“Great dreams of great dreamers are always transcended.”
(சிறப்பாக கனவு காண்பவர்களின்) சிறந்த கனவுகள் எப்போதும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவைகளாக, அனுபவ வரம்பை மீறியவைகளாகவே இருக்கின்றன.
கனவு என்பது ஒரு சாதாரணமான ஒன்று. அதுபாட்டுக்கு நடந்துட்டு போகட்டுமே. அதை ஏன் இப்படி யோசிக்க வேண்டும்? அதை ஏன் ஞாபகம் வைக்க வேண்டும்? அதைப் பற்றி நாங்கள் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? அதற்கு விதிகள், பலன்கள், இப்படி நடக்கணும் அப்படி நடக்கனும்கிறதெல்லாம் தேவையா? இதற்கு இத்தனை பதிவுகளா என நீங்கள் நினைக்கலாம்.
சரி, நம் உடலில் ஏன் வியர்க்கிறது? ஏன் நம் இதயம் துடிக்கிறது? நம் சிறுநீரகம் ஏன் வேலை செய்கிறது? நமக்கு ஏன் முடி முளைக்கிறது?
இந்த எல்லா கேள்விகளுக்கு ஒரு பதில் உண்டு. இவையெல்லாம் தானாக உடலில் நிகழும் நிகழ்வுகள். ஆனால் உடல் எந்த செயலையும் தேவையில்லாமல் செய்வதில்லை. எல்லாவற்றிற்கு ஒரு முக்கியமான அவசியமான காரணம் உண்டு!!
நாம் தூங்குகிறோம். அது எதற்காக? மூளை ஓய்வெடுக்கவா? இல்லவே இல்லை! தூங்கும்போதும் மூளை செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. தூக்கம் பிறகு உறுப்புகளுக்கு கொஞ்சம் ஓய்வளிக்கவே நடக்கிறது. சரி அப்படிபட்ட தூக்கத்தில் மூளை செயல்பட்டு கொண்டே இருக்கின்ற போது, அதில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ளும் கனவுகள் தேவையற்றதா?????
அப்படி தேவையற்றதானால் ஏன் நம் மூளை அதற்கு அனுமதிக்க வேண்டும்? நாமாக செய்வதானால் அது தேவையற்றதாக இருக்கலாம், ஆனால் கனவுகள் தானாக நடக்கும் செயல்! அப்படியானால் கனவுகள் நம் உடலுக்கு, நம் மனதிற்கு அவசியம் தேவை!!!!
பெரும்பாலான நேரங்களில் மூளை கனவுகளை ஒரு வடிகாலாகவே பயன்படுத்துகிறது. ஆம்! நம் ஆசை, விருப்பு, வெறுப்பு, கோபம், பயம், விரக்தி போன்று, நாம் வெளி உலகில் முழுமையாக வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தவே கனவுகளை உருவாக்கிறது. கனவுகள் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடி!
மூளை தன்னுள் பதித்து வைத்துள்ள நினைவுகளை, ஞாபகங்களை கொண்டு அதில் உணர்வுகளை புகுத்தி, சம்பவங்கள், இடங்கள் போன்ற ஒரு மாய உலகத்தை படைத்து கனவுகளை உருவாக்குகிறது. இப்படி பல விஷயங்களை ஒரே சமயத்தில் கலப்பதால் அது புரியாததாக தோன்றுகிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால் அது சொல்ல வரும் விஷயம் தெரியும்.
சரி, கனவுகள் உடலுக்கும் மனதுக்கும் அவசியமானதென்றே வைத்துக் கொள்வோம். அதுபாட்டுக்கு நடந்து போகட்டுமே. அதை ஏன் நான் ஞாபகம் வைக்க வேண்டும்? அதற்கு வழிமுறைகளெல்லாம் செய்ய வேண்டும்? என கேட்பீர்களானால்.....
