Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Saturday, November 27, 2010

கனவுகள் 17 - தெளிவான கனவுகள் (iv)

The only thing that will stop you from fulfilling your dreams is you. -  Tom Bradley 



ஒரு கனவை ஆழமான கனவென்று உணர்ந்த பின் அக்கனவை நீங்க தொடர முடியும். அப்படி தொடரும்போது அக்கனவில் உள்ள இடங்கள், கட்டிடங்கள் போன்றவற்றை நீங்கள் மேலும் உருவாக்கலாம், நீக்கலாம்!!! கனவில் வரும் உருவங்களையும் கேரக்டர்களையும் கூட இப்படி செய்யலாம். கனவில் வரும் நிகழ்வுகளை நீங்கள் ஆட்டுவிப்பது கடினமென்றாலும் அதையும் கூட செய்ய முடியும். மொத்தத்தில் உங்கள் கனவை நீங்கள் ஆட்டுவிக்கலாம்! ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல! கனவை ஆட்டுவித்தலும் ஒரு கலைதான்! அதை கற்க பல பயிற்சிகள் தேவை!

Monday, November 22, 2010

கனவுகள் 16 - ஒரு சிறிய இடைவேளை

“Great dreams of great dreamers are always transcended.”

(சிறப்பாக கனவு காண்பவர்களின்) சிறந்த கனவுகள் எப்போதும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவைகளாக, அனுபவ வரம்பை மீறியவைகளாகவே இருக்கின்றன.

- அப்துல் கலாம்

கனவு என்பது ஒரு சாதாரணமான ஒன்று. அதுபாட்டுக்கு நடந்துட்டு போகட்டுமே. அதை ஏன் இப்படி யோசிக்க வேண்டும்? அதை ஏன் ஞாபகம் வைக்க வேண்டும்? அதைப் பற்றி நாங்கள் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? அதற்கு விதிகள், பலன்கள், இப்படி நடக்கணும் அப்படி நடக்கனும்கிறதெல்லாம் தேவையா? இதற்கு இத்தனை பதிவுகளா என நீங்கள் நினைக்கலாம்.

Thursday, November 18, 2010

கனவுகள் 15 - தெளிவான கனவுகள்(iii)

Nothing happens unless first we dream.             - Carl Sandburg

கனவு உலகிற்கும் நிஜ உலகிற்கு தொடர்பை எப்படி உணர்வது? கனவில் நாம் ஒரு கோட்டைக் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கு ஒரு வைரக் கல்லை எடுக்கிறோம். கனவிலிருந்து விழித்த பின் அந்த வைரக் கல் நம் கையில் இருக்குமா? இல்லை! ஆனால் தெளிவான கனவுகள் அந்த அளவிற்கு உண்மையாக தெரியும். அதில் குறிப்பிட்ட ஒரு புள்ளியில்தான் கனவு என உணரவே முடியும். எனவே உங்கள் கனவு உண்மையாக தோன்றுகிறது. ஆனால் அது கனவென்று தோன்றிய பிறகு விழித்து விடுவீர்கள். சில சமயங்கள் ஒரு கனவு கண்டு விழித்த பின் கனவில் வந்த உருவம்/இடம் போன்றவை கண் முன் ஒரு நிழல்போல தோன்றுவதை உணர்ந்திருக்கலாம்.

Sunday, November 14, 2010

கனவுகள் 14 - தெளிவான கனவுகள்(ii)

நான் என் அக்வேரியத்தில் நின்று தொட்டியில் உள்ள புள்ளி வைத்த ரெமோரா(Remora-suckerfish) மீனை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த மீன் வழக்கமாக பகல் நேரத்தில் நகர்வதில்லை அதனால் அதையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அதே போல் அச்சு அசலான மேலும் இரண்டு மீன்கள் இருந்தன. முதலில் அதிர்ச்சியானேன். அவை எப்படி அதிகமானது என ஆச்ச்சரியப்பட்ட பிறகுதான் நான் உணர்ந்தேன் “நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்” உடனே நான் என்னைச் சுற்றி பார்த்தேன்.

