Thursday, November 4, 2010

கனவுகள் 11 - பயங்கர கனவுகள்(2)

ஆகஸ்ட் 2001. அமெரிக்காவின் ஐயோவா(Iova) மாநிலத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட கனவு. ஒரு விமானம் ஒரு உயரமான கட்டிடத்தில் மோதுகிறது. பலபேர் இறக்கிறார்கள். அவருக்கு அதி நிஜ நிகழ்வுபோல் இருந்தது. காலையில் மற்றவர்களிடம் இதைப் பற்றி சொன்னார். கொஞ்ச நேரத்தில் அது வெறும் கனவென சமாதானமாகி விட்டார். ஆனால் செப்டம்பர் 11ல் அது நிஜமாகவே நடந்தது. 9/11 சம்பவத்திற்கு பிறகு பலர் அந்த நிகழ்வு சம்பந்தமான கனவு கண்டதாக கூறியுள்ளனர். ”நான் ஒரு உயரமான எரியும் கட்டிடம் உள்ள நாரில் இருக்கிறேன். மக்கள் ஜன்னல் வழியே சத்தமிடுகிறார்கள். சிலர் குதிக்கிறார்கள்”, “ஒரு விமானம் வானத்திலிருந்து நகரத்தில் விழுகிறது மிகவும் மேலே தூரமாக இருந்து நான் பார்க்கிறேன். நிறைய பேர் இறந்து போகிறார்கள், நான் மிகவும் வருந்தினேன்”, “ஒரே கலவரமும் அழிவும் இருந்தது. உலகத்தின் முடிவுபோல் இருந்தது. ஒரு சாம்பல் நிற படலம் குண்டு வெடித்ததை போல் பெரிதாக பரவியிருந்தது. மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள்.”

-------------------------------------------------------

பழங்காலத்தில் மக்கள் ஆவிகள், பேய்கள், சூனியக்காரர்கள் அல்லது வெளி சக்திகளால்தான் பயங்கர கனவுகள் ஏற்படுவதாக நம்பினர். சிலசமயங்களில் கெட்ட கனவுகளுக்கு உணவைக் கூட காரணம் காண்பித்தார்கள். பயங்கர கனவுகள் உண்மையில் காய்ச்சல், தலைவலி போன்று ஒரு அறிகுறிதான். அதன் மூல காரணத்தை கண்டறிந்து சரி செய்தால் இவை தாகனாக காணாமல் போய்விடும். பயங்கர கனவுகள் சில சமயம் நம் நினைவில் நின்று கொண்டே இருக்கும். ஏனெனில் அவை நமக்கு எதையோ சொல்ல வருகிறது. அதேபோல் சில சமயம் இவை நினைவிலும் இருக்காது ஏனெனில் இவற்றை நாம் மறக்க நினைக்கிறோம்.

தூங்குபவர்களை ஒரு கெட்ட சக்தி பிடிக்கவும் துன்புறுத்தவும் செய்வதன் வெளிப்பாடாக பழங்காலத்தில் நினைத்தார்கள். இப்போது கூட சிலர் தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்து யாரோ என்னை கழுத்தை நெறிப்பதுபோல் இருந்தது, யாரோ என்னை வா வா என கூப்பிட்டார்கள் என சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

பயங்கர கனவுகள் துன்பம் மற்றும் கைவிடப்பட்ட நிலை இவற்றை கொண்ட உணர்வுடன் வரக்கூடிய ஒரு பயமுறுத்தும் கனவு மட்டுமே. சில பயங்கரமான படங்களை நீங்கள் படுக்கும் முன் பார்த்துவிட்டால்(அவை மனதில் ஆழமாக பதிந்துவிட்டால்) அன்றைய கனவில் பயங்கர கனவுகள் ஏற்படுவது இயல்பே. ஆனால் எல்லோருக்கும் எல்லா சமயங்களிலும் அப்படி நடக்க வேண்டுமென்பது கிடையாது. நாம்/நம் மனதில் ஏதோ ஒரு பிரச்சினை அலைகழிக்கும்போது இப்படி பயங்கர க்னவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

சில பயங்கர கனவுகள் திரும்ப திரும்ப வரும். இப்படிப் பட்டவை சிறு வயது/இளம் வயதில் ஏற்பட்ட ஏதோ ஒரு விரும்பத்தகாத/பலவந்தவமான நிகழ்வால் ஏற்படலாம். உதாரணமாக ஒருவர் சிறு வயதி ல் ஒரு சிறு திருட்டை செய்து விட்டார். ஆனால் அதை வீட்டில் மறைத்து விட்டார். தற்போது வரை அதை சொல்லவில்லை.  ஆனால் சிறு வயதில் யாரோ ஒருவர் அவரை மிரட்டுவதுபோலவும், துன்புறுத்துவது போலவும் கனவு ஏற்படுகிறது. பெரியவனான பின்பும் இது தொடர்கிறது. அது ஒரு சிறு திருட்டுதான். ஆனால் அதை வீட்டில் சொல்லாததால் அவரின் மனது குற்ற உணர்வில் தவிக்கிறது. அதன் விளைவே இவ்வகை கனவுகள்.

