Thursday, November 18, 2010

கனவுகள் 15 - தெளிவான கனவுகள்(iii)

Nothing happens unless first we dream.             - Carl Sandburg

கனவு உலகிற்கும் நிஜ உலகிற்கு தொடர்பை எப்படி உணர்வது? கனவில் நாம் ஒரு கோட்டைக் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கு ஒரு வைரக் கல்லை எடுக்கிறோம். கனவிலிருந்து விழித்த பின் அந்த வைரக் கல் நம் கையில் இருக்குமா? இல்லை! ஆனால் தெளிவான கனவுகள் அந்த அளவிற்கு உண்மையாக தெரியும். அதில் குறிப்பிட்ட ஒரு புள்ளியில்தான் கனவு என உணரவே முடியும். எனவே உங்கள் கனவு உண்மையாக தோன்றுகிறது. ஆனால் அது கனவென்று தோன்றிய பிறகு விழித்து விடுவீர்கள். சில சமயங்கள் ஒரு கனவு கண்டு விழித்த பின் கனவில் வந்த உருவம்/இடம் போன்றவை கண் முன் ஒரு நிழல்போல தோன்றுவதை உணர்ந்திருக்கலாம்.

பிறகு உங்கள் தெளிவான கனவை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது? பல ஆய்வுகளுக்கு பிறகு ஆய்வாளர்கள் கண்டறிந்தது: தெளிவான கனவுகளின் போது துரித கண் அசைவுகள் (REM) இருக்கும் என்பதை நாம் அறிவோம். தூங்கும் முன் சில மின்காந்த கருவிகள் மூலம் மூளையின் அலைகள், மற்றும் கண் அசைவுகள், தசை தொனிளை பதிவு செய்த பின், தெளிவான கனவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தவும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது தெளிவான கனவுகளில் ஏற்படும் கண் அசைவுகள் கனவுகளில் நாம் பார்க்கும் திசையை குறிக்கிறது. அதாவது நம் கண் அசைவு இடது பக்கமிருந்து வலது பக்கம் சென்றால் நாம் கனவில் இடது பக்கமிருந்து வலது பக்கமாக பார்க்கிறோம் என்று அர்த்தம்.

சரி கனவு உலகிற்கும் நிஜ உலகிற்கும் நேர வித்தியாசம் என்னவாக இருக்கும்? உண்மையில் ஆய்வுகள் கனவு காணும் நேரம் நிஜ உலக நேரத்திற்கு கிட்டதட்ட சமமாகவே உள்ளன. ஆனால் சில சமயம் கனவு கண்டவுடன் பல நாட்கள், ஏன் பல வருடங்கள் கனவு கண்டது போல் கூட இருக்கலாம். இந்த மாயத் தோற்றம் கிட்டதட்ட ஒரு படத்தில் வருவது போலவே உள்ளது. அதாவது படத்தில் இரவை காண்பிப்பார்கள். பிறகு கொஞ்ச நேரத்தில் சூரிய உதயத்தை காண்பிப்பார்கள். நாமும் விடிந்து விட்டதாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஆனது சில வினாடிகள் தான். இப்படித்தான் கனவிலும் நிகழ்கிறது சில நிமிடங்கள் கனவில் பல மணி நேர நிகழ்வுகள் நடப்பதாக ஒரு மாயத் தோற்றம் உண்டாகின்றது.

கனவில் நிகழும் நிகழ்வு நிஜத்தில் நடக்கும்போது மூளை எந்த அளவு வேலை செய்கிறது அதே அளவு கனவிலும் செயல்படுகிறது. உதாரணமாக பாடும்போது வலது பக்க மூளை செயல்படும். கனவில் பாடும்போதும் அவ்வாறே மூளை(சில சமயம் உடலும்) செயல்படுகிறது. இந்த மூளை செயல்படுவதாலும் கனவு நிஜம் போல தோன்றுகிறது.

நானும் என் நண்பனும் பைக்கில் காலேஜுக்கு சென்று கொண்டிருந்தோம். அவன் எப்போதாவது வண்டி ஓட்டுவான். அவன் வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு போனான். டிராபிக் சிக்னலில் ரெட் விழுந்திருந்தது. ஆனால் அவன் வண்டியை நிறுத்தாமல் வண்டியை ஓட்டிக் கொண்டு போனான். நான் கத்தினேன். ஆனால் அவன் கேட்கவில்லை. டிராபிக் கான்ஸ்டேபிளும் எங்களை கண்டுகொள்ளவில்லை. இப்படியே எல்லா சிக்னலிலும் சென்றான். நாங்கள் காலேஜை அடைந்தோம். அவன் எப்படி வந்தேன் பார்த்தியா என சந்தோசமாக சொல்லிக் கொண்டே கிளாஸை நோக்கி சென்றான். திடீரென  ஒரு புறாக் கூட்டம் பறந்து வந்தது. காலேஜில் புறாவே இருக்காதே என நினைத்துக் கொண்டிருக்கும்போதே புறாக்கள் அதிகமானது. அது கனவென அப்போது உணர்ந்தேன். புறாக்கள் என்னை நோக்கி வேகமாக வர நான் விழித்துக் கொண்டேன்.

