Monday, January 17, 2011

அடோப் ஃபயர்வொர்க்ஸ் 1 - அறிமுகம் & Photo to Negative effect

அடோப் ஃபிளாஷ் மற்றும் அடோப் ஃபோட்டோஷாப்பை தொடர்ந்து இனி புதியதாக அடோப் ஃபயர்வொர்க்ஸ் (Adobe Fireworks) பற்றிய பாடங்களையும் காணப் போகிறோம்.

 அடோப் ஃபயர்வொர்க்ஸ் என்பது ஒரு bitmap மற்றும் vector graphics editor ஆகும். இதில் பல வித கிராஃபிக்ஸ்களை உருவாக்கவும் அனிமேஷன்களை உருவாக்கவும் இயலும். ஃபோட்டோஷாப் மற்றும் ஃபிளாஷ் இரண்டிலுமுள்ள வசதிகள் இதில் இருப்பதால் இது அவை இரண்டும் இணைந்த மென்பொருள் போன்றதாகும்.

இது மட்டுமில்லாமல் ஃபயர்வொர்க்ஸ் தன்னகத்தே சில சிறப்பான வசதிகளையும் கொண்டுள்ளது. ஸ்லைட் ஷோக்கள், வெப்சைட் லே அவுட்கள் போன்றவற்றை எளிதாக உருவாக்கலாம். அடோப் ஃபயர்வொர்க்ஸ் வெப்சைட் டெம்ப்ளேட்களை உருவாக்க பயன்படுத்தப்படும் மென்பொருள்களில் முக்கியமான ஒன்றாகும். பல வசதிகள் இருந்த போதும், ஃபிளாஷ், போட்டோஷாப்புடன் ஒப்பிடும்போது பயன்படுத்தக் கொஞ்சம் கடினமானதாகும். ஆனால் பயன்படுத்த பயன்படுத்த எதுவும் எளிதுதானே!

இங்கே தரப்போகும் பாடங்கள் Adobe Fireworks CS5-ல் செய்யப்படுபவை ஆகும். Adobe Fireworks CS5-ஐ டவுன்லோட் செய்ய இந்த டோரண்ட் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
Adobe Fireworks CS5 (575. 29 MB)

---------------------------------------

முதல் பாடமாக ஒரு படத்தை ஃபோட்டோ நெகடிவ் இமேஜாக மாற்றும் விதத்தை காண்போம்

முதலில் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். File->Import-ஐ கிளிக் செய்து படத்தை தேர்ந்தெடுத்துவிட்டு கேன்வாஸை கிளிக் செய்தால் அங்கே படம் வந்து விடும்.


பிறகு மேலே Filters-> Adjust Color-> Hue/Saturation-ஐ கிளிக் செய்யவும்.

அதில் Hue: -180; Saturation: -100; Lightness: 0 முதல் 10க்குள் என கொடுக்கவும்.


பிறகு கீழே பிராப்பர்ட்டி பேனலில் blend mode-ஐ Difference ஆக மாற்றவும். அவ்வளவுதான்!


பிறகு File->Save-ஐ கிளிக் செய்து விருப்பப்படும் ஃபார்மெட்டில் சேமிக்கவும்.

DEMO:






30 comments:

  1. அடோப் ஃபயர்வொர்க்ஸ் 1 - அறிமுகம் நல்லதொரு தொடக்கம் நண்பரே உங்களின் இந்த முயற்சி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி விளங்கும்படி உரைத்துள்ளீர்கள் நன்றி சகோதரம்...


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

    ReplyDelete
  3. காலை வணக்கம்.

    எழுத ஆரம்பித்த முதல் வருடத்தில் 143 பதிவுகள் எழுதியது ஆச்சரியம் என்பதை விட இது போன்ற மிகுந்த உழைப்பு தேவைப்படும் விசயங்களை அநாயசமாக கொண்டு வரும் உங்களும் என் வாழ்த்துக்ள்.

