Sunday, November 14, 2010

கனவுகள் 13 - தெளிவான கனவுகள்(i)

இது வரை நாம் இத்தொடரில் பார்த்தவை:
கனவு என்றால் என்ன?
கனவின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள்
கனவை ஞாபகம் வைக்கும் முறைகள்
கனவின் வகைகள்

அடுத்து நாம் காணப்போவது தெளிவான கனவுகள் (Lucid dreams). இதுவும் கனவின் ஒரு வகை என்றாலும் இதனை விரிவாக நாம் காணப்போவதற்கான காரணம் இதன் அளவில்லா பயன்கள். தெளிவான கனவுகளுக்கு செல்வோம்....


நானும் என் நண்பனும் என் வீட்டருகே உள்ள சாலை ஓரமாக நடந்து கொண்டிருந்தோம். மதிய வெயில் சுட்டெரித்தது. என் நண்பனிடம் வரும் வாரம் நாங்கள் நடத்த உள்ள நாடகம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவன் அடிக்கடி மழை வரப்போகிறது என்றான். நான் அப்படி நடக்காது என்று கூறிக் கொண்டே வந்தேன். திடீரென வானம் இருண்டது. கிட்டதட்ட இரவு போல வானம் கருமையானது. நான் வானத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். அது நீல, மஞ்சள், பச்சை, கருப்பு, வெள்ளை என நிறம் மாறிக் கொண்டே இருந்தது. இது எப்படி நடக்கும்? அப்போதுதான் நான் உணர்ந்தேன் நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

பொதுவாக கனவு என்பது செயலாலற்றல் அற்றது, தானாக நடப்பது. அதே போல கனவு காண்பவர் கனவை உண்டாக்க முடியாது, கட்டுப்படுத்தவும் முடியாது. ஆனால் தெளிவான கனவுகள் என்பது வித்தியாசமானது.தெளிவாக கனவு காண்பது என்பது ஒரு படத்தில் நடித்துக் கொண்டே அதை பார்ப்பது போலாகும். கனவு காண்பவர் கனவில் இருந்துகொண்டே கனவை காண்பார், சில சமயங்களில் அதை கட்டுப்படுத்தக் கூட முடியும். தெளிவான கனவு காண்பதில் சாதாரணமாக கனவை உணர்வது முதல் கனவின் நிகழ்வுகளை முழுமையாக கட்டுப்படுத்துவது வரை பல்வேறு படி நிலைகள் உள்ளன. சிலருக்கு எப்போதுமே இதை நடந்த முடியும், சிலருக்கு இரவில் மட்டும் நிகழும்.

பண்டைய காலங்களிலும் தெளிவான கனவுகள் பற்றி ஆழமாக ஆரய்ந்துள்ளனர். அவர்கள் தெளிவான கனவுகளை மாயஜாலங்கள் மற்றும் கடவுளை அடையும் வழியாக பயன்படுத்த முடியும் என நம்பினர். கனவு கோவில்களை கேள்விப்பட்டுள்ளீர்களா? அவை தூக்க கோவில்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. 4000 வருடங்களுக்கு முன் இக்கோவில்கள் எகிப்தில் காணப்பட்டன. மேலும் கிரேக்கம், ரோம நகரங்களில் காணப்பட்டன.(இந்தியாவிலும் இருந்ததாக கூறுகின்றனர்). அக்காலங்களில் இவை மருத்துவமனைகள் போல சிகிச்சைகள் அளிக்க பயன்பட்டன. அவை பெரும்பாலும் உளவியல் அடிப்படையில் இருக்கும். அங்கே அளிக்கப்படும் சிகிச்சைகளில் தெளிவான கனவுகள் பெரும்பாலும் பயன்பட்டன. இக்கனவுகள் சிகிச்சை கனவுகள் என அழைக்கப்படுகின்றன.

நவீன காலத்தில் தெளிவான கனவுகளை மேம்படுத்தப்பட்ட கனவு காணும் திறனாக காண்கின்றனர். இவற்றின் மூலம் கலைத்திறன், படைப்பு திறன் போன்றவை மற்றும் சிகிச்சை பெறுதல் போன்ற பலன்களை அடையலாம் என்கின்றனர்.தெளிவான கனவுகள் ஆஸ்ட்ரல் டிராவல்(ஆவிப் பயணம்) மற்றும் உளவியல் கனவுகளை உள்ளடக்கியுள்ளது. ஆவிப் பயணம் என்பது உடலை விட்டு வெளியே வந்து பார்ப்பது போன்றது. இது போன்ற ஒரு உணர்வை தெளிவான கனவுகள் ஏற்படுத்தும். இதன் மூலம் எதிர்காலத்தை காணலாம் என சிலர் நம்புகின்றனர். எப்படியிருப்பினும் தெளிவான கனவுகள் நீங்கள் அனுபவித்து ரசிக்க முடியும், ஏனெனில் இதில் அதிகப்படியான விடுதலை மற்றும் ஆற்றல் பெற்ற உணர்வை அனுபவிக்க முடியும்.

ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. அதை நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது “ஒரு நிமிடம்! இது வெறும் கனவுதான்!” என்று நீங்கள் உணர்ந்தால் அதுவே தெளிவான கனவு. பெரும்பாலான சமயங்களில் இப்படி தோன்றியபின் நீங்கள் விழித்து விடுவீர்கள் அந்த கனவும் முடிந்து விடும். ஆனால் அப்படியே அதே கனவை தொடரச் செய்து அது வரும் நிகழ்வுகளை நீங்கள் தீர்மானிக்கும் ஆற்றலை உங்களால் வளர்க்க முடியும். கனவு தானாக நடக்கும் விஷயமானாலும் இந்த தெளிவான கனவுகளில் நீங்களாக பங்கேற்று விழிப்பு நிலைக்கு செல்லாமல் கனவு காண முடியும்.

தெளிவான கனவுகள் என்னும் இப்பதம் முதன் முதலில் 20ஆம் நூற்றண்டில் டச்சு உளவியல் மருத்துவரான Frederik Willem van Eeden என்பவரால் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன் இவை அசாதாரணமான பண்புகள் கொண்ட கனவுகள் என அறியப்பட்டன. பண்டைய காலகட்டத்தில் மேற்கத்திய பகுதிகளில் தெளிவான கனவுகள் மீது இருந்த ஆர்வம் கிறிஸ்துவ மதம் வளர ஆரம்பித்த காலங்களில் குறைந்தது. இதன் மீதான ஆர்வம் இஸ்லாமிய, புத்த, ஹிந்து மதங்களிலும் காணப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் உளவியலாளர்கள் தெளிவான கனவுகளை ஆராய்ந்தனர். சிக்மண்ட் ஃபிராய்ட், கார்ல் ஜங்க் போன்ற ஆய்வாளர்கள் தெளிவான கனவுகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தெளிவான கனவுகளை பயன்படுத்தி நம் படைப்பு திறனை மேம்படுத்தலாம், பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டறியலாம், உறவு, உடல்நலப் பிரச்சினைகள் சீர் செய்யலாம். பயங்கர கனவுகளிலிருந்து விடுபடலாம். தெளிவான கனவுகளையும், கற்பனைகளையும் குழப்பிக் கொள்ள கூடாது. கற்பனை நாமாக உருவாக்கும் எண்ணங்கள், ஆனால் கனவுகள் தானாக உருவாகும், தெளிவான கனவுகள் அப்படி தானாக உண்டாகும் கனவுகளை உணர்தல் ஆகும்.

தெளிவான கனவுகளின் பண்புகளாவன:

1. கனவு நடப்பதை அறிதல்: கனவு காண்பவர்கள் கனவு காணும்போது தாங்கள் கனவில் இருப்பதை உணர்வார்கள். அப்படி உணர்வதால் தாங்கள் விழித்து விட்டதாக நினைப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் இன்னமும் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

2. கனவிலுள்ள விஷயங்களை மாற்றும் திறன்: கனவில் நடக்கும் செயல்கள், நபர்களை நீங்கள் மாற்ற முடிவதன் மூலம் கனவை கட்டுப்படுத்தலாம். உங்களுக்கு பிடிக்காதவற்றை மாற்றலாம். ஆனால் எல்லோராலும் கனவை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு சிறிதளவே கனவை கட்டுப்படுத்த முடியும்.

3. உடல் உணர்வு: அதாவது கனவில் பொருட்களை தொடும்போது ஏற்படும் உணர்வு நிஜ உலகில் அப்படி நடக்கும்போது ஏற்படும் உணர்வை ஒத்திருத்தல்.

4. அசாதாரணமான திறன்கள் மற்றும் செயல்கள்: கனவு காண்பவருக்கு உடல் எடையற்று இருப்பது போல தோன்றலாம். மிதக்கலாம், பறக்கலாம். அந்தரத்தில் நிற்கலாம்.

5. அசாதாரணமான சூழல்: உங்களை சுற்றியுள்ள இடம் ஒரு வித்தியாசமான சூழல், தோற்றம், உணர்வை அளிக்கலாம்.