பயங்கர கனவு ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. உங்களுக்கு ஒரு பயங்கர கனவு ஏற்படும்போது இவைகளை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கான காரணம் உங்களிடத்தில் என்னாவாக இருக்கும் என ஆராயுங்கள். ஆராய ஆரம்பித்தாலே கொஞ்சம் கனவு பிரச்சினை குறையும். பிறகு காரணத்திற்கு தீர்வு தேடுங்கள் பயங்கர கனவு பிரச்சினை குறையும்.

1. வாழ்வில் நடக்காதவைகள்: அது நடக்கவில்லை, இது கிடைக்கவில்லை என்ற உள்மனதின் ஏக்கம்/ஆற்றாமை. இதுபோல் வாழ்க்கை அமையவில்லையே என்ற வருத்தம். இவை ஏற்படுத்தும் மன அழுத்தம், உறவுகளுக்கு இடையேயான திருப்தியின்மை, பொருளாதார பற்றாக்குறை போன்றவை பயங்கர கனவுகளை உண்டாக்குகின்றன.

2. இது கொஞ்சம் விநோதமான காரணம். உதாரணத்தோடு சொல்கிறேன். ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தை தொடங்கினார்(ஆனால் அவர் உரிமையாளரில்லை). அவர் தன்னை அதிர்ஷ்டசாலியாக கருதினார். அவர் தன் குடும்பம், மற்றும் பணியாளர்களிடம் தலைவராக சிறந்து விளங்கினார், அதனால் கவலைப்படுவதற்கோ, பலவீனப்படுவதற்கோ நேரமில்லை என கருதினார். அதாவது தனக்கு வாழ்வில் குறைகளே இல்லை என கருதினார். ஆனால் அவருக்கு வரும் கனவுகளில்- அவர் நிர்வாணமாக பொது இடங்களில் உலவுகிறார், பள்ளிக்கு மீண்டும் சென்று படிக்கிறார், போலீஸ் அவரை ஏமாற்றியதற்காக கைது செய்கிறது. இது போன்று அவருக்கு கனவுகள் வந்தன. ஒரு வருடத்திற்கு பிறகு அவர் தன் தொழிலில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார். தன் தொழிலுக்கு உரிமையாளரானார். பிறகு கனவுகள் குறைந்து நிலைப்பாட்டுக்கு வந்தன. அவர் வெளி மனது கவலைப்படாவிட்டாலும் நிலையின்மை, கவலைகள் அக்கனவுகளில் வெளிப்பட்டது. சில உணர்வுகள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் கனவுகள் வரும். இக்கனவுகள் மனதை சமநிலைப்படுத்தவும், உளக்காட்சியின் குரலாகவும் வெளிப்படுகின்றன.

3. உணர்வுப் போராட்டம்: நம் நம்பிக்கைகள், நோக்கங்கள், கருத்துக்கள், புரிதல்கள் ஒரு திசையில் செல்லும்போது, நம் உணர்வுகள் வேறுபக்கம் சென்றால் என்ன ஆகும்? நம் மனதில் ஒரு பெரும்ச்ச்ராட்டம்/அசைவின்மை ஏற்படும். உதாரணமாஅ ஒரு பெண் தன் வயதான பெற்றோர்களை கவனித்துக் கொள்கிறார், ஆனால் அவள் தன் சொந்த குழந்தைகளுக்காக நகரத்திற்கு செல்ல விரும்புகிறாள். ஆனால் பெற்றோர்கள் அங்கே வர விரும்பவில்லை. இப்போது அவளுக்கு பெற்றோர்களை கவனிக்கும் பொறுப்புள்ளது ஆனால் தன் குழந்தைகளுடன் செல்ல விரும்புகிறாள். இந்நிலையில் அவள்படும் மனப்போராட்டங்கள் பயங்கர கனவுகளை உண்டாக்கும்.

4. விலக்கப்பட்டவைகள்/தடை செய்யப்பட்டவைகளை மீறுதல்: ஒருவர்/அவர் வீட்டில் உள்ளவர் திருடும்பொழுது தவறான ஒன்றை செய்வதாக மனம் கூறுகிறது. ஆனால் அது அங்கே நிகழ்ந்துள்ளது. இதனால் மனம் காட்டும் எதிர்ப்பு கனவுகளாக மாறலாம்.

