Sunday, October 10, 2010

மனம்+: தன்னம்பிக்கை

ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய பிரச்சினையை மற்றவரால் நிச்சயமாக முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. தலைவலியும் திருகுவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்! பிரச்சினையில் ஒருவர் இருக்கும்போது, மற்றவர் சொல்லும் சமாதான எந்த அளவிற்கு ஆறுதல் தரும் என்பது, பிரச்சினையின் வீரியம் மற்றும் ஆறுதல் சொல்லும் நபரை பொறுத்தது! ஆனால் அதிலிருந்து மீண்டு வருதல் என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. வாய்ப்புகள் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லையென்றால் யாராலும் பிரச்சினையிலிருந்து மீள்வது கடினம்தான்.


ஒரு உண்மைக் கதை. ஒரு இளைஞன். அவன் விருப்பப்பட்ட படிப்பு சில காரணங்களால் தடைபட்டது. அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அவனை வீட்டில் யாரும் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை, விரக்தி அதிகமானது. தற்கொலை எண்ணம் கூட வந்தது. ஆனால் அதற்கும் அவனிடத்தில் தைரியம் இல்லை. அவன் நிலை பார்த்து அவன் பெற்றோர் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள், ஊக்க்மளித்தார்கள். நாளடைவில் அவன் மனதில் இருந்த துளி தன்னம்பிக்கை விதை மரமாக வளர்ந்தது. தன் இலட்சியங்களை அடைந்து விடுவோம் என்று விடா நம்பிக்கையோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தன்னம்பிக்கை என்பது தன் மீது வைக்கும் நம்பிக்கை. தன் மீதும் தன்னை சுற்றியுள்ளவர் மீது நம்பிக்கையின்றி காட்வுள் நிறைவேற்றுவார் என சிலர் நம்புவார். அதுவும் தவறில்லை. நம்பிக்கை என்பது எரிபொருள் போன்றது அது இருக்கும் வரை நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்.


தன்னம்பிக்கை என்பது இரண்டு விஷயங்களை கொண்டுள்ளது. 1. சுய ஆற்றல் 2. சுய மதிப்பீடு. சுய ஆற்றல் என்பது நம்மிடமும் நம்மை போன்றவர்களிடமும் உள்ள திறமைகளை உணரும்போது, இலக்குகளை அடையும்போது பெறும் உணர்வு. இது பெறப்படும் வெற்றிகளை சார்ந்தது. ஒரு செயலில் வெற்றிகளை பெற்றால் அதை செய்ய முடியும், தோல்வியடைந்தால் செய்ய முடியாது என முடிவுக்கு வருகிறோம். சுய மதிப்பீடு என்பது உங்களை பற்றி நீங்கள் உணரும் உணர்வு. இது மற்றவர்களின் கருத்தையும் சார்ந்தது மற்றவர்களின் கருத்திலிருந்தும் நாம் நம்மை பற்றிய மதிப்பீட்டை செய்கிறோம். தன்னம்பிக்கையின்மை உங்கள் முழுமையான மதிப்பை நீங்கள் புரிந்து கொள்ளாததால் உருவாகிறது.

தன்னம்பிக்கையை வளர்த்தல்-சில வழிகள்:

1. உடைகள் ஒருவர் தன்னைப் பற்றி உணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் வெளித்தோற்றம் குறித்து உங்களை விட வேறு யாரும் அதிகம் கவலைப்பட போவதில்லை. நீங்கள் நன்றாக உடையணியாவிட்டால், அது உங்களை மற்றவரிடத்தில் நீங்கள் வெளிப்படுத்துவதில் மாற்றத்தை உண்டாக்கும். குளியல், முகச்சவரம், சுத்தமான உடை, நவீன நாகரீகத் தோற்றம் போன்றவை கூட காரணிகளாக இருக்கலாம். இதற்காக நீங்கள் உடையணிவதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் உடை உங்கள் மனநிலையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. உடல் வெளித்தோற்றம் போன்றே உடல் உள்தோற்றமும் தன்னம்பிக்கை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனது. குண்டான/ஒல்லியான சிலர் தன்னம்பிக்கையின்றி காணப்படுவதை கண்டிருக்கலாம். முடிந்தவரை உடலமைப்பை பேண முயற்சியுங்கள். மேலும் உங்கள் உடலமைப்பை மனதளவில் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் மற்றவர்களும் சமம் என எண்ணுங்கள்.

2. ஒருவரின் நடையை வைத்தே அவரின் மனநிலையை கண்டறியலாம். தன்னம்பிக்கை உடைய நபர்கள் விரைவாக நடப்பார்கள். அவசரமில்லை என்றாலும் அவர்களின் நடையில் ஒரு துள்ளல், வேகம் இருக்கும். தளர்வாக நடத்தல்/உட்காருதல், மந்தமான அசைவுகள் தன்னம்பிக்கை இல்லாமையை வெளிப்படுத்துகிறது. எப்போது நேராக நின்று/உட்கார்ந்து முகத்தை நேராக வைத்துக் கொண்டு கண்ணுக்கு கண் பார்த்து பேச/கவனிக்க வேண்டும். இது நேர்மறை விளைவுகளை உண்டாக்கும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது உடங்களில் சிலர் முன் வரிசையில் உட்கார தயங்குவார்கள், இது தன்னம்பிக்கை குறைபாட்டை காண்பிக்கிறது. முடிந்தவரை முன்னால் உட்காருங்கள். பல விவாதங்கள், பேச்சுக்கள், ஏன் சாதாரணமாக பொதுமக்கள் கூடி பேசுமிடத்தில் கூட சிலர் பேசாமல் அமைதியாக கேட்க மட்டும் செய்வார்கள். தான் ஏதாவது பேசினால் தன்னை குறைவாக மதிப்பிடலாம் என பயந்து பேசாமல் இருப்பார்கள். உங்கள் கருத்துக்கள் தவறோ சரியோ தைரியமாக பேசுங்கள். மேற்கண்ட அனைத்தும் நம் மனநிலையின் பெரும்காரணிகளாகும் இவற்றை பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

