Sunday, November 14, 2010

கனவுகள் 14 - தெளிவான கனவுகள்(ii)

நான் என் அக்வேரியத்தில் நின்று தொட்டியில் உள்ள புள்ளி வைத்த ரெமோரா(Remora-suckerfish) மீனை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மீன் வழக்கமாக பகல் நேரத்தில் நகர்வதில்லை அதனால் அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதே போல் அச்சு அசலான மேலும் இரண்டு மீன்கள் இருந்தன. முதலில் அதிர்ச்சியானேன். அவை எப்படி அதிகமானது என ஆச்ச்சரியப்பட்ட பிறகுதான் நான் உணர்ந்தேன் “நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்” உடனே நான் என்னைச் சுற்றி பார்த்தேன்.
என் கணவர், என் மகன், என் நாய்க்குட்டி எல்லாம் அங்கே இருந்தனர். அவர்களிடம் நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம் என கத்தினேன். இதனால் கனவை என்னால் இன்னும் நன்றாக உணர முடிந்தது. ஆனால் அவர்கள் என்னை நம்பவில்லை. இது கனவானால் நம்மால் பறக்க முடியுமே எனவே நான் குதித்து பறந்தேன். அப்போது அவர்கள் முகத்தை பார்த்தேன் அவர்கள் பயம் மற்றும் சந்தேகத்துடன் இருப்பது முகத்தில் தெரிந்தது நான் கீழே விழுந்து விட்டேன். பிறகு நான் விழித்துக் கொண்டேன்.

உங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நீங்கள் நாம் இப்போது காண்பது கனவு என்பதை உணர்ந்திருக்கலாம். ஆனால் அதன் அக்கனவு தொடர்ந்திருக்குமா என்பது கேள்விக்குறியே! ஒரு தெளிவான கனவை நீங்கள் உணர்ந்தபின், சாதாரண கனவை விட அதில் நடக்க இயலாத, நம்ப முடியாத, அசாதாரணமான நிகழ்வுகள் நடக்கும். தெளிவான கனவை பற்றி ஆழமாக அறியும் முன் நம் விழிப்பு நிலை, தூக்க நிலை, கனவு நிலை ஆகியவை பற்றி பார்ப்போம்.

விழிப்பு என்பது ஒரு உயிரியல் நிகழ்வாகும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நம் புலனுறுப்புகள் ஒளி, ஒலி, சூடு, குளிர்ச்சி, வாசனை போன்றவைகளின் மூலம் கண்டறியப்பட்டு நம் மூளைக்கு அனுப்புகின்றன. நம் மூளை அத்தகவலை ஆராய்ந்து வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை உணர்கிறது. நம் மூளை அப்டேட்டாக இருக்கிறது. உலகில் என்ன நடக்கிறது என்பதையும் அதன் மூலம் என்ன நடக்க கூடும் என்பதையும் கணிக்கிறது. எல்லா உயிரினங்களிலும் இதுவே நடக்கிறது. இதனால் ஒரு தவளை பறக்கும் ஒன்றை தன் உணவாக நினைத்து விழுங்க நினைக்கிறது, பெரிய நிழலை ஆபத்தாக நினைக்கிறது. எனவே விழிப்பு என்பது சுற்றியுள்ளவற்றை உணர்தல் அதன் மூலம் விஷயங்களை தீர்மானித்தல் ஆகும்.

நாம் விழித்துக் கொண்டு ஏதாவது செயலை செய்துகொண்டிருக்கும்போது நம் மூளை வெளி உணர்வுகளுடன் தொடர்பு கொண்டு நல்ல இயக்கத்தில் இருக்கும், மேலும் நம் ஞாபக சக்தியுடன் தொடர்பில் இருக்கும். அதாவது நம் மூளை வெளி உலகுடன் நல்ல தொடர்பில் இருக்கும். நீங்கள் விழித்துக் கொண்டு, ஆனால் இயக்கத்தில் இல்லாதபோது, மூளை வெளி உலகுடன் குறைவான தொடர்புடனேயே இருக்கும். மேலும் மூளை ஏற்கனவே மூளையில் பதிந்துள்ள விஷயங்களையே பெரும்பாலும் கையாண்டு கொண்டிருக்கும். ஆனால் உங்கள் கவனத்தை நீங்கள் எளிதாக நிஜ உலகிற்கு கொண்டு வர முடியும்.