-------------------------------

பலருக்கு தெளிவான கனவுகள் தோன்றியிருக்கும். ஆனால் எத்தனை தெளிவான கனவுகளை கண்டிருக்கிறீர்களா என கேட்டால் மிக குறைவான எண்ணிக்கையே சொல்வார்கள். காரணம் கனவுகளை, குறிப்பாக தெளிவான கனவுகளை நினைவில் கொள்வது அவற்றை நிலைநிறுத்துவதும் கடினமாகும். தெளிவான கனவு நிலையில் நீண்ட நேரம் எப்படி இருப்பது?

தெளிவான கனவை முதலில் ஊக்கப்படுத்த வேண்டும். இதற்கு தூங்கும் முன் தியானம் செய்வது ஒரு சிறந்த வழிமுறை ஆகும். தூங்கும் முன் “இன்று நான் ஒரு தெளிவான கனவை காண வேண்டும் அது விழித்த பிறகு அது நினைவில் இருக்க வேண்டும்.” தூங்கும் முன் உடலை முடிந்தவரை ஓய்வாக்கி, மூச்சை சீராக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தது ஒரு சிம்பலை உங்களுக்குக் சென்று உருவாக்கிக் கொள்ளுங்கள். அதாவது “நான் ஒரு குரங்கை பார்த்தால் நான் கனவு காண்பதை உணர்வேன்” இப்படி செய்வது கனவை உணர வைக்கும். தூங்கும் நிலையும் கனவு காண உதவுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் தூங்குவார்கள். உங்களுக்கு எது வசதியான நிலையோ அந்நிலையில் தூங்குங்கள்.

தெளிவான கனவு நீடிக்க இயலாமல் போக காரணம் அது கனவு என்று உணர்ந்தவுடனே விழித்து விடுவார்கள். தெளிவான கனவு நிலையில் இருக்க சில வழிகள்: (இவை கனவில் செய்ய வேண்டியவை)

1. உங்கள் முன் உள்ள ஒரு உறுதியான பொருளை(பொருட்கள், தரை, உடல் போன்றவை) கூர்ந்து கவனியுங்கள். கெட்டியான எதையாவதை தொடுங்கள். உங்கள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள்.

2. உங்களை நீங்களே சுழற்றுங்கள்(சுற்றுங்கள்). கனவில் நீங்கள் அடுத்து காணப்போகும்/கையாளப்போகும் பொருளை நோக்கி திரும்புவது சுழன்று நில்லுங்கள்.

3. பொதுவாக கனவுகளில் எழுச்சி நிலையில் இருப்போம். அதுவும் தெளிவான கனவுகளில் நிச்சயம் உற்சாகம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த கிளர்ச்சி கனவிற்கு எதிரி போன்றது. எனவே உங்களை அமைதிப் படுத்திக் கொள்ளுங்கள். இது கனவு, நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்.

தெளிவான கனவுகள் பற்றி மேலும் தெளிவடைய அடுத்த பதிவில் சந்திப்போம்....

23 comments:

 1. கனவைப்பற்றிய உங்கள் பதிவுகள் அருமை....
  வாழ்த்துக்கள் சேர்....

  ReplyDelete
 2. //தெளிவான கனவு நீடிக்க இயலாமல் போக காரணம் அது கனவு என்று உணர்ந்தவுடனே விழித்து விடுவார்கள்//

  நாம் வாழும் இந்த காலமும் கனவு போன்றது., கனவில் விழித்தால் நிஜ உலகை அடையலாம் நிஜத்தில் உறங்கினால் கனவுலகை அடையலாம்.

  ReplyDelete
 3. நல்ல பதிவு. தொடருங்க.

  ReplyDelete
 4. thala en kanava posta pottuten. meaning sollunga..

  ReplyDelete
 5. தொடரட்டும் கனவுகள்....

  உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

  ReplyDelete
 6. அருமையா சொல்லியிருக்கீங்க.. தொடரட்டும்..

  ReplyDelete
 7. கனவுகளிளாவது கிளர்ச்சியாக இருந்து விட்டு போகட்டுமே எதற்கு கனவு... கனவு... என்று சொல்லி கொள்ளவேண்டும். எதாவது உளவியல் ரீதியான பிரச்சனைகள் வருமோ?