3. ஊக்கப்படுத்தும் கட்டுரைகளை படியுங்கள், பேச்சுக்களை கேளுங்கள். இது தன்னம்பிக்கை உண்டாக்கும் முக்கிய வழியாகும். உங்கள் பலங்கள் மற்றும் குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தும், ஒரு 30-60 நிமிட பேச்சை எழுதுங்கள். பிறகு இதை தன்னம்பிக்கை அதிகப்படுத்த வேண்டும் என நினைக்கும்போது, கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள்.  உங்கள் தேவைகளை பற்றி அதிகமாக யோசிக்கும்போது, அவை உங்களிடம் இல்லாததற்கான காரணங்களை மனம் உருவாக்கும். இது உங்களுக்குள் பலவீனங்களை உண்டாக்கும். இதனால் கடந்தகால வெற்றிகள், உங்கள் தனிப்பட்ட திறமைகள், அன்பான உறவுகள், நேர்மறையான நல்ல தருணங்களை நினைத்து பாருங்கள். இவை உங்கள் பலவீனங்களை நீக்கி வெற்றியை நோநோக்கி செல்ல உதவும்.

4. உங்களைப் பற்றி எதிர்மறையாக சிந்திப்பதற்கு பதிலாக, மற்றவர்களை பாராட்டும் பழக்கத்தை உண்டாக்குங்கள். மற்றவர்களை நீங்கள் பாராட்டும்போது, மறைமுகமாக உங்களையும் ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் பாராட்டு முழுமனதோடு வெளிப்பட வேண்டும். நாம் நம் சொந்த ஆசைகளைப் பற்றி அடிக்கடி சிந்திக்கிறோம். மற்றவர்களின் தேவையை பற்றி போதுமான அளவு சிந்திப்பதில்லை. நம்மை பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டு உலகிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திக்க ஆர்ம்பித்தால், நம் ஆசைகள் நிறைவேறவில்லையே என்ற கவலை மனதில் தோன்றாது. இது தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் அதிகப்படுத்தும்.

தன்னம்பிக்கையை வளர்த்தல் என்பது உடனடியாக செய்யக்கூடியது கிடையாது. நாளடைவில் வளர்ப்பதாகும். தன்னம்பிக்கை எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் அது எப்போதும் ஆணவமாக மாறக் கூடாது. உங்கள் தன்னம்பிக்கை மனதில் மட்டும் இருக்க வேண்டும். அது அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்பட்டால் ஆணவமாக மாறலாம்.

கடைசியாக என்னைப் பற்றி:
என்னால் சிறு வயதிலிருந்தே நடக்க முடியாது குழந்தைகள் போலத்தான் தவழ்ந்து செல்வேன். இந்நிலையில்தான் பள்ளி, கல்லூரிக்கு சென்று படித்தேன். நான்கு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தவழ்ந்து செல்வதும் தடைப்பட்டது. எப்போதும் இடுப்பில் வலி உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் அது அதிகமாகி படுத்த படுக்கையாகி விட்டேன். இந்த ஒரு வருடத்தில் நான் உட்கார்ந்திருந்த நிமிடங்கள் முழுதாக இரண்டு நாட்கள் கூட இருக்காது. ஆனால் இந்நிலையில்தான் வயிற்றின் மேல் லேப்டாப் வைத்துக் கொண்டு படுத்துக்கொண்டே என் குடும்பத்திற்கு வருமானமும் ஈட்டி தருகிறேன்; மூன்று மாதங்கள் முன் வலைப்பூ தொடங்கி இன்று இந்த நூறாவது பதிவையும் போட்டுள்ளேன். ஆரம்பத்தில் சொன்ன உண்மைக் கதையும் என்னைப்பற்றியதுதான். இதற்கு காரணம் என் பெற்றோர்கள் தந்த ஊக்கமும் என் தன்னம்பிக்கையும்தான். எதை இழந்தாலும் அதை மட்டும் இழக்கக் கூடாது.

இந்த வலைப்பூவை நாமும்  ஒன்று ஆரம்பிப்போம் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால் இன்று எனக்கு கிடைத்த நண்பர்கள், அவர்களின் ஊக்கங்கள்/பாராட்டுக்கள், அதன் மூலம் கிடைத்த தன்னம்பிக்கை அளவில்லாதது. என் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு கடமைபட்டுள்ளேன். நான் இறக்கும் தருவாயில் என்னால் இயன்றதை இந்த உலகிற்கு செய்தேன் என்ற மகிழ்ச்சியுடன் இறப்பேன். எனக்கு நம்பிக்கை அளித்த நல் உள்ளங்கள் அனைத்துக்கும் கோடானுகோடி நன்றிகள்!!!