தூங்கும்போது மிக மிக குறைவான புலனுறுப்பு செயல்பாடு இருக்கும். எனவே மூளைக்கும் வெளி உலகிற்குமான தொடர்பு மிக மிக குறைவாக இருக்கும். தூங்கும்போது மூளை ஓய்விலிருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் அது முற்றிலும் தவறு. தூக்கம் என்பது நம் மற்ற உடல் உறுப்புகளுக்கு ஓய்வளிப்பதற்காக செய்யப்படுவது ஆகும். தூக்கத்திலும் மூளை செயல்பட்டு கொண்டிருக்கும். ஆனால் அது வெளி உலகுடன் தொடர்பில்லாமல் இதுவரை சேர்ந்த நினைவுகளை கொண்டு வேலை செய்யும். தூக்கத்தில் சுயநினைவின் பிம்பங்களை சேர்த்து மூளையால் ஒரு சிறு உலகம் உருவாக்கப்படும். இது கனவிலிருந்து மாறுபட்டது. எல்லா சமயங்களிலும் இப்படி இரு உலகத்தை மூளை உண்டாக்காது, சில சமயங்களில் வெறுமனே சிந்தித்துக் கொண்டு கூட இருக்கும்.

தூக்க நிலை என்பது இரண்டு படிநிலைகளை கொண்டது. 1. அமைதி நிலை 2. இயக்க நிலை. இந்த இரண்டு நிலையிலும் நம் உடல் உறுப்புகளின் செயல்பாடு, உடல் இயக்கங்கள், வேதி மாற்றங்கள், உளவியல், நடத்தை மாற்றங்கள் ஆகியவை மாறுபடுகின்றன. மூளை அலைகள், கண் அசைவுகள், தசை தொனி போன்றவையும் இந்த இரண்டு நிலைகளிலும் வெவ்வேறாக உள்ளன. அமைதி நிலையில் நம் மூளை மிக குறைந்த அளவே செயல்படுகிறது மேலும் நாம் மூச்சு விடுதல் மெதுவாகவும் ஆழமாகவும் இருக்கின்றது. மேலும் வளர்சிதை மாற்றம் குறைவாக உள்ளது, வளர்ச்சி ஹார்மோன்கள் மீட்பு பணியை செய்கின்றன. இந்த நிலையிலிருந்து விழித்தால் விழிப்பவர்களுக்கு சூழல் உணர்வின்மை(நாம் எங்கே இருக்கிறோம் என்பது போல தோன்றுதல்) இருக்கும் மேலும் கனவுகள் மிக அரிதாகவே நினைவில் இருக்கும். இந்த நிலையை பூனை அல்லது நாய் தூங்கும்போது எளிதாக காணலாம். அவற்றின் மூச்சு சீராக மெதுவாக வந்து கொண்டிருக்கும். மேலும் இந்த நிலையில்தான் நபர்களுக்கு தூக்கத்தில் பேசுதல், தூக்கத்தில் நடத்தல் போன்றவை ஏற்படுகிறது.

இயக்க நிலையில் தூக்கம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். இந்த நிலையில்தான் கண் அசைவுகள் (இமை மூடியிருந்தாலும்) அதிகமாக இருக்கும். நாம் விழித்திருப்பதாக கூட மற்றவர்கள் நினைக்கலாம். மூச்சும் சீரற்று வேகமாக வந்து கொண்டிருக்கும். மூளை நீங்கள் விழித்து கொண்டிருக்கும்போது எந்த அளவு செயல்படுமோ அந்த அளவு செயல்பட்டுக் கொண்டிருக்கும். இதுதான் கனவிற்கான நிலை(குறிப்பாக தெளிவான கனவுகளுக்கு.) [இந்நிலையில் ஆண்களுக்கும் பெண்களுக்கு தங்கள் பிறப்புறுப்புகளுக்கு அதிகமான இரத்த ஓட்டம் பாயும்] இந்த எல்லா செயல்பாடுகள் நடை பெற்றாலும் உங்கள் உடல் அசைவற்று இருக்கும். இந்த நிலையில் நீங்கள் விழித்தால் சட்டென்று உங்களால் உடலை அசைக்க முடியாது. இந்த நிலையை நாய் தூங்கும்போது எளிதாக காணலாம். அதன் மூச்சு சீரற்று இருக்கும், வாலை அசைத்தல், சில சத்தங்களை எழுப்புதல் போன்றவற்றை தூக்கத்தில் செய்யும். அப்படியானால் அது கனவு கண்டு கொண்டிருக்கிறது என அர்த்தம்.

இந்த இயக்க நிலையில்தான் கனவுகள் ஏற்படுகின்றன. எனவே மூளை முழுக்க முழுக்க வெளி உலக தொடர்பின்றி இருக்கும். மூளையில் உள்ள விசயங்கள் மூலம் அது கனவுகளை உண்டாக்குகிறது. தூக்கத்தின் எந்த நிலையிலும் கனவு ஏற்படலாம் என்ற போதிலும் இயக்க நிலையில் காணப்படும் கனவுகளே ஞாபகம் வைத்துக் கொள்ள கூடியவையாகவும், பயனுள்ளவையாகவும் அமைகின்றன. தூக்க ஆரம்பித்த பிறகு முதல் நிலையும் இரண்டாம் நிலையும் மாற்றி மாற்றி ஏற்படும் சராசரியாக ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் இரவு முழுவது நடக்கும். இதில் நாம் கவனிக்க வேண்டியது. நம் தூங்க ஆரம்பித்த பின் ஏற்படும் முதல் REM தூக்கத்தின் 5-10 நிமிடங்களுக்கு பிறகு சிறு விழிப்பு வர வாய்ப்புண்டு அப்படி வந்தால் கனவை நாம் நன்றாக நினைவில் வைக்கலாம்.