கனவுகள் 13 - தெளிவான கனவுகள்(i)

இது வரை நாம் இத்தொடரில் பார்த்தவை:
கனவு என்றால் என்ன?
கனவின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள்
கனவை ஞாபகம் வைக்கும் முறைகள்
கனவின் வகைகள்

அடுத்து நாம் காணப்போவது தெளிவான கனவுகள் (Lucid dreams). இதுவும் கனவின் ஒரு வகை என்றாலும் இதனை விரிவாக நாம் காணப்போவதற்கான காரணம் இதன் அளவில்லா பயன்கள். தெளிவான கனவுகளுக்கு செல்வோம்....

Sunday, November 7, 2010

Thursday, November 4, 2010

கனவுகள் 11 - பயங்கர கனவுகள்(2)

ஆகஸ்ட் 2001. அமெரிக்காவின் ஐயோவா(Iova) மாநிலத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட கனவு. ஒரு விமானம் ஒரு உயரமான கட்டிடத்தில் மோதுகிறது. பலபேர் இறக்கிறார்கள். அவருக்கு அதி நிஜ நிகழ்வுபோல் இருந்தது. காலையில் மற்றவர்களிடம் இதைப் பற்றி சொன்னார். கொஞ்ச நேரத்தில் அது வெறும் கனவென சமாதானமாகி விட்டார். ஆனால் செப்டம்பர் 11ல் அது நிஜமாகவே நடந்தது. 9/11 சம்பவத்திற்கு பிறகு பலர் அந்த நிகழ்வு சம்பந்தமான கனவு கண்டதாக கூறியுள்ளனர்.

Sunday, October 31, 2010

கனவுகள் 10 - பயங்கர கனவுகள்(1)

நம்பிக்கை என்பது நாம் விழித்து கொண்டு காணும் கனவு - அரிஸ்டாட்டில்


17 வயது மாணவியின் கனவு: நான் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்தை பிடிக்க சென்றேன். பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில், நான் என் நெருங்கிய தோழியை கண்டேன். அவள் ஒரு மரத்தின் அடியில் சுடப்பட்டு இறந்து கிடந்தாள். நான் கொஞ்ச தூரம் சென்ற பின் இன்னொரு தோழனை கண்டேன். அங்கே அவன் மட்டும்தான் இருந்தான். நான் அவனை அழைத்துக் கொண்டு இறந்து கிடந்த நெருங்கிய தோழியை காண்பித்தேன். நாங்கள் அங்குமிங்கும் ஆட்களை தேடினோம். நாங்கள் நிறைய பேரை கண்டுபிடித்தோம்

Tuesday, October 26, 2010

கனவுகள் 9 - பயன்கள் சில.......

சில சமயங்களில் கனவுகள் மொத்தமாக வாழ்க்கை செல்லும் திசையையே மாற்றி விடும்.
- JUDITH DUERK

நாம் நீண்ட நேரம் கனவு காண்கிறோம். வாழ்வில் ஒரு பெரும்பகுதியை கனவில் கழிக்கிறோம். இவ்வளவு நேரம் செலவழிக்கின்ற கனவை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ள கூடாது?

Monday, October 25, 2010

கனவுகள் 8 - மனம், மனம் அறிய ஆவல்......

வெளிப்படையாய் தெரியாதது, கண்ணுக்குத் தெரியாதது, தொட்டு உணர முடியாதது, அது எங்கே உள்ளது என தெரியாது, அதன் அளவை அளவிய முடியாது, அது இருக்க இடம் தேவையில்லை.

இதெல்லாம் கடவுளைப் பற்றிய விளக்கம் மட்டுமல்ல மனதிற்கும்தான்!!! மனம் பற்றி மனிதன் எப்போது ஆரம்பித்தானோ தெரியாது ஆனால் இன்று வரை அவன் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இது ஆன்மீகரீதியாவும் சரி, அறிவியல்ரீதியாகவும் சரி! உலகில் புரியாத எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். ஆனால் முழுமையாக புரிந்துகொள்ள மிக கடினமான ஒன்று மனம்தான்! ஏனெனில் இங்கே மனதை பற்றி புரிந்துகொள்வது அதே மனம்தான்!

Friday, October 22, 2010

கனவுகள் 7 - நான்.............

“Dreams are like stars...you may never touch them, but if you follow them they will lead you to your destiny.”

17 வயது இளைஞன் ஒருவனின் கனவு.