116 comments:

 1. வாழ்த்துக்கள் எஸ் கே

  உங்கள் தன்னம்பிக்கைக்கு என் சல்யூட்

  ReplyDelete
 2. //அருண் பிரசாத் said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. உங்களின் பதிவுகளை தொடர்ந்து ரீடல் வழி படித்து வருபவன் நான். இது அனேகமாக முதல் பின்னூட்டமாக இருக்கும்.

  உங்களில் வழி மிகுந்த வாழ்க்கை+ செயல்பாடுகள் என்போன்றோருக்கு நிச்சயம் நிறைய நம்பிக்கை கொடுக்கிறது.

  வாழ்த்துக்கள் தோழா..

  விரைவில் இயல்பு நிலைக்கு வர வேண்டுகிறேன்.

  நன்றி

  தோழன்
  பாலா

  ReplyDelete
 4. ராயல் சல்யூட் நண்பரே!

  ReplyDelete
 5. //- யெஸ்.பாலபாரதி said..//
  நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும்!

  //விந்தைமனிதன் said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. மனசு கனத்தாலும் உங்கள் தனம்பிக்கை என்னை தூக்கி வைக்கிறது
  வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 7. //யாதவன் said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. நல்லதொரு உண்மைப் பதிவு நண்பரே
  நீங்கள் நலம் பெற இறைவனைப் பிராத்திட்கின்றேன் மற்றும் உங்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டிவளர்த்த உங்கள் பெற்றோருக்கு எனது நன்றியை கூறுங்கள்.

  பதிவுலகில் உங்கள் பதிவுகள் மென்மேலும் வெற்றி நடைபோட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. தங்களின் தன்னம்பிக்கை உலக மனிதருக்க ஒரு பெரும் எடுத்துக் காட்டு... இந்த பாழாய் போகும் உலகிற்காக இன்னம் பல காலம் நீங்கள் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.....

  ReplyDelete
 10. எஸ்.கே...வணக்கம்.உங்கள் பதிவுகளுக்கு அடிக்கடி வந்தாலும் பின்னூட்டம் போடக்கூடியமாதிரி எனக்கேற்ற பதிவுகள் காணவில்லை.

  இன்று அருமையாக விழுந்து கிடக்கும் ஒருவரைத் தூக்கிவிடும் ஒரு கைபோல உங்கள் பதிவு.என் அனுபவமும் கூட.முயற்சியும் நம்பிக்கையுமே மனிதனை மனிதனாக்குகிறது.மனம் நெகிழ்ந்துவிட்டேன் தோழரே.என்றாலும் உங்கள் முயற்சியையும் நம்பிக்கையையும் பாராட்டுகிறேன்.
  உங்கள் பெற்றவர்கள் பாதம் தொட்டு வணங்கிக்கொள்கிறேன்.கடவுள் அவர்கள்தான்.
  இன்னும் எழுதுங்கள்.பாரங்கள் குறையும்.இன்னும் மனமும் உடலும் சுகமாகும் !

  ReplyDelete
 11. உங்கள் பெற்றோருக்கு என் வணக்கங்கள் ,
  தன்னம்பிக்கையை தூண்டும் உங்கள் இடுகைகள் பெருக வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
 12. எஸ். கே. அருமை.

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான பதிவு s .k அரவர்களே .........
  உங்களுக்கு நான் இடும் முதல் பின்னூட்டம் இது .உங்கள் வலைத்தளத்தில் ஆனால் தினமும் பார்கிறேன் .நான் வலை பூ ஆரம்பத்தில் இருந்து உங்கள் follower .பிறர் பதிவுகளில் உங்களுக்கு நான் பின்னூட்டம் இட்டுயருகிறேன்.

  மேலும் வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் S .K

  ReplyDelete
 14. இந்த இடுகை எங்கள் தன்னம்பிக்கையை தூண்டுகிறது. உடலில் ஊனம் இருக்கலாம் மனதில்(எண்ணத்தில்) தான் ஊனம் இருக்க கூடாது என்று தெளிவுப்படுத்திய, உங்களின் உயர்ந்த சிந்தனைக்கும்,தன்னம்பிக்கைக்கும் ஒரு ராயல் சல்யூட் நண்பரே.(யானைக்கு தும்பிக்கை மனிதனுக்கு நம்பிக்கை).

  நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இன்னமும் நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்க்கு, நிறைய உள்ளது நண்பரே, உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கு எல்லாம்வல்ல இறைவன் எப்போதும் துணை இருப்பார். நண்பர்கள் நாங்களும் துணை இருப்போம் நண்பரே...

  ReplyDelete
 15. நன்றி நண்பா, என் நண்பன் ரெண்டு கை ரெண்டு கால் நல்லா இருந்தும், முதுநிலை கணினி பயன்பாட்டுவியல் படித்தும் சரியாக ஆங்கில அறிவு இல்லாத காரணத்தினால் அவன் படித்த துறையில் வேலையில் சேர்ந்து ஒரு வருடம் பின் அவன் நிராகரிக்க பட்டான் பின் மறுபடியும் அவனால் அவன் படித்த துறையில் வேலையில் சேர முடியவில்லை. என் நண்பனின் இயலாமையை நினைத்து பலநாள் வருதபட்டதுண்டு உங்கள் தன்னம்பிக்கை பக்கம் எனக்கு மட்டும் அல்ல அவனுக்கும் உதவியாக இருக்கும். உங்களிடம் இருந்து இன்னும் பல நல்ல பக்கக்களை எதிர்பார்கிரேன்...