நாம் இந்த தெளிவான கனவு பயிற்சியில் REM தூக்கத்தின் கால அளவை நீட்டித்தல், கனவை உணரும் வழிகள், கனவை ஞாபகம் வைத்தல் போன்றவற்றை முதலில் காணப்போகிறோம். தெளிவான கனவுகள் தொடரும்.....

23 comments:

  1. சரிதான்... அதாவது கனவு காணும்போதே இது கனவுதான் என்று நாம் உணர்ந்துக்கொள்வது... அப்படித்தானே... இதை பல முறை அனுபவித்திருக்கிறேன்... எனக்கு மட்டும் தான் இப்படியா...? எல்லோருக்கும் இப்படித்தானா என்று யோசிக்க வைத்த பல விஷயங்களுக்கு விடை தந்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  2. அருமை சார்,
    நாளுக்கு நாள் உங்கள் மூலம் கனவைப்பற்றிய எண்ணமும் ஈடுபாடும் அதிகரிக்கிறது கனவுகளுக்கேற்ப புகைப்படங்களின் தொகுப்பும் அருமையாக உள்ளது.

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. தீபாவளி விடுமுறைக்கு அப்புறம் i am back எலாதையும் படிச்சுட்டு சாவகாசம நைட் வந்து கமெண்ட் போடுகிறேன்

    ReplyDelete
  4. இவற்றை தொடர்ந்து படிக்க இப்போது அதிகமாக சம்மந்தம் இல்லாத மனிதர்களைப் பற்றிய கனவுகள் அதிகம் வந்து கொண்டுருக்கிறது.

    ReplyDelete
  5. இந்தக் கமெண்டை இங்கே போட்டிருக்கணுமோ?

    //சமீபத்தில்தான் இப்படி ஒரு கனவு வந்தது எனக்கு, அது கனவு என்று (கனவு காணும்போதே) தெரிந்ததும் அந்த Context மாறி மீண்டும் கனவு தொடர்ந்தது.//

    ReplyDelete
  6. //philosophy prabhakaran said..//
    நன்றி நண்பரே எல்லாம் உளவியல்தான்!

    //மாணவன் said...//
    மிக்க நன்றி நண்பரே!

    // denim said...//
    பொறுமையா படிங்க நண்பா!

    //ஜோதிஜி said...//
    இது இயல்புதான்! கனவு சம்பந்தபட்ட விஷயங்களை படிக்கும்பொழுது கனவின் மீதான ஈடுபாடு, ஆழ்ந்த உணர்வு தானாக அதிகமாகிவிடும். இதனால் பல்வேறு வித கனவுகள், ஆழ்மனதில் அடக்கி வைத்துள்ள விஷயங்கள் கனவுகளாக வரலாம்.

    // சு.மோகன் said...//
    இது போன்ற அனுபவம் பலருக்கு ஏற்படுகிறது. ஆனால் அதை தக்க வைப்பதற்கும் புரிந்துகொள்ளவும் சில பயிற்சிகள் தேவை!

    ReplyDelete
  7. நிறைய விசயங்களைத் தெளிவுபடுத்தறீங்க.. நன்றி..

    இன்செப்சன்ல இப்படித்தான்.. ஹீரோயின் கனவா நிஜமான்னு தெரியாம தற்கொலை பண்ணிக்குவாங்க.. பாக்ஸ்ல நீங்க சொல்லியிருக்கற விசயம் அதேபோல இருந்தது..

    ReplyDelete
  8. பறக்கற கனவு... நினைச்சுப் பார்த்தா பறக்கறா மாதிரியே இருக்கு.. நல்ல தொடர்.. தொடருங்கள்..

    ReplyDelete
  9. அருமையாக விளக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. //உங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நீங்கள் நாம் இப்போது காண்பது கனவு என்பதை உணர்ந்திருக்கலாம்//

    நானும் கூட உணர்ந்திருக்கிறேன் ., சில சமயங்களில் அந்தக் கனவு அப்படியே களைந்து விடும் .. ஆனா சில சமயம் ஏதாவது கனவு கண்டு முடிச்சு அதுல வந்த பயங்கரமான நிகழ்வுகளைப் பார்த்துட்டு கனவு அப்படின்னு தெரிஞ்சாலும் கைகால் நடுக்கம் எற்ப்பட்டதுண்டு ..