**************************
இந்த தொடரை ஆரம்பித்த காரணம், கனவு பற்றி எனக்கும் ஆர்வம் இருந்ததால் அதைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என நினைத்தேன். ஆனால் எழுத ஆரம்பித்தவுடன் அதைப் பற்றி ஆராய ஆராய அதன் பலன்கள் ஆச்சரியமாக இருந்தது. அதைப் பற்றி மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களும் பலனடைந்தால் மகிழ்ச்சியே என்று நினைத்தே எழுதுவதை தொடர்ந்தேன். அது நீளமாகி விட்டது. ஆனால் இப்படி எழுதாவிட்டால் தொடரின் பலன் கிடைக்காதோ என்று எண்ணி தொடர்கிறேன்.
இந்த தொடரின் மைய நோக்கம் தெளிவான கனவுகள் தான்!!! ஏன்?
தெளிவான கனவுகள் ஒரு வித்தியாசமான அனுபவம், உணர்வை அளிக்கும். அதே சமயம் அதற்கு பலன்கள் அதிகம்!
எதிர்காலத்தை அறிதல், உடலை விட்டு வெளியேறுதல் போன்ற பலன்களை விட்டு விடுங்கள்! ஏனெனில் அவற்றை நம் அறிவு நம்ப இயலாது! ஆனால் நிச்சயமாக தெளிவான கனவுகளை காணும் வழிகளை கற்றுக் கொண்டு அதை செயல்முறை படுத்தும்போது சில பலன்களை நீங்கள் கண்கூடாக உணர முடியும்.
உங்கள் அறிவு/புத்திக்கூர்மை அதிகமாகும்
பிரச்சினைகள், குழப்பங்கள் போன்றவை எளிதாக தீர்ப்பீர்கள்
உங்களுக்குள் இருக்கும் மனரீதியான பிரச்சினைகள் எளிதில் சரியாகும்.(தானாக எப்படி சரியானதென்று கூட தெரியாது!)
ஒரு மாயலோகத்திற்கு இனிமையான பயணம் சென்று வருவது போன்ற இன்ப உணர்வை அளிக்கும்
முக்கியமாக எப்போதும் மனதில் உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும்!
தெளிவான கனவுகளை ஞாபகம் வைப்பதும், கனவை கனவென்று உணர்ந்து கனவு காணுதலும் எளிதான விஷயமல்ல! அதற்கென சில வழிமுறைகளை நாம் கையாளத்தான் வேண்டும். சில வழிகள் குழப்பமாக இருக்கலாம்! இது எப்படி பலனளிக்கும் என தோன்றலாம். ஆனால் அவற்றை பயன்படுத்தி பார்த்தலே சரியான விடையை உங்களுக்கு அளிக்கும்.
-----------------------
கனவை கனவென்று உணர்ந்த பின் அது எப்படி கனவை தொடர முடியும் என்றால்,
முடியும் அதை நீங்கள் உணர்ந்திருக்கலாம், உதாரணமாக என் சிறுவயது கனவொன்றை சொல்கிறேன். இதன் அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை. ஆனால் நினைவில் தங்கிவிட்டது. கனவின் ஆராய்ச்சியில் அதைப் பற்றி புரிந்து கொண்டேன்.
எனக்கு பூந்தளிர் போன்ற புத்தகங்களில் ஆர்வம் அதிகம். ஆனால் அவை எனக்கு படிக்க கிடைக்கவில்லை. அதன் மீதான ஆசை அதிகம் இருந்தது.
நான் என் கிராமத்து வீட்டில் ஒரு அறையில் எதையோ தேடும்பொழுது பூந்தளிர் புத்தகங்கள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்தவுடன் அளவில்லா மகிழ்ச்சி! உடனே ஒரு புத்தகத்தை எடுத்து அதில் ஒரு கதையை (அது ஒரு விருப்பமான கதை) படிக்க ஆரம்பித்தேன். சுவாரசியமாக ஒவ்வொரு பக்கமாக படித்து கொண்டிருந்தபோது ஒரு பக்கத்தை காணவில்லை, அது எங்கே என தேடியபோது அங்கே அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்கள் எதையும் காணவில்லை! தலை சுற்றுவது போல் இருந்தது. அந்த பக்கம் எங்கே என தெரியவில்லை. எனக்கு அது கனவு என புரிந்தது. ஆனால் நான் அதிலிருந்து விலக விரும்பவில்லை, (மிக முக்கியம்- நான் கண் விழிக்கவில்லை) கட்டாயமாக மீண்டும் கதைப் புத்தகத்தை பார்த்து மீதம் இருந்த கதைப்பகுதியை படித்தேன். ஆனால் அதற்கு மேல் தொடர முடியவில்லை. நான் கண் விழித்தேன்.