    ReplyDelete
  4. புதுசா ஆரம்பிக்கறீங்க மறுபடி... தனுஷ் படம் சூப்பர் எபெக்ட்

    ReplyDelete
  5. அமலா ரொம்ப பழசு. அமலா பால் போட்டோ போட்டிருக்கலாம்... ஹிஹி

    ReplyDelete
  6. நன்றி எஸ்.கே... ப்ளாஷ் பாடத்தின் சரியாக பின்பற்றவில்லை...

    இதை தொடர்ந்து பின்பற்றி கற்றுகொள்வேன் என நம்புகிறேன் :) தரவிறக்க லிங்கிற்கு நன்றி :)

    ReplyDelete
  7. உபயோகமான பதிவு நண்பா.. நன்றி..

    ReplyDelete
  8. தனுஸ் இப்படியெல்லாம் ஆயட்டாரே ?!

    ReplyDelete
  9. //மாணவன் said...//
    மிக்க நன்றி நண்பரே!

    //ம.தி.சுதா said...//
    மிக்க நன்றி சகோதரா!

    //ஜோதிஜி said...//
    என்னால் இயன்ற அளவு சில நன்மைகளை செய்வது என் கடமைதானே. இந்த பதிவுகள் என்றாவது யாருக்காவது பயன்படும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். அதற்கு தங்களை போன்றோரின் ஊக்கம் தான் முக்கிய காரணமாகும்!

    //அருண் பிரசாத் said...//
    ஆமா. புதுசா இன்னும் சில சாஃப்ட்வேர்களும் வரப்போகுது!
    ரொம்ப நன்றி!

    //Chitra said...//
    மிக்க நன்றிங்க!

    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
    நானும் நினைச்சேன். இருக்கட்டும் நெக்ஸ்ட் எஃபக்ட்ல பயன்படுத்திடலாம்!


    //Madhavan Srinivasagopalan said...//
    முயற்சி செஞ்சு பாருங்க. ரொம்ப நன்றி!

    //kanagu said...//
    சூழ்நிலைகள் காரணமாக எல்லா பாடங்களையும் பின்பற்றுவது கடினமாக இருக்கலாம். இருப்பினும் இயன்றவரை தெரிந்து கொள்ளுங்கள்! மிக்க நன்றி!

    //சசிகுமார் said...//
    ரொம்ப நன்றி நண்பரே!

    //பதிவுலகில் பாபு said...//
    மிக்க நன்றி நண்பரே!

    //கோமாளி செல்வா said...//
    நன்றி நண்பா! (அவர் நல்லாயிடுவார் கவலை வேண்டாம்!:-))

    ReplyDelete
  10. இது போல நிறைய எழுதுங்களேன்... என்னைப்போல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்காக..

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! தனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுப்பதற்கும் மனம் வேண்டும்.

    ReplyDelete
  11. லேட்டா வந்தாலும்,லேட்டஸ்சாக வந்து இருக்கின்றீர்கள்.

    உங்களின் இந்த முயற்சி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...

    ஆனால்,என்னால் இந்த சாப்ட்வேரை டவுன்லோடு செய்ய இயலாது(575mb) என் இனையவேகம் அப்படி!

    -அன்புடன் பல்லவன்.

    ReplyDelete
  12. //இது போல நிறைய எழுதுங்களேன்... என்னைப்போல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்காக..//

    ஆமோதிக்கிறேன்...ஆனால் உங்கள் உடல் நலத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.

    மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. அருமையான ஆரம்பம்... கற்று கொள்கிறேன்

    ReplyDelete
  14. அடகாசமான ஆரம்பம் ..தொடர்ந்து பதிவிடுங்கள் ..ஈழத்திலிருந்து ப்ரியா

    ReplyDelete
  15. 143 பதிவுகள் அனைத்தும் தரமானவை

    ReplyDelete
  16. மிகவும் பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எஸ்.கே!!!

    ReplyDelete
  18. என் இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரம்....

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..............

    ReplyDelete
  20. ஆரம்பம் அட்டகாசமாய் இருக்கிறது. உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது எஸ்.கே

    ReplyDelete
  21. உங்களுக்கு ஏன் பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete