம் ஹாரர் படங்களையும், ரோலர் கோஸ்டர்களையும் விரும்புவது.

பயங்கர கனவுகளை பொறுத்த வரை மூன்று விஷயங்கள் கனவிலும் கனவு கண்ட பிறகும் இருக்கும். 1. பயம் 2. கோபம் 3. கவலை. இந்த மூன்று உணர்ச்சிகள் முதன்மையாக இருந்தாலும் கூடுதலாக தோல்வி, வருத்தம், ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளும் கலந்து இருக்கலாம். ஒருவருக்கு பூச்சிகள் பற்றிய பயம் இருந்தால், பூச்சிகள் அதிகமாக கனவில் வரலாம். அப்பயத்தை குறைக்கும்போது அவ்வகை கனவுகளும் குறையும். பயம் பயங்கர கனவுகளின் பிராதான உணர்வாகும்.

பயங்கர கனவுகளில் வரக்கூடிய பொதுவான தீம்கள்:

 • உடலை வருத்திக் கொள்ளுதல்/காயப்படுத்துதல்/காயப்படுதல்
 • மரணம் விளைவிக்கக் கூடிய காயங்கள்
 • உடல் உறுப்புகளை இழத்தல்/துண்டித்தல்/இல்லாமல் இருத்தல்
 • கட்டுப்பாடு இல்லாதிருத்தல்/இழத்தல்
 • ஏதாவது ஒன்றை பறிகொடுத்தல்
 • மிகவும் நெருக்கமானவருக்கு/நேசிக்கப்படுபவருக்கு பாதிப்பு ஏற்படுதல்
 • இயற்கை அழிவுகள்/ ஆபத்துக்கள்/விபத்துகள்
 • தீமை/அழிவு/துன்பம்
 • மரணத்தை விட மோசமானவை


சில பயங்கர கனவுகள் சாதாரணமானவைகளே. உதாரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் 40% பயங்கர கனவுகள் இயல்பான கற்றல் வளர்ச்சியின் ஒரு பகுதியே ஆகும். பயங்கர கனவுகள் உடல்நலத்தை பற்றி சுட்டிக்காட்டலாம். நல்ல உடல்நலத்துடன் காணப்பட்ட ஒரு 43 வயது பெண்மணிக்கு அதிகமாக கவலை சம்பந்தபட்ட கனவுகள் வ்ந்து கொண்டிருந்தன. அவரை மருத்துவரீதியான சோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு இதயத்தில் ஒரு சிறு பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது.

பயங்கர கனவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விடக்கூட உதவும்.  REM எனப்படும் துரித கண் அசைவுகளை வெளிப்படுத்திய William C. Dement அவர்களின் வாழ்வில் நடந்தது. அவர் அப்போது மிக அதிகமாக சிகரெட் பிடிப்பவராக இருந்தார். அவருக்கு வந்த ஒரு கனவில் அவருக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் புற்றுநோய் வருகிறது. அதனால் மரண பயம் அவருக்கு அதிகமாக எழுகிறது. அவர் குடும்பம் வளர்வதை அவரால் பார்க்க முடியாதாதால் வருத்தப்படுகிறார். மேலும் அவரின் இழப்பால் குடும்பமும் கஷ்டப்படுகிறது. இக்கனவு கண்ட அடுத்த நாள் அவர் சிகரெட் பழக்கத்தை விட்டு விட்டார்.

பயங்கர கனவுகளை சரி செய்ய கனவை நன்கு ஆராய வேண்டும். ஆழ்மனம் என்ன சொல்ல வருகிறது என தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மேலும் கனவை நீங்கள் தெளிவாக உணர வேண்டும். (இதற்கு தெளிவாக கனவு காணும் முறையை அறிய வேண்டும். வரும் பதிவுகளில் இதை காண்போம்). உங்களுக்கு ஒரு பயங்கர கனவு வந்தால் அதை ஒரு நோட்டில் எழுது வையுங்கள். நம்பகமானவர்களிடம் அதை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு படம் வரைதல்/கதை/கவிதை எழுதுதல்போன்றவை முடியுமானால் உங்கள் கனவை அடிப்படையாக வைத்து ஒரு படம்/கதை/கவிதையை உருவாக்குங்கள். அதை ஆழ்ந்து நோக்குங்கள், உங்களுக்கு சில விசயங்கள் தானாக புரியும்.