அந்த கனவு அதிகபட்சம் 10 நிமிடம் இருந்திருக்கலாம். ஆனால் அது தந்த அந்த இன்ப உணர்வை உண்மையாக அந்த புத்தகத்தை அதன் பின் படித்தபோது கூட ஏற்படவில்லை. அதுதான் தெளிவான கனவின் அற்புதம்!
ஆனால் என் வாழ்வில் அப்படி ஒருமுறைதான் நிகழ்ந்தது! எனவே தெளிவான கனவுகளை கனவென்று உணர்ந்தபின்னும் தொடர முடியும்!
-----------------
இந்த பதிவை எழுதக் காரணம் சில பின்னூட்டங்கள். அதன் சாராம்சம், கனவின் பயன்கள், அதன் விளக்கங்களை அவர்கள் சரியாக புரிந்துகொள்ள வில்லையோ அல்லது நான் சரியாக சொல்லவில்லையா என சந்தேகம் எழுப்பிவிட்டது! அதனாலேயே சிறிது விளக்கம் கொடுக்கும் வகையில் இந்த பதிவு! ஆனால் இது என் ஆராய்ச்சியை மேலும் செம்மைபடுத்தியுள்ளது!
இதுவரை தொடர்ந்து இத்தொடரை படித்துவரும் அனைவருக்கும் மிக்க நன்றிகள்! இதனால் ஒருவர் பயன்பட்டாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!
இனி கனவுகளை மேலும் தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன். அடுத்த பதிவில் தெளிவான கனவுகள் தொடரும்!
waiting
ReplyDeleteகனவைப்பற்றி அருமையான தகவல்களை சிறப்பாக எழுதிவருகிறீர்கள் அற்புதம் சார்,
ReplyDeleteஉங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
வாழ்க வளமுடன்
நன்றி
தெளிவான கனவுக்காய் காத்திருக்கிறேன்....
ReplyDeleteகனவில கூட கனவை பத்திதான் சிந்திப்பீங்க போல :-) கலக்குங்க.
ReplyDeleteசுவாரசியமா எழுதியுள்ளீர்கள்
ReplyDeleteசுப்பரா போகுது கனிவில் உங்களுக்கு வாழ்த்துக்கள்
எப்போதும் போல அருமையான பதிவு..
ReplyDeleteதெளிவான கனவுகளுக்காகக் காத்திருக்கிறேன்..
அருமையான பதிவு .............தொடரட்டும் கனவுகள் ..............
ReplyDeleteஎனது சில சந்தேகங்களுக்கு உங்கள் தொடர் விளக்கமளித்தது. மேலும் தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteசில நிஜங்கள் கனவுமாதிரி இருந்தா நல்லாருக்கும்.,
ReplyDelete-நண்பனின் பிரிவு.,
-உறவுகளின் இறப்பு.,
-கஸ்ட்டங்களின் நிகழ்வு.,
-சந்தோசத்தின் முடிவு.
சில கனவுகள் நிஜமாக நடந்தாலும் நல்லாருக்கும்.,
-காதலியுடன் இணைவு.,
-குழந்தை பிறப்பு.,
-சொந்த ஊர் பயணம்.,
-நல்ல வேலை நியாமான சம்பளம் சரியான நேரத்தில் கிடைப்பது.
தங்களின் இத்தொடர் சவாரசியமாகப் போகிறது வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
கனவு ஸ்வாரஸ்யமாக போகிறது..உங்களால்தான் என் கனவுகளை நான் தினசரி ஆராய்ச்சி பண்ணும் ஒரு புது நோய்க்கு ஆட்பட்டு இருக்கிறேன்னா பாருங்க
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களின் இதர கனவு பதிவுகளை படித்து வியந்தேன் கனவிற்குள் இவ்வளவு விடயங்களா..தெளிவான கனவு காண்பதற்கு காத்திருக்கிறேன்
ReplyDeleteஅருமை..தொடரட்டும் உங்கள் பணி...