6. அதிப்படியான வெளிச்சம்: அதிகப்படியான வெள்ளை நிற வெளிச்சம் காணப்படும்.

7. வண்ண மயமான ஒளிமயம்: தெளிவான கனவுகளில் நிறங்கள் அதிகப்படியாக இருக்கும். அவை பளிச்சென்றும், சிலசமயம் ஃப்ளூரசண்டாகவும் இருக்கலாம். சிலருக்கு இது இந்த உலகின் நிறமல்ல என தோன்ற வைக்கும்.

8. ஆழமான உணர்ச்சிகள்: நிறங்களை போல உணர்வுகளும் ஆழமானதாக அதிகப்படியானதாக இருக்கும்.

9. மூளை நுண்ணுணர்வு: தெளிவான கனவின் முக்கிய பண்பு இதுதான். இக்கனவில் உங்கள் அறிவு திறன் மிக நுண்ணுணர்வுடன் இருக்கும். பல கடினமான விசயங்களை புரிந்துகொள்வீர்கள், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

10. உடலை விட்டு வெளியே இருக்கும் உணர்வு: உங்கள் உடலை வெளியே இருந்து பார்க்கும் உணர்வு.

பெரும்பாலானோருக்கு தெளிவான கனவுகளில் இப்பண்புகள் காணப்பட்டிருந்தாலும், இவை இருப்பதால் அது தெளிவான கனவுகள் என கூறிவிட முடியாது. நீங்கள் தெளிவான கனவு காண்பதை உணர ஏதாவது ஒரு சிக்னல் இருக்கும். அதன் மூலமே அதை உணர முடியும் அது ஒலி, ஒளி, தொடு உணர்வு, குரல் போன்று எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

தெளிவான கனவுகள் தொடரும்...........

13 comments:

  1. தொடரட்டும் கனவுகள்!!!

    ReplyDelete
  2. சமீபத்தில்தான் இப்படி ஒரு கனவு வந்தது எனக்கு, அது கனவு என்று (கனவு காணும்போதே) தெரிந்ததும் அந்த Context மாறி மீண்டும் கனவு தொடர்ந்தது...

    ReplyDelete
  3. Astral Travel தனியாதல்லவா? Lucid dreaming might help astral travel, but are they not different?

    ReplyDelete
  4. //சிவா said...//
    நன்றிங்க!

    //சு.மோகன் said...//
    Astral Travel and Lucid dreams aree different only! ஆனால் தெளிவான கனவுகளில் Astral Travelல் இருக்கும் உணர்வு ஏற்படும்.

    ReplyDelete
  5. //பொதுவாக கனவு என்பது செயலாலற்றல் அற்றது, தானாக நடப்பது. அதே போல கனவு காண்பவர் கனவை உண்டாக்க முடியாது, கட்டுப்படுத்தவும் முடியாது. //
    அது உண்மைதான் ., நம்மால கனவினை மாற்றி அமைக்க முடியும் அப்படின்னா அதுலயும் செயற்கைத்தன்மை சேர்ந்திடும் ..

    ReplyDelete
  6. //ஆனால் அப்படியே அதே கனவை தொடரச் செய்து அது வரும் நிகழ்வுகளை நீங்கள் தீர்மானிக்கும் ஆற்றலை உங்களால் வளர்க்க முடியும்//

    நம்பவே முடியல ., இப்படி கூட பண்ணலாமா ..?

    ReplyDelete
  7. கலை கட்டுகிறது கனவுகள்

    ReplyDelete
  8. கனவு பற்றிய பதிவுகள் எல்லாமே அருமை.

    ReplyDelete
  9. நல்ல அருமையான தொடர். தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. சில சமயங்களில் ஒரு நிகழ்வுகளைப் போல் அல்லாது மிகவும் குழப்பமான கனவுகள் வருகின்றன. எத்தனையோ மர்மங்களில் கனவுகளும் ஒன்று போல.

    நன்றி.

    ReplyDelete
  11. //ப.செல்வக்குமார் said...//
    மிக்க நன்றி நண்பா!

    //padaipali said...//
    மிக்க நன்றி நண்பா!

    //vanathy said...//
    மிக்க நன்றிங்க!

    //Thomas Ruban said...//
    மிக்க நன்றி!

    //ஜெகதீஸ்வரன். said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete
  12. Are you have experience in flying alone in your dream..

    ReplyDelete
  13. Else my dead wife is come to my dream had sweet experience in meeting my (late)wife, 60% of dreams forgot at that time.

    ReplyDelete