பயங்கர கனவுகளை சரி செய்ய பயன்படும் முக்கிய முறையான Imagery Rehearsal Therapy பற்றி காண்போம். அதன் படிகளாவன:

1.  உங்கள் கனவை பற்றி எழுதுங்கள். அது எவ்வளவு பயங்கர மாக இருந்தாலும் சரி உங்களுக்கு நினைவிலிருக்கும் வரை தெளிவாக விவரமாக எழுதவும்.

2.  உங்கள் பயங்கர கனவிற்கு ஒரு புதிய முடிவை நீங்களே உண்டாக்கி அதனையும் எழுதுங்கள். அந்த  முடிவு அமைதியானதாக இருக்க வேண்டும். உங்கள் கனவு கோபம், பயம் போன்ற உணர்வுகளால் நிறைந்திருக்கலாம். அதானல் உங்கள் புது முடிவு அந்த உணர்வுகளை மட்டுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும், மாறாக தூண்டக்கூடாது.

3. ஒவ்வொரு இரவும் தூங்கும் முன் உங்கள் புது முடிவை கற்பனையாக மனதில் நினைத்து பார்க்கவும். இதை தூக்கம் வரும் வரை செய்யவும். இது ஒத்திகை எனப்படும். இந்த செயல் மற்றும் தூக்கத்திற்கு இடையே வேறு செயல்களை செய்யாமல் இதை மட்டும் செய்யவும்.

4. இந்த ஒத்திக்கைக்கு பிறகு உடனேயே ஒரு ஓய்வு பயிற்சியை செய்யவும். (ஓய்வு பயிற்சி பற்றி தனியாக பதிவிடுகிறேன்). ஓய்வு பயிற்சிக்கு பதிலாக தியானம், யோகா, மூச்சுப் பயிற்சிகளி கூட செய்யலாம். இது மூச்சை சீராக்கி தூக்கத்தை வரவழைப்பதற்காகத்தான்.

இப்படி செய்வதால் தொடர்ந்து வரும் பயங்கர கனவுகளின் தொல்லை நீங்கும்.

பயங்கர கனவுகள் வரவேற்கப்படாத ஆசிரியர்கள் போன்றவை. அவை தாங்கி வரும் பரிசுகள் ஏராளம். அதை நீங்கள் தெளிவாக புரிந்துகொண்டால் நன்மைகள் பல.


அடுத்து வரும் பதிவில் தெளிவான கனவுகளும், அதன் பயிற்சிகளும்.........


28 comments:

 1. கனவைப்பற்றி அருமையாகவும் மிகவும் தெளிவாகவும் எழுதி வருகிறீர்கள் உங்கள் மூலம் கனவைப்பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது அருமை சார்,

  உங்கள் பொன்னான பணி தொடர்ந்து சிறக்க வேண்டும்
  அடுத்து வரும் பதிவில் தெளிவான கனவுகளும், அதன் பயிற்சிகளும்........
  விரைவில் எதிர்பார்த்து...

  பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  வாழ்க வளமுடன்

  என்றும் நட்புடன்
  மாணவன்

  ReplyDelete
 2. கனவு பற்றிய நிறைய தகவல்களை பக்கட்டுக்குள் வைத்திருக்கிறீர்கள் போலுள்ளது :-) வாசிக்கும்போது விறுவிறுப்பாகவும் லேசான பயமாகவும் இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 3. Nightmare !!! படங்களை பார்த்தாலே, பயங்கர கனவுகள் வரும் போல.... அவ்வ்வ்வ்.....

  ReplyDelete
 4. அட பாவி!! நீ போட்டு இருக்க படத்த பார்த்தா தான் இன்னைக்கு நைட்டு எனக்கு கனவு வரும் போல... அவ்வ்வ்வ்!!!

  ReplyDelete
 5. பயங்கர கனவைப் பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்! அவைகளை தவிர்க்க சொல்லி இருக்கும் வழிமுறைகள் அருமை! தொடருங்கள் உங்க பணி! எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் உங்க பதிவுகள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. இவ்வளோ விஷயங்கள் இருக்கா? கன்வு கண்டமா எழுந்து மறந்தோமானு இருந்தேன் இனி நினைவுக்கு கொண்டுவரனும் போலயே!