  உங்கள் உடல் நிலை நலமடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

  ReplyDelete
 16. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

  தன்னம்பிக்கையை வளர்க்கும் உங்கள் அற்புதமான பதிவுக்கு பாராட்டுக்கள்!

  உங்களின் சொந்த வாழ்க்கையே தன்னம்பிக்கையின் உதாரணமாக அமைத்து கொண்டு விட்டதற்கு ஒரு ராயல் salute !!!

  ReplyDelete
 17. எஸ் .கே ... சத்தியமா படிச்சவுடனே ஒரு நெகிழ்வு வந்தத தடுக்க முடிலே. வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரில. உங்கள் அசத்தலான பதிவுகள் தொடரட்டும்.

  ReplyDelete
 18. //மகாதேவன்-V.K said...//
  மிக்க நன்றி!

  //ம.தி.சுதா said...//
  மிக்க நன்றி!

  //ஹேமா said...//
  தங்கள் பின்னூட்டத்திற்கு ஊக்கத்திற்கு நன்றி சகோதரி!

  //ரோகிணிசிவா said...//
  நன்றி சகோதரி!

  ReplyDelete
 19. //Gopi Ramamoorthy said...//
  நன்றிங்க!

  //இம்சைஅரசன் பாபு.. said...//
  நன்றி நண்பரே!

  //Thomas Ruban said...//
  வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கு நன்றி நண்பரே!

  //ராஜகோபால் said...//
  நன்றி! தங்கள் நண்பருக்கும் தன்னம்பிக்கை பெருகட்டும்!

  //Chitra said...//
  வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

  //இவன் சிவன் said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 20. ஒரு அருமையான மனிதரை சந்தித்த மகிழ்ச்சி..

  நன்றி தன்னம்பிக்கை ஊக்கத்திற்கு..

  எப்பவும் அந்தோணி நியாபகம் வரும்.. இப்ப நீங்களும்..

  ReplyDelete
 21. //மற்றவர் சொல்லும் சமாதான எந்த அளவிற்கு ஆறுதல் தரும் என்பது, பிரச்சினையின் வீரியம் மற்றும் ஆறுதல் சொல்லும் நபரை பொறுத்தது! //

  ஆறுதல் சொல்லும் நபரைப் பொறுத்தது என்பதும் உண்மையே ..!!

  ReplyDelete
 22. //முடிந்தவரை உடலமைப்பை பேண முயற்சியுங்கள். மேலும் உங்கள் உடலமைப்பை மனதளவில் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் மற்றவர்களும் சமம் என எண்ணுங்கள்.//

  இது உண்மைதாங்க ., நானே சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன் .. முகச்சவரம் செய்யாமல் இருக்கும் போது கண்ணாடியில் பார்க்கும்போது கொஞ்சம் தாழ்வு மனப்பானயாக எண்ணுவேன் .. நான் அழகாக இல்லையோ என்று கருதுவேன் .. உடை விசயங்களும் சில சமயங்களில் பாதிக்கின்றன ..

  ReplyDelete
 23. //ஆனால் இந்நிலையில்தான் வயிற்றின் மேல் லேப்டாப் வைத்துக் கொண்டு படுத்துக்கொண்டே என் குடும்பத்திற்கு வருமானமும் ஈட்டி தருகிறேன்; //

  எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலைங்க .. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  உங்களை என் நண்பர் என்று நினைக்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நீங்க தொடர்ந்து எழுதுங்க ..!! இதனைப் படிக்கும் எவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமையும். அன்புடன் செல்வா.

  ReplyDelete
 24. உங்கள் தன்னம்பிக்கைக்குத் தலைவணங்குகிறேன் நண்பரே

  ReplyDelete
 25. //ப.செல்வக்குமார் said...//
  மிக்க நன்றி நண்பா!

  //KVR said...//
  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 26. தன்னம்பிக்கையை வளர்க்கும் உங்கள் அற்புதமான பதிவுக்கு பாராட்டுக்கள்!
  உங்களை நினைக்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. நீங்க தொடர்ந்து எழுதுங்க ..!! இதனைப் படிக்கும் எவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமையும்.

  ReplyDelete
 27. //kalai said...//
  மிக்க நன்றி!

  ReplyDelete
 28. விழிப்புணர்வூட்டும் பதிவு வாழ்த்துக்கள் நண்பர் எஸ்கே.

  ReplyDelete
 29. //சசிகுமார் said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 30. எஸ்.கே = தன்னம்பிக்கை... நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். ;-)

  ReplyDelete
 31. //RVS said...//
  நன்றி சார்!

  ReplyDelete
 32. பின்னிட்டீங்க ! பதிவு அட்டகாசம் ! உங்களது நூறாவது பதிவுக்கு வழ்த்துகள்..

  இதேபோல், 200, 500 மற்றும் ஆயிரமாவது பதிவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !!

  நீங்க ஏன் சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிக்கக்கூடாது? இதை சீரியஸாக யோசித்துப்பார்க்கவும் (ஒருவேளை ஆல்ரெடி எழுதிருந்தீங்கன்னா, கேள்வி வாபஸ்).. :-)

  ReplyDelete
 33. //கருந்தேள் கண்ணாயிரம் said...//
  வாழ்த்துக்கு நன்றிங்க! சினிமா விமர்சனம்... இதுவரை யோசித்ததில்லை. பார்க்கலாம்!

  ReplyDelete
 34. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க!!!வாழ்த்துக்கள். your adobe tutorials are very simple to follow & good. keep up the good work!

