Wednesday, December 15, 2010

கனவுகள் 18 - நிழல் நினைவுகள்

The invariable mark of a dream is to see it come true.
- Ralph Waldo Emerson


Without leaps of imagination, or dreaming, we lose the excitement of possibilities. Dreaming, after all, is a form of planning.
- Gloria Steinem

என் கனவில் என் பற்கள் அனைத்தும் தளர்ந்து விழுந்து விட்டன. நான் அவற்றை என் வாயில் மீண்டும் போட விரும்பி, அவை எல்லாவற்றையும் வாயில் பழையபடி வைத்தேன். ஆனால் கடையில் எல்லாம் மீண்டும் கீழே விழுந்து விட்டன.

பற்கள் விழும்படியான கனவுகள் பொதுவானதாகும். ஆனால் இதைப் பற்றிய விளக்கங்கள் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு விதமாக தந்துள்ளார்கள். ஃபிராய்டு பற்கள் விழுவதை பாலுணர்வு ஆசைகளோடு ஒப்பிட்டார். சிலர் அது ஊட்டச்சத்து குறைபாடின் அறிகுறியாக கருதினர். ஆனால் பெரும்பாலும் பற்கள் விழுவது கவலைகளை குறிக்கின்றது. ஒதுக்கப்படுவது பற்றிய பயத்தையும் இது குறிக்கின்றது.

consciousness, subconscious, unconscious என்பது நம் மனது நுழையும் இடங்களாகும்.  எனவே நீங்கள் நினைக்கும்போது ஆழ்மனதுக்கு செல்ல முடியும். அதிலிருந்து வெளிவரவும் முடியும். நீங்கள் ஆழ்மனதுக்குள் செல்லும்போது உங்கள் நினைவுகள், உள் கனவுகள், ஆசைகள், கற்பனைகள் என ஒரு பெரிய உலகையே காணலாம். இந்த நினைவுகளைத்தான் நிழல் நினைவுகள் என்கிறோம். சிறு குழந்தைகள் அடிக்கடி ஆழ்மனதிற்கு பிரவேசிப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் கனவுகள், கற்பனைகளிலேயே இருப்பார்கள். நாம் பெரியவர்களாகும்போது இது குறைந்தாலும் சில சமயங்கள் ஆழ்ந்த சிந்தனை ஆழ்மனதிற்குள் கொண்டு விடலாம்.

சாதாரணமாக நாம், சாப்பிடுதல், ஓடுதல் நடத்தல் போன்ற சராசரி செயல்களை செய்யும்போது ஆழ்மனதிற்குள் நாம் செல்வதில்லை. ஆனால் நாம் மூச்சு எப்படி சீராக செல்கிறது என நினைப்பது போன்று சில விஷயங்களை ஆழமாக யோசிக்கும்போது ஆழ்மனதிற்கு நுழைய ஆரம்பிக்கிறோம். அதனால்தான் சில சமயம் இப்படிப்பட்ட விஷயங்களை ஆழ்ந்து யோசித்து விட்டு மீளும்போது ஏதோ நீண்ட நேரம் எங்கோ இருந்ததுபோல் இருக்கின்றது.

ஆழ்மனதிற்குள் இருக்கும் எல்லா விஷயங்களும் முக்கியமானதல்ல. மனம் கிட்டதட்ட குப்பைகளும் புதையல்களும் கலந்து நிறைந்த இடம்தான்! மனதில் ஒருவாரம் முன் சாப்பிட்ட உணவு பற்றிய நினைவுகளும் உங்கள் மனதில் இருக்கும். நீங்கள் சிறுவயதில் செய்த தவறும் இருக்கும்! நீங்கள் ஓய்வு நிலையிலிருந்து ஆழ்மனதிற்குள் செல்லும்போது அதைப் பற்றி உணர்வு உங்களுக்கு இருக்கலாம். ஏனெனில் நினைவுகள் என்பது சங்கிலி போலத்தான். ஆழ்மனம் வெளிமனம் இரண்டையும் தொடர்பில் வைக்க முடியும்.

ஆனால் இந்த நிழல் நினைவுகள் என்பன முழுக்க முழுக்க ஆழ்மனதுடன் சம்பந்தபட்டவை. இவற்றின் மூலம் கனவுகளை நினைவில் கொள்ளலாம்! சரி, நாம் அடிக்கடி கனவு காண்கிறோம். ஆனால் சில கனவுகள் நினைவில் இருக்கின்றன. சில நினைவில் இருப்பதில்லை. ஏன்?