  ReplyDelete
 8. கனவெ கலையாதே
  அருமையான தகவல் நன்றி சகோதரம்.
  அன்புச் சகோதரன்
  ம.தி.சுதா
  http://mathisutha.blogspot.com/

  ReplyDelete
 9. தூக்கத்தில் வரும் கனவுகள் எதுவும் என் நினைவில் இருப்பதில்லை..

  //இவை கனவில் செய்ய வேண்டியவை//
  கனவில ரூல்ஸ் நியாபகம் வருமா?

  ReplyDelete
 10. நல்லா இருக்கு எஸ் கே... தொடர்ந்து விளக்குங்கள்

  ReplyDelete
 11. ///தசை தொனிளை பதிவு செய்த பின், தெளிவான கனவுகளுடன் ஒப்பிட்டு பார்த்தவும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது தெளிவான கனவுகளில் ஏற்படும் கண் அசைவுகள் கனவுகளில் நாம் பார்க்கும் திசையை குறிக்கிறது. அதாவது நம் கண் அசைவு இடது பக்கமிருந்து வலது பக்கம் சென்றால் நாம் கனவில் இடது பக்கமிருந்து வலது பக்கமாக பார்க்கிறோம் என்று அர்த்தம்.///

  நம்பவே முடியல ., கனவ கூட பதிவு பண்ணும் அளவுக்கு வந்துட்டோமா ..? இன்னும் முழுமையா வரலைனா கூட விரைவில் அந்த மாதிரி தொழில்நுட்பம் வந்துடுச்சுனா உண்மைலேயே ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் ..!

  ReplyDelete
 12. //இது கனவு, நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொள்ளுங்கள்./

  ஆனா கனவு அப்படின்னு தெரிஞ்சா உடனே நாம உணர்வு நிலைக்கு அதாவது விழிச்சிடுவோமே ..? ஆனா இந்தத் தொடர் உண்மைலேயே கலக்காலப் போயிட்டு இருக்கு .. தொடருங்க .. !!

  ReplyDelete
 13. உங்கள் கனவு அருமை வாத்துக்கள்

  ReplyDelete
 14. //பிரஷா said..//
  மிக்க நன்றிங்க!

  //ராஜகோபால் said...//
  தங்கள் கருத்து உண்மைதான்! மிக்க நன்றி!

  //சுசி said...//
  மிக்க நன்றி !

  //அலைகள் பாலா said.../
  போட்டுவிட்டேன்! நன்றிங்க!

  //மாணவன் said...//
  மிக்க நன்றி நண்பரே!

  //வெறும்பய said...//
  நன்றி நண்பா!

  //adhithakarikalan said...//
  உளவியல் பிரச்சினை வராது. கனவில் நிலைத்திருக்க அப்படி சொல்ல வேண்டும்!

  //ம.தி.சுதா said...//
  மிக்க நன்றி நண்பரே!

  //ஹரிஸ் said....//
  ரூல்ஸ் எதுவுமில்லை. நினைவில் வைக்க அப்படி எழுதினேன். நன்றி!

  //அருண் பிரசாத் said...//
  மிக்க நன்றிங்க!

  //ப.செல்வக்குமார் said...//
  மிக்க நன்றி நண்பா!
  கனவிலிருந்து விழிக்க மாட்டோம்! அடுத்த பதிவில் விளக்குகிறேன்!

  //தமிழ்தோட்டம் said...//
  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 15. கனவுகளைப் பற்றிய விளக்கங்கள் எப்பவும் போல மிகவும் அருமை.. தொடர்ந்து எழுதுங்கள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. கனவுகள் உங்கள் எழுத்துகளிளுன் என் எண்ணங்களிலும் தொடர்கின்றன..அருமை

  ReplyDelete
 17. சுவாரஷ்யமாவும் இருக்கு கனவுத்தொடர்.நன்றி எஸ்.கே !

  ReplyDelete
 18. enakku romba pidicha topic. kalakkunga thala....

  ReplyDelete
 19. அருமை, தொடருங்கள் நண்பரே...

  ReplyDelete
 20. எஸ்.கே! அருமை ! அருமை நண்பரே!! வீட்ல சுத்தி போட சொல்லுங்க!

  ReplyDelete
 21. அருமையா சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 22. பதிவுலகில் பாபு said...
  padaipali said...
  ஹேமா said...
  அலைகள் பாலா said...
  vanathy said...
  Thomas Ruban said...
  மோகன்ஜி said...
  Kanchana Radhakrishnan said...

  அனைவருக்கும் மிக்க நன்றிங்க!

  ReplyDelete