    ReplyDelete
  11. //தூங்கும்போது மூளை ஓய்விலிருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் அது முற்றிலும் தவறு. //

    உண்மைலேயே நானும் அப்படித்தான் நினைச்சிட்டு இருந்தேங்க ., இது புதிய தகவலா இருக்கு ., நன்றி அண்ணா ..!! தெரியப்படுதியதர்க்கு ..

    ReplyDelete
  12. அப்பாடா.. இன்னைக்குத்தான் நிம்மதியா படிச்சேன்.. :))

    //தூக்கத்தில் சுயநினைவின் பிம்பங்களை சேர்த்து மூளையால் ஒரு சிறு உலகம் உருவாக்கப்படும். //

    ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  13. கனவு பற்றி இவ்ளோ இருக்கா.வாசிக்க வாசிக்க புதுமையா ஆச்சர்யமா இருக்கு எஸ்.கே !

    ReplyDelete
  14. philosophy prabhakaran

    //சரிதான்... அதாவது கனவு காணும்போதே இது கனவுதான் என்று நாம் உணர்ந்துக்கொள்வது... அப்படித்தானே... இதை பல முறை அனுபவித்திருக்கிறேன்... எனக்கு மட்டும் தான் இப்படியா...? எல்லோருக்கும் இப்படித்தானா என்று யோசிக்க வைத்த பல விஷயங்களுக்கு விடை தந்திருக்கிறீர்கள்...//


    எனக்கும் இதே பீலிங்தான் இருந்தது, இப்ப தெளிவாகிகிச்சு.


    கனவை பத்தி இவளவு சொல்லிறீங்களே, நம்ம விஜயின் முதல்வர் கனவு பலிக்குமா? :-)

    ReplyDelete
  15. //என் கணவர், என் மகன், என் நாய்க்குட்டி எல்லாம் அங்கே இருந்தனர்//

    எஸ்.கே உங்களை ஆண்பால் என்று அல்லவா நினைத்திருந்தேன்????

    ReplyDelete
  16. இத்தனை நாள் டச் விட்டு போச்சு. இனி அதிரடிக்கார மச்சான் தான்.

    கொஞ்சம் கேப் விட்டு படிக்கும் போதுதான் உங்க எழுத்து பெருமளவு மெருகேறி இருப்பது தெரியுது.

    ReplyDelete
  17. பல விசயங்களை தெளிவாக கூறியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  18. கனவுகள்ப் பற்றிய தொகுப்பு அருமையாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  19. ராமனுஜம் கனவுகளில் சில கணக்குகளுக்கு விடை கண்டறிந்தாராம். சுஜாதா கடவுள் இருக்கிறார் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

    அது மட்டுமில்லாமல் கனவினை காணவிடாமல் ஒருவரை தொல்லை செய்து எழுப்பிக் கொண்டே இருந்தால் அவருக்கு பைத்தியம் பிடித்துவிடுமாமே...

    உங்களுடைய தொடர் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. நிறைய விசயங்களைத் தெளிவுபடுத்துகிறீர்கள்.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. Super S.K..

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html

    ReplyDelete
  22. //பதிவுலகில் பாபு said...//
    மிக்க நன்றி!

    //RVS said...//
    மிக்க நன்றி சார்!

    //ம.தி.சுதா said...//
    மிக்க நன்றி நண்பரே!

    //ப.செல்வக்குமார் said...//
    மிக்க நன்றி நண்பா!

    //சசிகுமார் said...//
    மிக்க நன்றிங்க!

    //சுசி said...//
    ரொம்ப நன்றிங்க!

    //ஹேமா said...//
    மிக்க நன்றிங்க!

    //எப்பூடி.. said...//
    ரொம்ப நன்றிங்க! (அவர்கனவு பலிப்பது கஷ்டம்:-)!

    //கொழந்த said...//
    மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கு!

    //vanathy said...//
    நன்றிங்க!

    //வெறும்பய said...//
    நன்றிங்க!

    //Thomas Ruban said...//
    மிக்க நன்றி!

    //ஜெகதீஸ்வரன். said...//
    மிக்க நன்றி!

    //பிரஷா said...//
    நன்றி நண்பரே!

    //அஹமது இர்ஷாத் said...//
    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  23. பதிவில் நிறைய insights.

    தலையணையருகில் ஒரு நோட்புக்-பென்சில் எப்பவும் வைத்திருப்பேன். கனவுகளிலிருந்து திடீரென்று விழிக்கும் பொழுது நினைவிலிருந்து குறிப்பெடுத்துக் கொள்ள. பத்து வருடங்களாக செய்து வருகிறேன் - interesting notes. தொலைந்து போன சாவியை ஒரு முறை இப்படிக் கண்டுபிடித்தேன், நம்புவீர்களா?

    ReplyDelete