நாம் விழித்த பின் முதல் 10 நிமிடங்களில் மட்டுமே கனவின் சில பகுதிகளை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம். பிறகு அவற்றை மறந்து விடுகிறோம். இது தினமும் காலை நடக்கின்றது. நாம் விழிக்கும்போது சுற்றி என்ன நடக்கின்றது என்பது பற்றி குழப்பமும் மந்தமும் இருப்பதை உணரலாம். நம் வெளிமனம் ஒரு கணிப்பொறி போன்று மெதுவாக booting up ஆகிக் கொண்டிருக்கின்றது. அப்போது இந்த நிழல் நினைவுகளின் ஒரு சிறு window திறந்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் நிழல் நினைவுகளை ஆராயலாம். ஆனால் இலக்கின்றி நம் கனவுகள், நம் ஆழ்மனதில் பல்வேறு விஷயங்களின் சிறு சிறு பகுதிகளை இது காண்பிக்கும். இந்த விஷயங்கள்தான் அந்த 10 நிமிடத்திற்கு பிறகு நாம் கனவு என நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் பயங்கர கனவுகளை நாம் நீண்ட நேரம் நினைவில் வைக்கிறோம் ஏன்? நம் மனதில் குறிப்பாக ஆழ்மனதில் நம் உணர்வுகளை ஆழமாக தாங்கி வரும் பயங்கர கனவுகள், பாலுணர்வு கனவுகள் போன்றவை முக்கியமானவையாக குறிக்கப்படுகின்றன. எனவே இவை நீண்ட நேரம் நினைவில் இருக்கின்றன.

இந்த நிழல் நினைவுகள் முக்கியமானவை என நம் வெளி மனதிற்கு உணர்த்தினால் கனவுகளை ஞாபகத்தில் வைக்கலாம். கனவுகளை மற்றவர்களிடம் சொல்லுதல், அதைப் பற்றி எழுதி வைத்தல் போன்றவை அதன் படிகளாகும். ஏனெனில் இவை வெளி மனம் செய்யும் செயல்கள் ஆனால் அவை உள் மன நினைவுகளை பற்றி பேசுவதால் அவற்றிற்கு படிப்படியாக முக்கியத்துவம் அளிக்கின்றது.

இந்த நிழல் நினைவுகள் நம் கனவுகளை மட்டும் சொல்வதில்லை. நமக்கே தெரியாத நம்மை கூட அடையாளம் காண்பிக்கும். நம்மில் இருக்கும் நல்ல குணங்களை, கெட்ட குணங்களை, ரகசியங்களை வெளிக்காட்டும்! நமக்கு அதில் ஈடுபாடு அதிகரிக்க அதிகரிக்க அந்த நினைவுகளில் நாம் எளிதில் சென்று வர முடியும்.

கனவுத் தொடரின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். இதுதான் மிகவும் சுவாரசியமான ஆனால் கடினமான பகுதி! கனவு பொருள் விளக்கம் - dream interpretation! உங்கள் கனவையும் மற்றவரின் கனவையும் புரிந்துகொள்ளுதல்!
காண்போம் இனி....

31 comments:

 1. கனவுத் தொடரின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். இதுதான் மிகவும் சுவாரசியமான ஆனால் கடினமான பகுதி! கனவு பொருள் விளக்கம் - dream interpretation! உங்கள் கனவையும் மற்றவரின் கனவையும் புரிந்துகொள்ளுதல்!


  .....கனவுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதே சுவாரசியமான விஷயம்தானே.... :-)

  ReplyDelete
 2. //நாம் விழித்த பின் முதல் 10 நிமிடங்களில் மட்டுமே... //

  மேற்கூறிய வார்த்தைகளோடு ஆரம்பிக்கும் பத்தி அருமை... பல விஷயங்களை தெளிவுபடுத்தியது...

  ReplyDelete
 3. // கனவு பொருள் விளக்கம் - dream interpretation! உங்கள் கனவையும் மற்றவரின் கனவையும் புரிந்துகொள்ளுதல்! //

  ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 4. //கனவுத் தொடரின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். இதுதான் மிகவும் சுவாரசியமான ஆனால் கடினமான பகுதி! கனவு பொருள் விளக்கம் - dream interpretation! உங்கள் கனவையும் மற்றவரின் கனவையும் புரிந்துகொள்ளுதல்!//

  எதிர்பார்ப்புடன்...........

  தொடரட்டும் உங்கள் பணி...

  நன்றி

  ReplyDelete
 5. இண்ட்லியில் இணைக்க வில்லையா நண்பரே...

  ReplyDelete
 6. //ஆழ்மனதிற்குள் இருக்கும் எல்லா விஷயங்களும் முக்கியமானதல்ல. மனம் கிட்டதட்ட குப்பைகளும் புதையல்களும் கலந்து நிறைந்த இடம்தான்! மனதில் ஒருவாரம் முன் சாப்பிட்ட உணவு பற்றிய நினைவுகளும் உங்கள் மனதில் இருக்கும். நீங்கள் சிறுவயதில் செய்த தவறும் இருக்கும்! நீங்கள் ஓய்வு நிலையிலிருந்து ஆழ்மனதிற்குள் செல்லும்போது அதைப் பற்றி உணர்வு உங்களுக்கு இருக்கலாம். ஏனெனில் நினைவுகள் என்பது சங்கிலி போலத்தான். ஆழ்மனம் வெளிமனம் இரண்டையும் தொடர்பில் வைக்க முடியும்.//

  Amezing fact.. interesting

  ReplyDelete
 7. கனவுகள் பதிவு அருமை. பற்கள் பற்றிய கனவு நானே ரொம்ப நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்தேன். விளக்கத்திற்கு நன்றி.

