Saturday, November 27, 2010

கனவுகள் 17 - தெளிவான கனவுகள் (iv)

The only thing that will stop you from fulfilling your dreams is you. -  Tom Bradley 



ஒரு கனவை ஆழமான கனவென்று உணர்ந்த பின் அக்கனவை நீங்க தொடர முடியும். அப்படி தொடரும்போது அக்கனவில் உள்ள இடங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை நீங்கள் மேலும் உருவாக்கலாம், நீக்கலாம்!!! கனவில் வரும் உருவங்களையும் கேரக்டர்களையும் கூட இப்படி செய்யலாம். கனவில் வரும் நிகழ்வுகளை நீங்கள் ஆட்டுவிப்பது கடினமென்றாலும் அதையும் கூட செய்ய முடியும். மொத்தத்தில் உங்கள் கனவை நீங்கள் ஆட்டுவிக்கலாம்! ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல! கனவை ஆட்டுவித்தலும் ஒரு கலைதான்! அதை கற்க பல பயிற்சிகள் தேவை!

கனவை நாம் உணர முதலில் மூளை கனவு கண்டு கொண்டிருக்கும்போதே விழித்துக் கொள்ள வேண்டும், ஆனால் அது வெளிமனதை முழுமையாக எழுப்பாமல் வெறும் நடப்பவற்றை உணர மட்டும் செய்ய வேண்டும். அதற்கு மூளைக்கு ஒரு கட்டளை தேவை! அந்த கட்டளை என்னவென்று நீங்களே உருவாக்கலாம். இதை கனவு குறியீடு என சொல்வார்கள்! அதை உங்கள் மனதுக்குள் பலமுறை சொல்ல வேண்டும் குறிப்பாக தூங்க செல்லும் முன்!

ஒரு உளவியல் நிபுணரின் அனுபவம்:

ஒவ்வொரு நாளும் தூங்கும் முன் உட்கார்ந்து என் உள்ளங்கைகளை பார்க்கத் தொடங்கினேன். ‘என் கனவில் இன்று என் கைகளை பார்ப்பேன் உடனே அது கனவென்று உணர்ந்துகொள்வேன்’ என பலமுறை எனக்குள்ளேயே அமைதியாக சொல்லிக் கொண்டேன். இதை எனக்கு டயர்டாகி தூக்கம் வரும்வரை சொல்லிக் கொண்டே இருந்தேன். பிறகு தூங்கி விட்டேன். முதலில் சில நாட்கள் என் பயிற்சிக்கு எந்த பலனுமில்லை எந்த கனவும் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் நான் என் முயற்சியை கைவிடாமல் தொடந்தேன். ஒரு நாள் இரவு எனக்கு தெளிவான கனவு வந்தது.

நான் என் பள்ளி வராண்டாவில் நடந்து கொண்டிருந்தேன். பெல் அடித்தது வேகமாக வகுப்பை நோக்கி சென்றேன். இரண்டு பிரிவுகளுக்கு இடையே இருந்த கதவை திறக்க முயன்றபோது என் கைகள் தானக என் முகத்திற்கு முன் வந்தன. அவற்றை ஆச்சரியமாக பார்த்தேன். அப்போதுதான் நான் உணர்ந்தேன். அது கனவென்று!! சுற்றிலும் பார்த்தேன் எல்லாம் ஒளிமயமாக நிஜத்தை போலவே இருந்தன. நான் தொடர்ந்து எல்லாவற்றை பார்த்து கொண்டு நடந்தேன். மிகுந்த உற்சாக நிலையோடு இருந்தேன். ஒரு சுவற்றை பார்த்தேன். அது கடினமாக இருந்தது அப்போது கனவில் தள்ளாடுவது போல் தெரிந்தது. உடனே மீண்டும் கைகளை பார்த்தேன். அதில் உள்ள ரேகைகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தேன். தள்ளாடுவது குறைந்தது. இப்போது பறக்க வேண்டுமென நினைத்தேன். குதித்து வானத்தில் பறந்தேன். அளவில்லாத உற்சாகம் என்னில் வந்தது. திடீரென விழித்துக் கொண்டேன்.

நான் மிகுந்த திகைப்பிலிருந்தேன், என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. தலை சுற்றுவது போல் இருந்தது. ஆனால் என் மனதில் அளவில்லாத உற்சாகம் அப்போதும் இருந்தது. அது என் பயிற்சிகளுக்கு பிறகு நான் கண்ட முதல் தெளிவான கனவு.

தெளிவான கனவு என்பது ஒரு paradoxical வடிவம்தான். ஏனெனில் உணர்வுநிலையிலும் உணர்வற்றநிலையிலும் ஒரே சமயத்தில் இருக்கும் முரண்பாடான விஷயம் அது. அப்படிப்பட்ட தெளிவான கனவுகளை காண்பது எளிதானதல்ல. முதலில் ஒரு கனவை எப்படி உணர்வது என்பதை மேற்கண்ட எடுத்துக்காட்டில் பார்த்தோம். அடுத்து அக்கனவில் தொடர்ந்து இருப்பது எப்படி?