  ReplyDelete
 35. //R.Kamal said...//
  மிக்க நன்றி சார்!

  ReplyDelete
 36. நண்பரே உங்கள் தன்னம்பிக்கை...
  பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும்..

  உங்கள் 100 வது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 37. //kokarakko said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 38. அன்பின் நண்பரே,
  தங்களின் தன்னம்பிக்கை மிக்க கட்டுரை எம்மை மெய்சிலிர்க்க வைத்தது..உங்களைப் போன்ற ஓர் தன்னம்பிக்கை மிக்க மனிதர் எமக்கு நண்பராக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மனம்+ ஆக இருந்தால் வாழ்க்கையில் இடர்ப் பாடுகளைக் களைந்து வெற்றிப் படிகளை எட்டிக் கொண்டே போகலாம் என நீங்களும்,உங்கள் எழுத்துகளும் மெய்ப்பிகின்றன.இன்னும் பல வெற்றி படிகள் உமக்காய் காத்திருக்கிறது எம் தோழா!!ஏறிக்கொண்டு போ!
  இன்னும் பல கோடிப் பதிவுகள் நீர் எழுத வாழ்த்துக்கள்..உம்மையும் உம் எழுத்தையும் என்றும் எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 39. //padaipali said...//
  நண்பரே தங்களின் ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 40. எஸ்.கே
  உங்கள் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம்.
  கால் உள்ள எங்களை போன்ற மனிதர்களை விட நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையால் உயர்ந்துள்ளீர்கள்.

  நீங்கள் இன்னும் மேன்மேலும் உயர்வீர்கள்

  ReplyDelete
 41. தன்னம்பிக்கை பற்றிய மிக நுணுக்கமான பதிவு.வாழ்த்துக்கள்:-)

  ReplyDelete
 42. இந்த பதிவு இன்றைய வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய மிக முக்கிய பதிவு... மனதில் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை விதை எல்லோருடைய எண்ணத்திலும் விதைக்கப்பட வேண்டும்.. உங்களின் இந்த நூறாவது பதிவு அன்றும் இன்றும் என்றும் வலைப்பதிவு கண்ட மிக சிறந்த பதிவாக விளங்கும்... என்றென்றும் வெற்றி தேவதை உங்கள் வீட்டுக்கதவை தட்ட வாழ்த்துக்கள்!

  நீங்கள் அனுமதித்தால் உங்களின் இந்த பதிவிற்கான இணைப்பினை எனது வலைப்பூவான தொழில்நுட்பத்தில் வெளியிடலாம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 43. ஏற்கனவே கொஞ்சமா கேள்வி பட்டேன்... ஆனா... மனதால் ஊனமின்றி இருக்கும் உங்களை, 'உங்களுக்கு ஊனமாமே?' என்று முட்டாள்தனமாக என்னால் கேட்க இயலாது... எஸ்.கே என்கிற ஆர்வமுகுந்த ஒரு மாணவருக்கு என் அன்பு வணக்கங்கள்...

  WELL DONE S.K :)

  ReplyDelete
 44. //சரவணக்குமார் said...//
  நன்றி நண்பரே! ஆனால் நான் உயர்ந்தவன் என நினைக்கவில்லை. தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

  //RNS said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 45. //thozhilnutpam said...//
  தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி! தங்கள் தளத்தில் தாராளமாக இணைப்பு கொடுக்கலாம்.

  //Sugumarje said...//
  தங்கள் அன்புக்கு நன்றி சார்! தாங்கள் சொல்வது போல ஆர்வமுள்ள மாணவன்தான்! வாழ்நாள் முழுதும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும்! மற்றவருக்கு பயன்பட வேண்டும்!

  ReplyDelete
 46. //நீங்க ஏன் சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிக்கக்கூடாது? இதை சீரியஸாக யோசித்துப்பார்க்கவும்//

  உங்க தன்னம்பிக்கையை குலைக்கிற கேள்வியாக நான் இதை கருதுகிறேன்... பயணப்பாதை மாற்றினால் நமக்கான ஊர் தெரியாது... S. K.

  கருந்தேள் கண்ணாயிரம்... விட்டுருங்கப்பா :)

  ReplyDelete
 47. Get the Wallpaper S.K. Free தான்...

  http://sugumarje.blogspot.com/2010/10/wallpapers-free-collection.html

  ReplyDelete
 48. அருமையான பதிவு எஸ்.கே.

  உங்களின் முதல் பதிவின் முதல் பின்னுட்டம் என்னுடையதுதான் என்பதில் பெருமையடைகிறேன்.

  ReplyDelete
 49. //Sugumarje said...///
  நன்றி சார்!

  //நாஞ்சில் பிரதாப் said...//
  ஆமாம் இந்த பிளாக் எனக்கு நிறைய தன்னம்பிக்கை அளித்துள்ளது. அதற்கு முதல் காரணம் நீங்கள்தான் பின்னுட்டம், வலைச்சர அறிமுகம் என எனக்கு ஊக்கம் கொடுத்தவர் நீங்கள்! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டுள்ளேன்!

  ReplyDelete
 50. நண்பா,... மனம் கனக்க செய்கின்றது...
  உங்களுக்கு என் வணக்கங்கள்......
  உங்களுள் இருக்கும் நம்பிக்கைக்கு வந்தனம்...

  ReplyDelete
 51. //ஆ.ஞானசேகரன் said...//
  நன்றிங்க!