ReplyDeleteரொம்ப புதிய கனவுத் தகவல்கள். அதிசயம்.. கூடவே பிரமிப்பு..
ReplyDeletegood post
ReplyDeleteஅதனால்தான் 'கனவே கலையாதே' அப்படின்னு பாடியிருக்கங்களோ ?
ReplyDeleteஅருமையான பதிவு..
ReplyDeleteஅருமை நண்பா
ReplyDeleteஅருமை S.K
ReplyDeleteஅருமையான கட்டுரைகள்..
ReplyDelete//எனவே தெளிவான கனவுகளை கனவென்று உணர்ந்தபின்னும் தொடர முடியும்!//
இது எனக்கும் நடந்துள்ளது :)
Keep rocking!
ReplyDelete//மகிழ்ச்சியே என்று நினைத்தே எழுதுவதை தொடர்ந்தேன். அது நீளமாகி விட்டது. ஆனால் இப்படி எழுதாவிட்டால் தொடரின் பலன் கிடைக்காதோ என்று எண்ணி தொடர்கிறேன்.//
ReplyDeleteகண்டிப்பா தொடருங்க ..!! தொடர்ந்தே ஆகணும்.. ஏன்ன நானும் இன்னும் நிறைய தெரிஞ்சிக்க விரும்புறேன் ..!!
//ஒரு மாயலோகத்திற்கு இனிமையான பயணம் சென்று வருவது போன்ற இன்ப உணர்வை அளிக்கும்
ReplyDeleteமுக்கியமாக எப்போதும் மனதில் உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும்!//
அதை தேடித்தானே செல்க்கிறோம் ,, உற்சாகம் இருந்தால் போதும் ., தொடர்ந்து சாதிக்கலாம் ..!
//எழுதிய பின் கடைசியாக கனவு பலன் எப்படி பார்ப்பது என எழுதப் போகிறேன். நிச்சயம் உங்களாலும் 50%-ஆவது கனவு பலன்களை துல்லியமாக சொல்ல முடியும். ///
ReplyDeleteஐயோ , சூப்பர் ... சீக்கிரம் எழுதுங்க ..!!
எனக்கும் கனவுகள் மீது நல்ல நம்பிக்கை நண்பா தொடருங்கள் படிப்போம்
ReplyDeleteஉங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
ReplyDeletehttp://usetamil.net
கனவுகளைக்கூடத் தொடரமுடியுமா....நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கும் அப்படி வந்திருப்பதாக உணர்கிறேன்.முழுமையாக ஞாபகமில்லை !
ReplyDeleteநான் படித்து வரும் வலைப்பதிவுகளில் மிகவும் உபயோகமானது உங்களுடையது என்பதில் சந்தேகம் இல்லை. KEEP ROCKING! from nanbendaa.blospot.com and madrasbhavan.blogspot.com
ReplyDeleteவாவ்.. கலக்கல்
ReplyDeleteinteresting, Sir.
ReplyDeleteஅலைகள் பாலா
ReplyDeleteமாணவன்
கலாநேசன்
எப்பூடி..
யாதவன்.
பதிவுலகில் பாபு
இம்சைஅரசன் பாபு..
நாகராஜசோழன் MA
ராஜகோபால்
ம.தி.சுதா
ஆர்.கே.சதீஷ்குமார்
சசிகுமார்
நா.மணிவண்ணன்
ஹரிஸ்
சுசி
சி.பி.செந்தில்குமார்
இளங்கோ
பிரஷா
padaipali
அன்பரசன்
Prasanna
Chitra
ப.செல்வக்குமார்
மகாதேவன்-V.K
தமிழர்களின் சிந்தனை களம்
ஹேமா
சிவகுமார்
பட்டாபட்டி..
vanathy
நண்பர்கள் அனைவருக்கும் என் மேலான நன்றிகளும் வணக்கங்களும்!