முதலில் ஒரு வடிவத்தை வரைந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு நிறத்தை அளிக்கவும்.
பிறகு அதை செலக்ட் செய்துவிட்டு, வலது பக்க மூலையிலுள்ள color பேனலில் type என்பதில் linear அல்லது Radial என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்போது பேனல் இப்படி இருக்கும். உங்கள் வடிவத்தின் நிறமும் மாறியிருக்கும்.
கவனிக்க நான் இங்கே உள்ளே fill colorக்கு தான் கிரேடியண்ட் தருகிறேன்.
உங்களுக்கு தேவையான கிரேடியன் கலர்களை அளிக்கவும். புதிய நிறங்களை சேர்க்க நடுவில் எங்காவது கிளிக் செய்தால் போதும்.
கிரேடியண்ட் மேப் டூல்

*******************************************
பொதுவாக வடிவங்களுக்கு கிரேடியண்ட் கொடுப்பது போல எழுத்துக்களுக்கு தர முடியாது. நாம் இங்கே எழுத்துக்களுக்கு கிரேடியன் அளிக்கும் முறையை பார்ப்போம். முதலில் ஒரு வடிவத்தை வரைந்து அதற்கு கிரேடியண்ட் அளிக்கவும்.
பிறகு புதிய லேயரை உருவாக்கி உங்களுக்கு தேவையான எழுத்தை எழுதவும்.
வடிவத்தின் அளவை எழுத்திற்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளவும்.
எழுத்து லேயரை ரைட்கிளிக் செய்து Mask என்பதை கிளிக் செய்தால் போதும்.
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO:
No comments:
Post a Comment