  ReplyDelete
 7. சார் பதிவு வழக்கம் போல் சூப்பர்

  ReplyDelete
 8. சார் ஒரு சிறிய சந்தேகம் தெரிந்தால் கொஞ்சம் விளக்கவும்.
  தூங்கி கொண்டிருக்கும் போது சில நேரங்களில்(நேற்றும்) மூச்சு திணறல் ஏற்படுகிறது கைகால்களை அசைக்க முடியவில்லை. கண்களை கூட திறக்க முடியவில்லை வீட்டில் கூறினால் பேய் அழுத்தினால் அப்படி தான் இருக்குமென்கின்றனர் . எனக்கு அதில் நம்பிக்கை இல்லாததால் உங்களிடம் கேட்கிறேன் அதற்கு என்ன காரணம்.

  ReplyDelete
 9. வழக்கம் போல பதிவு நல்லாயிருந்தது.. தொடருங்கள்..

  ReplyDelete
 10. //மாணவன் said...//
  மிக்க மிக்க நன்றி நண்பரே!

  //எப்பூடி.. said...//
  மிக்க நன்றிங்க!

  //Chitra said...//
  :-) நன்றிங்க!

  //TERROR-PANDIYAN(VAS) said...//
  எல்லாம் நன்மைக்கே! :-)

  //என்னது நானு யாரா? said...//
  மிக்க நன்றி நண்பரே!

  //அருண் பிரசாத் said...//
  மிக்க நன்றிங்க!

  //சசிகுமார் said...//
  சில சமயம் கனவுகள்(குறிப்பாக பயங்கர கனவுகள்) வரும்போது இப்படி உடல் அசைவுகள் தடைபடுவது இயற்கையே! இது பேய் எல்லாம் இல்லை.
  சாதாரணமாகவே தூங்கும்போது நம் உடல் கிட்டதட்ட கோமா நிலையில் உள்ளதுபோல் அசைவற்று கிடக்கும். கனவில் வரும் நிகழ்வுகளால் உடல் இறுக்கமாகி இப்படி ஆகிறது. இதனால் பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால் உடல் திறன் குறைவாக இருந்தாலும் இப்படி ஆகலாம். எனவே உடலை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.

  //பதிவுலகில் பாபு said...//
  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 11. கனவு பற்றிய தகவல்களை விறுவிறுப்பாக உள்ளது.

  ReplyDelete
 12. ரொம்ப நல்ல பகிர்வுங்க..

  தயவுசெஞ்சு கொஞ்சம் பயங்கரம் குறைவான படங்கள் சேர்த்துக்கோங்களேன்.. படம் தவிர்த்து பக்கத்தில இருக்கிறத படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. முழுமையா நிறுத்தி நிதானமா படிக்க முடியலை..

  ஆவ்வ்வ்..

  ReplyDelete
 13. கனவுகள், ஆவிகள் என்று ஒரு மாதிரியான பதிவுகளை எழுதுகிறீர்களே... என்ன காரணம்... உங்கள் ப்ரோபைல் படம் கூட ஆவிபோல இருக்கிறது...

  ReplyDelete
 14. எஸ்கே,
  நல்ல வித்தியாசமான விஷயத்தை மிக அருமையாக எழுத ஆரம்பித்துள்ளீர்கள்.மேலும் தொடருங்கள்.

  ReplyDelete
 15. பாதிக் கனவு எனக்கு காலையில் எழுந்தா மறந்து போயிடுது!

  ReplyDelete
 16. பயங்கர கனவைப் பற்றி அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்! அவைகளை தவிர்க்க சொல்லி இருக்கும் வழிமுறைகள் அருமை! தொடருங்கள் வாழ்த்துக்கள்........

  ReplyDelete
 17. இப்பிடிப் படத்தைப் போட்டுப் பயமுறுத்தினா எப்பிடி வாசிக்கிறது.படபடன்னு இருக்கு !

  ReplyDelete
 18. நல்லா இருக்கு உங்கள் கனவுகள் பற்றிய பதிவு. இனிமேல் கனவுகள் கண்டால் உடனே உங்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

  ReplyDelete
 19. கனவுகள் கலக்குகின்றன

  ReplyDelete
 20. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க எஸ்.கே!! ஆனா நமக்கு வர்றதெல்லாம் ரொமேன்டிக் கனுவுகளா இருக்கே... ஹி ஹி ஹி ..

  ReplyDelete
 21. //அன்பரசன் said...//
  மிக்க நன்றிங்க!

