ஆனால் Motion Guideல் நாம் ஒரு பாதையை வரைந்து விடுவோம் அந்த பாதையின் வழியே நம் பொருள் தானாகச் செல்லும். அவ்வளவுதான். அந்த எபஃக்டை பார்ப்போம்.
முதலில் பேக்ரவுண்ட்.
பிறகு நீங்கள் நகரவைக்க வேண்டிய படத்தை கொண்டு வரவும். நான் இங்கே 100 பிரேம்கள் எடுத்துக் கொண்டுள்ளேன்..
இப்போது படத்தின் லேயரை ரைட் கிளிக் செய்து Add Motion Guide என்பதை கிளிக் செய்யவும் இப்போது அந்த லேயருக்கு மேல் புதிய லேயர் உண்டாகியிருக்கும்.
அந்த Guide லேயரில் நீங்கள் கார்(உங்கள் படம்) எப்படி செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த பாதையை வரையுங்கள். இதற்கு பென்சில் டூலை


இப்போது மற்ற லேயர்களின் 100வது பிரேமில் ரைட் கிளிக் செய்து Insert frame என்பதை கிளிக் செய்யவும். இல்லாவிட்டால் பேக்ரவுண்டும் கைடு லேயரும் தெரியாது.
இப்போது கார் உள்ள லேயரின் முதல் பிரேமில் கிளிக் செய்யவும். பிறகு காரை கிளிக் செய்தால் அதன் நடுவில் ஒரு குமிழ் தோன்றும் இப்போது காரை நகர்த்தி அந்த குமிழ் அந்த பாதையில் சரியாக இருக்குமாறு செய்யவும்.
பிறகு கார் லேயரின் 100வது பிரேமில் கிளிக் செய்து ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு பாதையின் கடைசி முனையில் காரை வைக்கவும் (அந்த குமிழ் சரியாக பாதையிலேயே இருக்க வேண்டும்).
கீபிரேமுக்கு இடையில் ரைட் கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது control+Enter அழுத்தி பார்த்தால் மூவி இப்படி இருக்கும்.
மிகவும் அருமை...
ReplyDeleteதெரியாத தகவல்.. கற்றுக்கொண்டேன்....
நன்றி...
//வெறும்பய said..//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி!
ஹைய்யா..இத் சூப்பர்
ReplyDelete