முதலில் தெளிவான கனவில் நீடித்து இருக்க நீங்கள் உங்கள் உணர்வுகள்/உணர்ச்சிகளை மட்டுப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் தெளிவான கனவை தகர்த்து விடும். அடுத்து நீங்கள் எடுத்துக்காட்டில் கண்டவாறு நீங்கள் உங்களுக்கு என்று உருவாக்கிய கனவு உணர்த்தியை கூர்ந்து நோக்குதல் கனவை நீடிக்க செய்யும். அடுத்து கனவில் உங்கள் புலன் உணர்வுகளை பயன்படுத்த வேண்டும். அதாவது கனவில் காண்பவை பார்த்து, கேட்டு, தொட்டு, முகர்ந்து, ருசித்து அவை நிஜம்போல் உள்ளதை உணர வேண்டும். ஏனெனில் நம் புலனுறுப்புகள் கனவை நிஜத்தையும் பெரிதாக வேறுபடுத்தி பார்ப்பதில்லை. நம் மனம் மட்டுமே அவற்றை வேறுபடுத்துகிறது. இப்படி ஒவ்வொன்றை கனவென்று தெரிந்த பின்னும் உணர்ந்து கொள்வது தெளிவான கனவு காணுதலை நீட்டிக்கும்.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும் தெளிவான கனவு காணுதலில் நன்றாக கனவென்று உணர்ந்து கனவை விட்டு வெளியேறும் நிலைக்கு வரக் கூடாது. அதே சமயம் கனவில் உணர்வுகளை பயன்படுத்தி உணர்வதால் அது ஆழமாக அது கனவென்று உணரும் நிலையிலிருந்து அது நிஜமே என நினைக்கும் நிலைக்கும் செல்லக் கூடாது(இன்ஷப்சன் படம் இதற்கு சிறந்த உதாரணம்). இந்த இடைப்பட்ட சமநிலையையே தொடர்ந்திருக்கச் செய்ய வேண்டும்.


1. கனவு குறிப்பேடுகள்- கனவுகளை குறித்து வைத்தல்
2. கனவு பற்றிய விஷயங்களை அடிக்கடி படித்தல், கேள்விப்படுதல், ஆராய்தல்
3. தூங்கும் முன் மனதை ஒருமுகப் படுத்துதல், ஓய்வாக்கி கொள்ளல்- தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி
4. சுய ஹிப்னாடிசம்/நினைவுத் தூண்டல் - இதுதான் கனவு குறியீடு உருவாக்கி உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் செயல்

இவை கனவை உணர செய்யப்படும் அடிப்படையான செயல்கள் ஆகும். தெளிவான கனவை நாம் முதலில் உணர்வதே நம் முதல்படி ஆகும். அதனை நன்கு பழக்கப் படுத்திய பிறகு அடுத்த படியான நீடித்து நிலைத்திருத்தலுக்கு செல்ல வேண்டும்.


இன்றிலிருந்து நீங்களும் ஒரு கனவு குறீயீட்டை உங்களுக்கென்று தீர்மானித்து கொள்ளுங்கள். தூங்கும் முன் தூக்கம் வரும் வரை ‘அதை இன்று கனவில் பார்ப்பேன் பார்த்த உடன் அது கனவென்று உணர்ந்து கொள்வேன்’ என மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். தொடர்ந்து செய்யுங்கள். சில நாட்களில் கனவை நீங்களும் உணர்வீர்கள். அப்படி உணர்ந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்!

அடுத்த பதிவில் நிழல் நினைவுகள் பற்றி பார்ப்போம். தெளிவான கனவுகள் மேலும் தொடரும்......

9 comments:

  1. கனவுகள் நனவாகட்டும் ...

    ReplyDelete
  2. இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும் என்று சொல்லுங்க, எஸ்கே.
    நல்ல பதிவு.

    ReplyDelete
  3. //சில நாட்களில் கனவை நீங்களும் உணர்வீர்கள். அப்படி உணர்ந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்!//

    கண்டிப்பாக,பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. நண்பரே... நான் மேலும் இரண்டு கனவுகளை எழுதி வைத்திருக்கிறேன்... இந்த வாரத்தில் பதிவிடுகிறேன்... மறவாமல் பதிலளியுங்கள்...

    ReplyDelete
  5. இன்சப்சன் படம் குறித்து ஒரு ஆராய்ச்சி பதிவை நீங்கள் இடுமாறு கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete
  6. அறிவு, அதனை பயன்படுத்தும் திறமை பெற்றவர் நீங்கள் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. good.keep it up.
    http://biz-manju.blogspot.com

    ReplyDelete