5. கவலை: எதிர்காலம் பற்றிய கவலை, சமீபத்திய பிரச்சினை(திருமணம், குழந்தை பிறப்பு, கல்வி, வேலை போன்றவை) குறித்த கவலை.

6. அதீத மன அழுத்தம்: விபத்துகள்/அதிர்ச்சியான சம்பவங்கள் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இது பயங்கர கனவுகளை உண்டாக்கலாம்.


7. உடல் சார்ந்த பிரச்சினைகள்: ஒரு கடுமையான உடல்வலி இருக்கும்போது (எலும்பு முறிவு/ அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு பிறகு) அவை பயங்கர கனவுகளை உண்டாக்கலாம்.

பயங்கர கனவுகளை சரி செய்யும் முறையான வழிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம். அதற்காக பயங்கர கனவுகள் அடுத்த பதிவிலும்....

21 comments:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. தீப திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 6. //இப்போது கூட சிலர் தூக்கத்திலிருந்து திடீரென்று விழித்து யாரோ என்னை கழுத்தை நெறிப்பதுபோல் இருந்தது, யாரோ என்னை வா வா என கூப்பிட்டார்கள் என சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம்.//

  denim,

  எங்கப்பா இருக்கே?

  ReplyDelete
 7. வழக்கம்போலவே உங்கள் பானியில் எழுதி அசத்திவிட்டீர்கள் சார்,

  புகைப்படங்கள் மிரட்டுகின்றன

  உங்கள் மூலம் கனவைப்பற்றிய எண்ணம் நாளுக்குநாள்
  அதிகரித்துகொண்டே வருகின்றன

  பக்ர்ந்தமைக்கு நன்றி சார்

  நட்புடன்
  மாணவன்

  ReplyDelete
 8. நல்லா இருக்கு. படங்கள் டெரரா இருக்கு.

  ReplyDelete
 9. எப்பவும் போல மிக அருமை சார்.

  ReplyDelete
 10. கனவுகளின் தொகுப்புக்களை நீங்கள் ஒரு புத்தகமாக வெளியிடலாமே? நாட் ஜோகிங்

  ReplyDelete
 11. பின் கழுத்து கொஞ்சம் குறுகுறுங்குது

  ReplyDelete
 12. புகைப்படங்கள் மிரட்டுகின்றன.
  மிக அருமை. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. உங்கள் கனவு ஆராய்ச்சி அருமை சிறப்பாக உள்ளது அதேபோல் பயமுறுத்துகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 14. கனவு பற்றிய விரிவான பதிவு.மன அழுத்தங்களே கனவுகள் என்பது என் கருத்து.

  நண்பருக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. நல்லா இருக்கு பாஸ! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 16. எஸ்.கே,உங்கள் கனவுத் தொடர்
  'தௌசன் வாலா' தாங்க!

  ReplyDelete
 17. இந்த தடவை படங்கள பாத்து பயங்கர கனவு வந்திடும் போல இருக்கே :))

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 18. //அன்பரசன் said...//
  நன்றி நண்பரே!

  //பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...//
  நன்றி நண்பா!

  //மகாதேவன்-V.K said...//
  நன்றி நண்பரே!

  //Thomas Ruban said...//
  நன்றி நண்பரே!

  //ஜோதிஜி said...//
  மிக்க நன்றி சார்!

  //venkat said...//
  நன்றி சார்!

  //வெறும்பய said...//
  நன்றி நண்பா!

  //சு.மோகன் said...//
  டெனிமை காணவில்லை!

  //மாணவன் said...//
  மிக்க மிக்க நன்றிங்க!

  //vanathy said...//
  மிக்க நன்றிங்க!

  //சசிகுமார் said...//
  மிக்க நன்றி!

  ReplyDelete
 19. //எப்பூடி.. said...//
  அதற்கான முயற்சிகள் எடுக்க கூடிய நிலையில் நான் தற்போது இல்லை! மிக்க நன்றி!

  //அப்பாதுரை said...//
  :-) பயங்கர கனவுகள் அப்படித்தான் சார்! நன்றி!

  //dk said...//
  நன்றிங்க!

  //Thomas Ruban said...//
  நன்றி நண்பரே!

  //ஹேமா said...//
  மன அழுத்தங்களும் கனவாக வரலாம். ஆனால் அவை மட்டுமே கனவாக வருவதில்லை! மிக்க நன்றிங்க!

  //ஜீ... said...//
  மிக்க நன்றிங்க!

  //மோகன்ஜி said...//
  :-) மிக்க நன்றி சார்!

  //சுசி said...//
  :-) மிக்க நன்றிங்க!

  ReplyDelete