நான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்போது என் நண்பர்களில் ஒருவன் தன் காதலியோடு பேசிக் கொண்டிருக்கிறான். நான் அவன் அருகே சென்று அவன் சட்டையை பிடித்து தள்ளி விடுகிறேன். ஒரு ஸ்டீல் ராடால் அவனை பயங்கரமாக அடிக்கின்றேன்.  நான் நிற்கும் தரையில் அவன் மூளை வெளியே வருகிறது. என்னைச் சுற்றியுள்ள அனைவரும் கைதட்டுகிறார்கள்.

உணர்ச்சி: மகிழ்ச்சி

ஆய்வு: இந்த கனவு நீங்கள் ஒரு சூழ்நிலையில் எப்படி செயல்படுகிறீர்கள் என கேட்கிறது. கனவில் நீங்கள் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுவது தெளிவாக தெரிகிறது. நீங்கள் ஏதேனும் சம்பவத்திற்கு அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டீர்களா?

Thursday, October 21, 2010

கனவுகள் 6 - கனவுகள் நினைவில்.....

Nothing happens unless first we dream.  - Carl Sandburg 

1815. நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளுக்கும் பிரஷ்யப் படைகளுக்கும் வாட்டர்லூ(தற்போது பெல்ஜியத்தில் உள்ளது) என்ற இடத்தில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது.  ஒரு நாள் இரவு நெப்போலியனுக்கு ஓர் கனவு வந்தது அதில் ஒரு கருப்பு பூனை அவரின் படைகளும் பிரஷ்ய படைகளும் என முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தது.

Monday, October 18, 2010

கனவுகள் 5 - கோட்பாடுகள்

"கனவுகள் என்பவை நம் பண்புகளை கூறும் உரைகல்." 
- Henry David Thoreau


சில பேருக்கு கனவுகளில் சுவாரசியம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் கேட்கலாம். நான் ஏன் கனவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டும்? எனக்கு கனவு ஞாபகம் இருப்பதே எப்போதாவதுதான்! ஞாபகம் இருப்பது கொஞ்சம்தான். அதுவும் வெறும் குப்பைதான்.”

Friday, October 15, 2010

கனவுகள் 4 - மனம் படிநிலைகள்

நாம் கனவை உண்மையென்று உணர்கிறோம் ஏனெனில் அது உண்மைதான்... ஆச்சரியம் என்னவெனில், நம் மூளை நாம் விழித்திருக்கும்போது, நாம் வாழ்கின்ற உலகத்தின் அனைத்து உணர்வுகளைப் போலவே, கனவிலும் எந்த வித புலன் உறுப்புகளின் உதவியின்றி உருவாக்குகிறது.
---William Dement

அமெரிக்க எழுத்தாளர், மார்க் ட்வைன், மற்றும் அவர் சகோதரர் ஹென்றி மிசிசிபி ஆற்றங்கரையில் ஆற்றுப்படகுகள் சம்பந்தமான வேலையில்

Thursday, October 14, 2010

கனவுகள் 3 - சில தகவல்கள்

நம் கனவை நம்மை தவிர வேறு ஒருவரால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. நம் ஒவ்வொரு கனவும் நிச்சயம் நம்மிடம் எதையோ சொல்கிறது. எல்லாக் கனவுகளும் கெடுதலை உணர்த்துவதாக நினைக்க வேண்டாம். கனவுகள் நமக்கு நன்மை செய்யவே ஏற்படுகின்றன. நமக்கு பயத்தை ஏற்படுத்தும் கனவுகளை கூட தெளிவாக புரிந்துகொண்ட பின், பயப்பட மாட்டோம்.

Wednesday, October 13, 2010

கனவுகள் 2 - முக்கியத்துவம்

கனவுகள் பற்றிய ஒரு பெரும் தொடரை எழுத ஆசை. பல தகவல்கள் சேர்த்து வைத்தேன். ஒரு பதிவு போட்டேன். மீண்டும் அதை தொடரலாம் என ஆரம்பித்துள்ளேன். பிடித்திருந்தால் சொல்லவும். இதன் முதல் பதிவு. கனவுகள் - அறிமுகம்
  ______________

கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன. பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள் கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன் கனவை பற்றி அறிவதால் என்ன பயன்?