  ReplyDelete
 52. vazthukkal S.K :) unmaiyile ithu thannambikkai uttum oru padhivu.. melum neengal sonnathil matravarkalukku nammal mudintha udaviyai pannum pothu namathu thannambigai uyarum..

  neengal melum pala vetri matrum saathanai padikka vazthukkal :)

  ungalidam enaku mukiyamaka pidithathu utanakkutan neengal ungalukku vandha pinnotathirku alikum pathil.. amazing :)

  ReplyDelete
 53. வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்

  ReplyDelete
 54. எஸ்.கே,

  நண்பரே, உங்கள் தளத்திற்கு வந்து நீண்ட நாட்களாகின்றன, நீங்கள் பெரும்பாலும் Computer குறித்தே வருவதால்.

  மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இதுபோல பொதுவான விஷயங்களையும் எழுதுங்களேன், ப்ளீஸ்...

  ReplyDelete
 55. நண்பரே, உங்களைப் பற்றிதக் கொஞ்சம் தெரிந்தாலும், இப்போதுதான் முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.

  சரவணனுடன் (கொழந்த) அதே கவிதையை உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

  If I can stop one heart from breaking,
  I shall not live in vain:
  If I can ease one life the aching,
  Or cool one pain,
  Or help one fainting robin
  Unto his nest again,
  I shall not live in vain.

  தொடர்ந்து எழுதுங்கள், புதுமையாக எழுதுங்கள். அது உங்கள் மனதையும், மூளையையும் Fressh-ஆக வைத்திருக்க உதவும். இனிமேல் தொடர்ந்து வருகிறேன்...

  ReplyDelete
 56. நெகிழச்செய்த அருமையான இடுகை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 57. //kanagu said...//
  தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!

  //நேசமித்ரன் said...//
  நன்றி சார்!

  ReplyDelete
 58. //சு.மோகன் said...//
  மிக்க நன்றி! தங்கள் கவிதைக்கு நன்றி!
  உண்மையில் நான் இந்த தளத்தை உளவியல்(மனம்) ரீதியான பதிவுகளை எழுதவே ஆரம்பித்தேன். கூடுதலாக தொழிற்நுட்ப பதிவுகள் எழுத ஆரம்பித்து பின் அதுவே அதிகமாகி விட்டது. ஆனாலும் இது போன்ற பதிவுகளை இனி அதிகமாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 59. //ஸாதிகா said...//
  மிக்க நன்றி!

  ReplyDelete
 60. உங்கள் 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்
  நானும் நேரமின்மை காரணமாக அவ்வளவா வருவதில்லை.

  //ஆனால் இந்நிலையில்தான் வயிற்றின் மேல் லேப்டாப் வைத்துக் கொண்டு படுத்துக்கொண்டே என் குடும்பத்திற்கு வருமானமும் ஈட்டி தருகிறேன்; //

  இதை படித்து விட்டு ரொம்ப கலக்கமா இருந்தது.

  அதிலும் விளக்கமான தன்னம்பிக்கை பதிவு , பகிர்வுக்கு நன்றி,
  ஆண்டவன் என்றும் உங்களுக்கு துணை இருப்பானாக.

  ReplyDelete
 61. அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 62. அற்புதமாக எழுதி இருக்கிறிர்கள். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 63. நண்பரே தொழில்நுட்பம் தன் வலை தளத்தில் சிறந்தப் பதிவாக, தங்களின் இந்தப் பதிவை லிங்க் கொடுத்திருக்கிறார்..மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது..நானும் என் வலைப்பக்கத்தில் இந்த இடுகை பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று எண்ணியிருந்தேன்..தாங்கள் விரும்பும் பட்சத்தில் பதிவிடுகிறேன்..அனுமதி தருவீரா??

  ReplyDelete
 64. // D.R.Ashok said...//
  நன்றிங்க!

  //Jaleela Kamal said...//
  மிக்க நன்றி மேடம்!

  //வள்ளுவன்வாசுகி said...//
  வருகைக்கு நன்றி!

  //ibza said...//
  நன்றிங்க!

  //தமிழ் உதயம் said...//
  மிகவும் நன்றி!

  //padaipali said...//
  நிச்சயம் போடலாம் நண்பரே! யார் வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை ஒரு வழிகாட்டும் பதிவாக பலர் ஏற்றுக் கொண்டதற்கே மிகவும் நன்றி!

  ReplyDelete
 65. நண்பா...
  google chatல இருந்து psych.suresh@gmail.comக்கு login பண்ணலாமா.....இப்பவே...

  ReplyDelete
 66. உங்கள் 100வது பதிவுக்கு என் வாழ்த்துகள்.
  நம்மில் பலருக்கு அன்றாட வாழ்க்கையில் கைத்தடி தேவைப்படுகிறது, கடவுள், பெற்றோர், ஆசிரியர், நண்பர், இப்படி பலபல வடிவங்களில் கைத்தடிகள் நாம் வீழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள... ஆனால் நம்மிடத்திலேயே இருக்கும் ஒரு கைத்தடி தன்னம்பிக்கை. அதை பலர் மறந்துவிடுகின்றனர். ஆனால் நீங்கள் நல்ல ஞாபகசக்தி கொண்டவர் என்பது உங்கள் கட்டுரையை பார்த்தபின் புரிந்துகொண்டேன். தன்னம்பிக்கை கொண்டவனுக்கு எல்லாமே சாதாரணம், ஆனால் அவர்கள் அசாதாரணமானவர்கள்.