  ReplyDelete
 8. .....கனவுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதே சுவாரசியமான விஷயம்தானே...//

  கனவு முதலில் நம் நினைவுக்கு வருவதே அதிசயம் தானே ...
  நல்ல பதிவு
  அடுத்த பதிவிற்கு காத்து இருக்கிறேன்....
  தொடருங்கள் !!!!

  ReplyDelete
 9. எனக்கு எழுந்தவுடனே பெரும்பாலும் கனவுகள் மறந்துவிடுகின்றன..
  என்ன செய்றது??

  ReplyDelete
 10. எப்படி நண்பா..இவ்ளோ கருத்துகள் எழுதுறீங்க..ரொம்ப அருமை..

  ReplyDelete
 11. அழகான கருத்துள்ள படைப்பு நண்பரே

  ReplyDelete
 12. சம காலக்கல்வி பற்றிய எங்கள் பதிவுhttp://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_15.html

  பார்வையிட உங்களை அன்புடன் அழைக்கிறோம்..

  ReplyDelete
 13. நடுவில் சில நாட்கள் வரவில்லை. பொறுமையாக படிக்கிறேன். கனவுகள் பற்றிய ஒரு புரிதல் ஏற்படும் பதிவு. நன்றி. ;-)

  ReplyDelete
 14. தங்களின் படைப்புகள் சிந்திக்க வைத்து சிலாகிக்கிறது....

  ReplyDelete
 15. அருமையான பதிவு நண்பரே...

  தொடர்ந்து வழங்குங்கள்

  ReplyDelete
 16. நண்பரே ஏன் பதிவை இண்ட்லியில் இணைப்பதில்லை, இணைப்பதில் ஏதேனும் பிரச்சினையா ஏன் கூறுகிறேன் என்றால் இவ்வளவு சிரமப்பட்டு எழுதும் பதிவு அனைவரையும் சென்றடையாமல் போகும் வாய்ப்பு உள்ளது நண்பா.

  ReplyDelete
 17. //கனவுத் தொடரின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம். இதுதான் மிகவும் சுவாரசியமான ஆனால் கடினமான பகுதி! கனவு பொருள் விளக்கம் - dream interpretation! உங்கள் கனவையும் மற்றவரின் கனவையும் புரிந்துகொள்ளுதல்!//

  அதையும் ஆவலுடன் எதிர்பார்த்து.......

  பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 18. இந்தப் பதிவும் அருமைங்க எஸ்.கே.. தொடருங்கள்..

  ReplyDelete
 19. சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது

  ReplyDelete
 20. // சிறு குழந்தைகள் அடிக்கடி ஆழ்மனதிற்கு பிரவேசிப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் கனவுகள், கற்பனைகளிலேயே இருப்பார்கள்//

  ஒருவேளை அதனால்தான் சந்தோசமா இருக்காங்களோ ..?

  அடுத்த பதிவு எழுதுங்க அண்ணா ..!!

  ReplyDelete
 21. //ஃபிராய்டு பற்கள் விழுவதை பாலுணர்வு ஆசைகளோடு ஒப்பிட்டார்//

  அவர் எதைத்தான் அதோடு சம்பந்தப்படுத்தாமல் இருந்தார்?

  ReplyDelete
 22. கனவு பற்றிய உங்கள் ஒவ்வொரு பதிவுமே சுவாரஸ்யம்தான்.தொடருங்கள் !

  ReplyDelete
 23. நொடியில் கழிந்த சில விசையங்கள் பல ஆண்டுகள் கழித்து கனவில் வரும் ................. மூளை - தி கிரேட் மெக்கானிசம்

  ReplyDelete
 24. எனக்கும் பற்கள் விழுவது மாதிரி கனவு வந்திருக்குங்க. நல்ல கட்டுரை

  ReplyDelete
 25. அருமையான பதிவு ,
  பதிவுக்கு நன்றி
  இவன்
  http://tamilcinemablog.com/

  ReplyDelete
 26. அருமை..அருமை..

  ReplyDelete
 27. Dreams ,are a part of life-i can say like that only.

  ReplyDelete
 28. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


  -கவிஞர்.வைகறை
  &
  "நந்தலாலா" இணைய இதழ்,
  www.nanthalaalaa.blogspot.com

  ReplyDelete
 29. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 30. உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

  ReplyDelete