  //சுசி said...//
  மன்னிக்கனும். அடுத்த முறை குறைவா படம் போடுறேன்!

  //சசிகுமார் said...//
  நன்றி நண்பரே!

  //philosophy prabhakaran said...//
  கனவு நான் படித்த சைக்கலாஜியின் விளைவு, ஆவி அது ஒரு விளையாட்ட செஞ்சத சொன்னேன் அவ்வளவுதான் நண்பா. புரொஃபைல் படம் ஆவி இல்லை அது ஒரு அனிமேஷன் பட (Monster Inc) கேரக்டர். நன்றி நண்பரே!

  //|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...//
  நல்லாயிருக்கீங்களா! ரொம்ப நன்றி! நான் இவ்வளவெல்லாம் எழுத நீங்களும் முக்கிய காரணம்.

  //சிவா said...//
  கனவை ஞாபகம் வைக்க வழிகள் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அது மட்டுமில்லாம இனிவரும் பதிவுகளில் வரும்... நன்றி!

  //பிரஷா said...//
  மிக்க நன்றிங்க!

  //ஹேமா said...//
  பயங்கர கனவு முடிஞ்சிருச்சிங்க! இனி இந்த மாதிரி படம் வராது. நன்றிங்க!

  //vanathy said...//
  கேளுங்க தெரிஞ்சத சொல்றேன்! நன்றிங்க!

  //padaipali said...//
  மிக்க நன்றி நண்பரே!

  //கோவை ஆவி said...//
  நன்றிங்க! எந்த கனவா இருந்தா என்ன, மகிழ்ச்சி கிடைச்சா போதும்.

  ReplyDelete
 22. If you can dream it, you can do it. -Walt Disney

  அசத்தல் வார்த்தையுடன் ஆரம்பிதிருக்கிறீர்கள்..அருமை

  ReplyDelete
 23. கனவுகளைப் பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளவும்,புரிந்துகொள்ளவும் முடிகிறது பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 24. கனவுக்குள் இத்தனையிருக்கா
  அம்மாடியோ அதிலும் பயங்கர கனவு.. திகிலான விளக்கங்கள்.. அருமை..

  ReplyDelete
 25. //அதிகமாக சிகரெட் பிடிப்பவராக இருந்தார். அவருக்கு வந்த ஒரு கனவில் அவருக்கு குணப்படுத்த முடியாத நுரையீரல் புற்றுநோய் வருகிறது. அதனால் மரண பயம் அவருக்கு அதிகமாக எழுகிறது. அவர் குடும்பம் வளர்வதை அவரால் பார்க்க முடியாதாதால் வருத்தப்படுகிறார். மேலும் அவரின் இழப்பால் குடும்பமும் கஷ்டப்படுகிறது. இக்கனவு கண்ட அடுத்த நாள் அவர் சிகரெட் பழக்கத்தை விட்டு விட்டார்.//

  நம்பவே முடியல ., இங்க நிறைய பேர் சிகரட் , தண்ணி அடிக்கிறாங்க .. அவுங்களுக்கும் இந்த மாதிரி கனவு வந்து அந்தப் பழக்கத்துல இருந்து விடுபட்டுட்டாங்க அப்படின்னா சந்தோசமா இருக்கும் .. உண்மைலேயே அருமையா போயிட்டு இருக்கு அண்ணா .. தொடர்ந்து எழுதுங்க .. எனக்கு இந்த வாரத்துல வேலை கொஞ்சம் அதிகமா போய்டுச்சு .. அதனால்தான் தாமதம் ..௧!

  ReplyDelete
 26. பயங்கரக்கனவு இனிமே கண்டிப்பா வரும்.. இப்படி படங்களைப்போட்டு பயமுறுத்திட்டீங்களே :-)))

  அருமையாக எழுதுறீங்க.. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 27. //padaipali said...//
  நன்றி நண்பரே!

  //Thomas Ruban said...//
  மிக்க நன்றி நண்பரே!

  //அன்புடன் மலிக்கா said...//
  ரொம்ப நன்றிங்க!

  //ப.செல்வக்குமார் said...//
  நீங்க எதிர்பார்ப்பது நடந்தால் நல்லதுதான் நன்றி நண்பா!

  //அமைதிச்சாரல் said...//
  ரொம்ப ரொம்ப நன்றிங்க!

  ReplyDelete