  ReplyDelete
 67. //கொழந்த said... //
  நன்றி நண்பா!

  ReplyDelete
 68. //adhithakarikalan said... //
  உங்கள் பின்னூட்டமே வித்தியாசமாகவும் ஊக்கம் அளிக்கும்படியும் உள்ளது. மிகவும் நன்றி!

  ReplyDelete
 69. தன்னம்பிக்கை என்பதின் அர்த்தம் நீங்கள்.... வாழ்க்கையில் பிடிப்பின்றி வாழும் பலருக்கும் உங்களின் வாழ்க்கை ஒரு பாடம்...எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி. ஒவ்வொரு வார்த்தையும் யோசிக்க வைக்கிறது நண்பரே....

  குறுகிய காலத்தில் நூறாவது பதிவு...!! வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 70. உங்கள் தன்னம்பிக்கைக்கு என் பாராட்டுகள் எஸ். கே

  ReplyDelete
 71. thalaivaa,தலைவா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 72. சார்,உங்களுக்கு எனது பணிவான வாழ்த்துக்களும்,நன்றியும்.

  ReplyDelete
 73. //Kousalya said...//
  தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரி!

  //சௌந்தர் said...//
  மிக்க நன்றிங்க!

  //சி.பி.செந்தில்குமார் said...//
  நன்றிங்க! நன்றி!

  ReplyDelete
 74. உங்களின் நூறாவது பதிவிற்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
  உங்களின் தன்னம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யூட்!
  500 அல்ல, ஆயிரத்திற்கும் மேல் உங்களின் பதிவுகள் தொடருமளவு உங்களின் உடல் நிலை நல்ல விதமாக முன்னேற என் வாழ்த்துக்கள்!!
  வைத்தியத்திற்கும் அப்பாற்பட்ட சவால்களும் அற்புதங்களும் வாழ்க்கையில் நடப்பதுண்டு. உங்கள் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட அற்புதம் நிகழ என் இதயப்பூர்வமான பிரார்த்தனைகள்!!

  ReplyDelete
 75. ஒரு அருமையான மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி..
  உங்களின் நூறாவது பதிவிற்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
  "கடைசியாக என்னைப் பற்றி"
  படித்ததும் மனம் கனத்தது..... நீங்கள் மென் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.....

  ReplyDelete
 76. 100 வது பதிவிற்கு மனப் பூர்வமான வாழ்த்துகள்.
  மற்றவர்களை நீங்கள் பாராட்டும்போது, மறைமுகமாக உங்களையும் ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள் என்கிற உங்கள் வரி சத்தியமானது.

  ReplyDelete
 77. 100 வது பதிவிற்க்குஎனது வாழ்த்துக்கள் அண்ணே..லேட்டா வந்ததுக்கு ஸாரி

  ReplyDelete
 78. உங்கள் உடை உங்கள் மனநிலையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. உடல் வெளித்தோற்றம் போன்றே உடல் உள்தோற்றமும் தன்னம்பிக்கை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனது. குண்டான/ஒல்லியான சிலர் தன்னம்பிக்கையின்றி காணப்படுவதை கண்டிருக்கலாம்.//
  அருமையான வாசகம்

  ReplyDelete
 79. இரண்டு வருடங்களுக்கு முன் அது அதிகமாகி படுத்த படுக்கையாகி விட்டேன். இந்த ஒரு வருடத்தில் நான் உட்கார்ந்திருந்த நிமிடங்கள் முழுதாக இரண்டு நாட்கள் கூட இருக்காது. //
  என்னால் நம்ப முடிய வில்லை..மிக வேதனையாக இருக்கிறது..கடவுள் பூரண உடல் நலத்தை தர பிரார்த்திக்கிறேன்..உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு சல்யூட் சார்

  ReplyDelete
 80. //V.Radhakrishnan said...//
  நன்றிங்க!

  //மனோ சாமிநாதன் said...//
  தங்கள் வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி சார்!

  //பிரஷா said...//
  மிக்க நன்றி சகோதரி!

  //ரிஷபன் said...//
  தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

  //ஆர்.கே.சதீஷ்குமார் said...//
  மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 81. //என்னால் சிறு வயதிலிருந்தே நடக்க முடியாது குழந்தைகள் போலத்தான் தவழ்ந்து செல்வேன். இந்நிலையில்தான் பள்ளி, கல்லூரிக்கு சென்று படித்தேன். நான்கு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் தவழ்ந்து செல்வதும் தடைப்பட்டது. எப்போதும் இடுப்பில் வலி உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன் அது அதிகமாகி படுத்த படுக்கையாகி விட்டேன். //

  என்னால நம்பவே முடியல சார்... இவ்வளவு தன்னம்பிக்கையோட.. எப்பிடி? Amazing...

  உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 82. ஆங்.. மறந்துட்டேன்.. நூறாவது பதிவுக்கு ஸ்பெஷல் லட்டு...

  ReplyDelete
 83. //Abarajithan said...//
  தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க!

  ReplyDelete
 84. This comment has been removed by the author.

  ReplyDelete
 85. அப்பா............. நூறு பதிவுகளா? இனிதான் உங்கள் வலைப்பதிவை படிக்கத்துவங்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கைக்கும், தளராத முயற்சிக்கும் பாராட்டுக்கள். நானும் இருக்கேனே சோம்பேறி.........