Tuesday, September 7, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (9) - Animation, Visual Effects Softwares (ii)

AutoCAD Freestyle:
இது ஒரு வரையும் மென்பொருள். Microsoft Paint போல வரையும் மென்பொருள் என்றாலும் நீங்கள் இங்கே துல்லியமாகவும் எளிதகாவும் அழகாவும் எதையும் வரையலாம். மேலும் பிளான்கள். லேஅவுட்கள் போன்றவற்றை மிக எளிதாக துல்லியமாக வடிவமைக்கலாம். ட்ரையல் வெர்சன்: AutoCAD Freestyle

AutoCAD Raster Design:
இந்த மென்பொருள் scanned drawings, maps, aerial photos, satellite imagery, மற்றும் digital elevation models ஆகியவற்றின் raster வடிவங்களை உருவாக்க பயன்படுகிறது. இதன் ஆற்றல்மிக்க raster editing மற்றும் raster-to-vector conversion tool ஆகியவற்றால் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை எளிதில் எடிட் செய்யலாம். இது மற்ற ஆட்டோடெஸ்க் மென்பொருள்களுடன் இணைந்தும் செயல்படும். டோரண்ட் லிங்க்: AutoCAD Raster Design 2009 (348 MB)

Monday, September 6, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (8) - Animation, Visual Effects Softwares (i)

அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபக்ட்ஸ் சாஃப்ட்வேர்களை பற்றி இனிவரும் பதிவுகளில் எழுதுவேன். நன்றி.

AUTODESK

அனிமேஷன் துறையில் பல வேலைகளுக்கு Autodesk நிறுவனத்தின் மென்பொருள்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஊடகத்துறைகள் மற்றுமின்றி கட்டிட கலை, பொறியியல் துறைகள், போன்ற பலதுறைகளில் பொருட்களை 3டி முறையில் அனிமேஷன் செய்து காண்பிக்க பயன்படுகின்றன.

AutoCAD
AutoCAD மென்பொருள் 2D  மற்றும் 3D CAD டிசைன்களுக்கானது. இதன் மூலம் 2D மற்றும் 3D design மற்றும் drafting-களை செய்யலாம். அனிமேசன்களுக்கு அடிப்படையான வடிவத்தை அமைக்க இந்த மென்பொருள் பயன்படுகிறது.

Sunday, September 5, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (7) - Graphic suite, Paintshop, WordPerfect, VideoStudio, WinDVD/ Corel

கோரல் மென்பொருள்கள் ப்ரிண்ட் மீடியா துறையில் முக்கிய பங்கு வகிக்கும் மென்பொருள்களாகும். இன்று நாம் பார்க்கும் செய்தித்தாள், காலண்டர்கள், போஸ்டர்கள் போன்றவை இந்த மென்பொருள்களால் அமைக்கப்பட்டவையே. கோரல் நிறுவனம் பல பொருட்களை தயாரித்துள்ளது. நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆர்ச்சிவர் மென்பொருளான winzipஐ வடிவமைத்ததும் இந்நிறுவனமே.

Corel Graphics Suite:
இது CorelDRAW, PhotoPaint, மற்றும் Capture ஆகிய மூன்று மென்பொருள்களின் தொகுப்பாகும். CorelDRAW என்பது ஒரு வெக்டார் கிராபிக்ஸ் மென்பொருள் ஆகும். PhotoPaint என்பது bitmap graphics மென்பொருளாகும். இது ஃபோட்டோஷாப்பை போன்றது. Capture என்பது ஸ்கிரீனை சேவ் செய்ய பயன்படும் மென்பொருள் ஆகும்.

Friday, September 3, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (6) - Contribute, Flash Builder, Premiere, After Effects, Soundbooth, Encore/Adobe

Contribute
இது HTML வெப்சைட்களை எடிட் செய்யப் பயன்படும் மென்பொருள். எடிட் செய்ய மட்டுமின்றி authoring, reviewing, மற்றும் publishing ஆகியவற்றை செய்யவும் பயன்படுகிறது. இதன் In-browser editing சிறப்பான ஒன்று. பிரவுசரிலேயே வெப் பேஜை எடிட் செய்யலாம்.
Download: adobe contribute cs3 portable (20mb)