  ReplyDelete
 86. //எம்.ஞானசேகரன் said...//
  நன்றிங்க! ஆனால் தாங்கள் அதிகம் பதிவு போடாததால் என்ன? மனம் நிறைவாக இருந்தால் அது போதுமே!

  ReplyDelete
 87. வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 88. //இளங்கோ said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 89. பாராட்டுகளும் வாழ்த்துகளும். மன திடமே வாழ்வின் வெற்றிக்கு ஒரு காரணம். மிகவும் மகிழ்வாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

  ReplyDelete
 90. anna..... suuper na... thodaranthu poradungal thannambikaiyudan....... all the best na.....

  ReplyDelete
 91. உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்களும் , வணக்கமும் நண்பரே!
  நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 92. வாவ்! நன்றாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே. இன்னும் இது போன்று எழுதிக் கொண்டே இருங்கள்.

  100வது பதிவிற்கு வாழ்த்துக்கள். :)

  ReplyDelete
 93. உங்கள் தனம்பிக்கைக்குஒரு சபாஷ்.மேலும் தொடருங்கள் உங்கள் சேவையை.

  ReplyDelete
 94. //V.Radhakrishnan said...//
  தங்கள் அன்புக்கு நன்றிகள்!

  //prabha said...//
  நன்றி சகோதரா!

  //அம்பிகா said...//
  மிக்க நன்றிங்க!

  //Ram said...//
  வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நன்பரே!

  //நிலாமதி said...//
  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 95. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்களை. தொடர்ந்து எழுதுங்கள். உலகை வெல்லுங்கள்

  - கதிர்கா

  ReplyDelete
 96. //கதிர்கா said...//
  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 97. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  தன்னம்பிக்கைக்கு ராயல் சல்யூட்..

  தன்னம்பிக்கை மனிதனுக்கு மிக முக்கியம் என்பதை இப்பதிவு தெளிவாக விளக்குறது . நல்லருள் கிடைக்கட்டும் ..

  ReplyDelete
 98. //அன்புடன் மலிக்கா said...//
  தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 99. // இந்நிலையில்தான் வயிற்றின் மேல் லேப்டாப் வைத்துக் கொண்டு படுத்துக்கொண்டே என் குடும்பத்திற்கு வருமானமும் ஈட்டி தருகிறேன்; //

  என் கண்களில் நீர் வரவழவழைத்தன. உங்களின் தன் நம்பிக்கை வியபடைய வைத்தது.
  வாழ்க உங்கள் மனதிடம். அதுதான் நம்மிடம் இருக்க வேண்டுவது வேறொன்றும் இல்லை. அருமையான பகிர்வு . நன்றி !

  ReplyDelete
 100. எஸ்.கே,
  உங்க‌ளின் பின்னோட்ட‌ங்க‌ளை ப‌ல‌ர‌து ப‌திவுக‌ளில் பார்த்திருக்கிறேன், ஆனால் உங்க‌ள் வ‌லைக்கு வ‌ந்த‌தில்லை. இப்போது கூட‌, இந்த‌ப் ப‌திவினை ப‌டிக்க‌ச் சொல்லி இணைத்திருந்தார்க‌ள். நானும் ப‌திவ‌ரில்லா ந‌ண்ப‌ர்க‌ளுக்கு, உன்ஹ்க‌ள் சுட்டியை மின்ன‌ஞ்ச‌ல் செய்திருக்கிறேன். அருமையான‌ சுய‌ தெளிவு ப‌திவு. மீண்டும் ப‌திவில் ச‌ந்திக்கிறேன்.

  ReplyDelete
 101. Valzthukal Friend, unga katuraiya padicha apuram pudhu urchagam vandhuruku charge erina mobile battery madhiri, thanambikaiya valathuka idhu mari neraiya katurai elludhanum nu ketukuren....

  ReplyDelete
 102. //கக்கு - மாணிக்கம் said...//
  மிக்க நன்றி சார்!

  //vasan said...//
  மிக்க நன்றிங்க!

  //anu said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 103. தாமதமாக வந்தாலும் என் தரமான வாழ்த்துகள்.

  ரொம்ப மகிழ்ச்சியாய் உணர்கின்றேன்.

  ReplyDelete
 104. //ஜோதிஜி said... //
  மிக்க நன்றி!

  ReplyDelete
 105. உங்களின் சொந்த வாழ்க்கையே தன்னம்பிக்கையின் உதாரணமாக அமைத்து கொண்டு விட்டதற்கு ஒரு ராயல் சல்யூட். உங்கள் முயற்சியையும் நம்பிக்கையையும் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 106. வலைச்சரம் மூலமாக அறிமுகம் கிடைத்தது தன்னம்பிக்கைக்கு ஊனமில்லை தன்னம்பிக்கை இல்லாதவன் தான் ஊனமாகிறான்....வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 107. //dk said...//
  ரொம்ப நன்றிங்க!

  //கிளியனூர் இஸ்மத் said...//
  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 108. மதிப்பிற்குரிய எஸ்.கே., ராயல் சல்யூட். எல்லாப் பதிவுகளையும் பின் தொடரும் தங்களுக்கு இந் நிலைமையா. நலம் பெற வேண்டுகிறேன்.

  ReplyDelete
 109. தன்னம்பிக்கையின் எடுத்துகாட்டு நீங்கள். நன்றி

  ReplyDelete
 110. வாழ்த்துக்கள் .. வாழ்க வளமுடன்

  ReplyDelete